இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காட்சிப்பிழைகள்

படம்
காட்சிப்பிழைகள் -  கே இனியவன் காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்)  காதல்  ஒரு மந்திர கோல் .....  இரண்டு இதயங்களை ....  ஒன்றாக்கி விடும் ....!!!  நெற்றியில் ...  குங்கும பொட்டு.....?  அப்பாடா - சாமி ....  கும்பிட்டு வருகிறாள் ....!!!  தேவனிடம் ....  பாவ மன்னிப்புக்கேட்கிறாள் ....  என்னிடமும் கேட்பாள் .....!!!  ^^^  கனவு  நிஜத்தில் நிறைவேறாத ...  ஆசைகளை நிறைவேற்றும் ....  நீர்க்குமிழி .....!!!  திடுக்கிட்டு எழுந்தாள் ....  தாலியை கண்ணில் வணங்கி...  என்னை பார்த்தாள் ....!!!  இன்னும்  சற்று தூங்கியிருந்தால் ....  சொர்கத்தை.........  பார்த்திருப்பேன்....!!!  ^^^  நீ என்னை ....  காதலிக்கும் வரை ...  உதடு அசைவெல்லாம் ...  என் பெயர் தான் ....!!!  அவள்  தந்த புத்தகத்துக்குள் ......  மடித்த காகித துண்டு ....  இன்ப அதிர்ச்சி ....  படித்துப்பார்த்தேன் ...  அட வெறும்  பாட சிறு குறிப்புகள் ....!!!  உன் அருகில் ....  என் உருவ அளவில் ....  எவர் வந்தாலும் ...  நெஞ்சு படபடக்குது ....!!!  ^^^  என் வீட்டில் -நீ  உன் வீட்டில் - நான்  இன்பமாய் வாழ்கிறோம்  நம் பெற்றோர் ....  திருமணத்

கவி நாட்டியரசர் - கஸல் - 930

மின் துண்டிகபட்டபின் ... மின் குமிழ் எரியும்..... காத்துகொண்டு இருக்கும் .... காதலன் நான் ....!!! மூச்சாக காதல் செய் ... மூச்சு போக காதல் செய் .... காதலின் செயலே அதுதான் ....!!! உன்னை மறக்க மறதியின் ... உச்ச இடத்துக்கு செல்கிறேன் .... தயவு செய்து அந்த இடத்தை .... நீ தான் காட்டி விடு ....!!! ^ கவி நாட்டியரசர் கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 930

கவிப்புயல் இனியவன் - கஸல் - 929

உலகில் எல்லோரும் .... பிச்சைக்காரர்தான் ..... காதலரே அதிகம் ....!!! நீ அதிஷ்ரத்தின் ராணி நான் துர்அதிஷ்ரத்தின் ராஜா காதல் ராஜா ராணி .... விளையாட்டு .....!!! உன் நினைவுகளின் .... தருகைக்காக .... நீர்க்குமிழிகளை .... பரிசாய் தருகிறேன் ....!!! ^ கவி நாட்டியரசர் கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 929

கவி நாட்டியரசர் - கஸல் - 928

உன் காதல் மறுப்பை .... பார்த்து நான் மட்டும் .... அழவில்லை - தோழியும் .... கண்ணீர் வடிக்கிறாள் ....!!! என்னில் மறைந்திருந்த .... காதலை உன்னில் .... கண்டுகொண்டேன்.....!!! என்னை.....  கருவறையில் .... சுமந்த தாயையும் ....! இதயத்தில் .... சுமந்த உன்னையும் .....! கல்லறைவரை சுமப்பது .... காதலின் சுமைகள் ....!!! ^ கவி நாட்டியரசர்  கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 928

கவி நாட்டியரசர் - கஸல் - 927

நீ அழகுதான் ... எனக்கு வேண்டாம் .... முடிந்தால் காதல் -தா ....!!! கடித்து துப்பிய நகம் நான் .... சந்தோஷ படாதே .... மீண்டும் வளர்வேன் ....!!! ஏன் தத்தளிக்கிறாய்...? துடுப்பு நான் இருக்கிறேன் ... உன்னை காப்பாற்றுவேன் ...!!! ^ கவி நாட்டியரசர் கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் தொடர் பதிவு கஸல் - 927

கவி நாட்டியரசர் கஸல் - 926

நீ எனக்காகவே பிறந்தவள் .... நான் உனக்காக இறக்கிறேன் ....!!! உலகம் ஒரு வட்டம் .... நீ பிரிந்து சென்றாலும் ... என்னிடம் வருவாய் ....!!! எத்தனை காலம் கடிகாரம் முள் போல் ... சுழண்டு கொண்டே... இருப்பது ....!!! ^ கவி நாட்டியரசர் கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் தொடர் பதிவு கஸல் - 926

கவி நாட்டியரசர் கஸல் - 925

நினைத்துக்கொண்டே .... இருக்க இனிக்கும் காதல் ... உன்னை நினைத்ததும் .... கண்ணீரும் இனிக்கிறது ....!!! நிலாவில் பேசுவது .... காதலுக்கு அழகு ... எதற்காக நண்பகலில் .... பேச ஆசைப்படுகிறாய் ....? வானமும் பூமியும் .... என்று இணைகிறதோ ... அன்று நீயும் நானும் ... நிச்சயம் சேர்வோம் ....!!! ^  கவி நாட்டியரசர்  கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்  தொடர் பதிவு கஸல் - 925

கவிப்புயல் இனியவன் கஸல் - 924

காதல் விடி வெள்ளி .... அருகில் மின்மினிகளை ... இணைத்து பிரகாசமாய் .... இருக்கிறது ....!!! உன் இதய சாவியை ... தந்துவிடு -இனியும் ... என்னால் தாங்க முடியாது ....!!! நீ காதல் ஜுரம் .... தொற்றிக்கொண்டே ... இருக்கிறாய் ... தொல்லை கொடுத்து ... கொண்டே இருக்கிறாய்....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 924

கவிப்புயல் இனியவன் கஸல் - 923

இணையாத .... நம் காதல் .... எங்கிருந்து ,,,,, அழுதுகொண்டிருக்கும் .....? இறைவனையும் .... காதலையும் .... அழுதுதான் பெறவேண்டும் .... வேறு வழியில்லை ....!!! தன் வலிமையை .... பார்க்கமுடியாத ... குதிரையின் கடிவாளம் .... போல் நீயும் காதலை .... பார்க்கவில்லை ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 923

கவிப்புயல் இனியவன் கஸல் - 922

வா  நிம்பதியை தொலைத்து ... காதல் வழியே போவோம் ...!!! பாவம் காதல் ....!!! காதல் இல்லாத இரண்டு .... இதயத்துக்கு நடுவில் ... தத்தளிக்கிறது ....!!! கண்ணீரை .... என் கண்ண்கூட .... விரும்ப்பவில்லை .... வழிந்தோடுகிறது ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 922

கவிப்புயல் இனியவன் கஸல் - 921

இதய தீபத்தை .... அணைத்து விட்டாய் ... மீதி எண்ணையில் .... கசியும் வரிகள் தான் ... என் கவிதைகள் ....!!! இதுவரை  பூக்களின் மேல் .... நடந்து வந்தவன் .... முற்களின் மேல் ..... நடக்கப்போகிறேன் ....!!! நீ  என்னை விட்டு ..... போகப்போகிறாய் ..... என்பதை அறிந்து .... இதயம் அழத்தொடங்கி.... விட்டது .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 921

கஸல் - 920

வானவில்லைபோல் .... காதல் அழகாயிருந்தது ,,,, எப்படி வில் உடைந்தது ,,,? உன் முக அழகை விட .... உன் காதல் அழகு .... பிறப்பின் புனிதத்தை ... பெற்று விட்டாய் ...!!! சோதிடமும் காதலும் .... ஒன்று தான் புரிந்துகொள் .... ஒருவனை கொஞ்சம் கொஞ்சமாய் .... கொல்லும்....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 920

கஸல் - 919

என்று ஆதாம் ஏவாள் ... தோன்றினார்களோ ... அன்றே காதலும் .... ஏவல் ஆகிவிட்டது ...!!! காதலிலும் ... பாகபிரிவினை ... உடல் என்னிடம் ... உயிர் உன்னிடம் .....!!! பூக்களின் காதல் தோல்வி பனித்துளி ,,,, மேகத்தில் காதல் தோல்வி மழைதுளி ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 919

கஸல் - 918

ஜென்ம பாவத்துக்கு .... பரிகாரமாய் நீ காதலாய் வந்தாய் ....!!! ஏன் முகம் திருப்புகிறாய்... தவறு மனதை உறுத்துதா ..? உனக்கு அனுப்பிய ... காதல் கடிதங்கள் .... திரும்பி எனக்கே வருகிறது .... முகவரியை மாற்றி விட்டாயா ...? + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 918

கஸல் - 917

பட்டாம் பூச்சியாய் ... பறந்த என்னை ... விட்டில் பூச்சியாய் ... கருக்கி விட்டாய் ....!!! கண்ணீர் கடலைவிட .... சோகமானது .... உவர்ப்பதில் இரண்டும் ... ஒன்றுதான் ...!!! நான் மூச்சுவிடுவதால் .... நீ வாழுகிறாய் ..... போதும் அது காதல் ... இல்லாவிட்டாலும் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 917

கஸல் - 916

உன்னை காதலித்து பஞ்சு மெத்தையில் ... உறங்காமல் முள் மெத்தையில் .... உறங்குகிறேன் ....!!! நினைவுகள் ... நீர்குமிழியை இருக்கலாம் குங்கும சிமிழாய் இருக்கலாம் சோகத்தின் பாதையில் .... வருகிறேன் நீயும் நிச்சயம் வருவாய் என்ற நம்பிக்கையுடன் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 916

கஸல் - 915

காதலில் ஏற்ற இறக்கம் .... நீ அமர் முடுகளில் .... நான் ஆர்முடுகளில் ....!!! என் ..... தலையெழுத்தை .... நீ காதல் ரேகையால் ... வரைந்து விட்டாய் ....!!! எப்போது கண்ணீர் விட்டேன் ....? காதலுக்கு தண்ணீர் ... தெளித்தல்லவா விட்டேன் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 915

கஸல் - 914

காதலுக்காக ... பூக்கப்பாடதமலர் -நீ  வாடிவிழுந்த மலர் -நான் ...!!! உன் புருவம் .... உனக்கு வில் ... எனக்கு அம்பு ....!!! உன்னையும் .... மரணத்தையும் ... ஒன்றாக காதலிக்கிறேன் .... நிச்சயம் முடிவு உண்டு ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு  கஸல் - 914

கஸல் - 913

நீ  பார்த்த போதுதான் ... ஆணழகனானேன் ....!!! எல்லோரும்  ஒருவகையில் .... பிச்சைகாரர்தான் .... நான் காதலில் - நீ  அழகில் .....!!! உன் .... பேச்சு வல்லினம் ... எனக்கு மெல்லினம் ... காதலுக்கு இடையினம் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு  கஸல் - 913

கஸல் - 912

கவிதை .... உனக்கு வரிகள் ... எனக்கு நீ தந்த .... காயங்கள் .....!!! அரைகுறையாய் .... இருக்கும் காதல் இதயத்தை .... காதல் இதயமாக்குவோம் ... வருகிறாயா ...? உன்  மின்காந்த கண்ணில்.... தப்புவதற்காக -உன்  கண்ணுக்குள் நீராய் .... இருக்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு  கஸல் - 912

கஸல் - 911

காதலில் .... அவளில் நனைவதற்காக .... பனித்துளியில் நனைந்து ..... பார்கிறேன் ....!!! ஒவ்வொரு உயிரினமும் .... தன்னை பெருக்க .... என்னைபோல் காதலுக்கு .... ஏங்குகின்றன ....!!! ஒவ்வொரு குழந்தையும்  காதலின் அழகை காட்டும் ... கண்ணாடிகள் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 911

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் -   கவியருவி ம. ரமேஷ் கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கஸீதா  கவிதைக்கு உருது அளித்திருக்கும் கொடை - கஜல் வடிவமாகும். கி.மு. பத்தாம் நூற்றாண்டில் அரேபியாவில் புகழ் பெற்ற வடிவமான கஸீதாவிலிருந்து பிறகு வார்த்தெடுக்கப்பட்டது தான் கஜல் ஆகும். ‘கஸீதா’ என்றால் ‘ஒரு குறிக்கோளை நோக்குதல்’ என்று பொருள் படும். இச்சொல் ‘கஸத’ என்னும் மூலத்திலிருந்து பிறந்ததாகும். இது ஒரு நீளமான கவிதையைக் குறிக்க அரபிகளால் பயன்படுத்தப்பட்டது. முதன் முதலாக அரபியில் கஸீதா எழுதியவர் பாஸீ சண்டையில் கலந்து கொண்ட, தக்லீப் குழுவைச் சார்ந்த முஹல் ஹில் என்று கூறப்படுகிறது. பின்னர், கஸீதா எழுதும் முறை துருக்கியிலும், ஃபார்சியிலும் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஒரு கவிஞரின் குலத்தைப் புகழவும், அவருடைய எதிரிகளை இகழவுமான கவிதைகளுக்கு இப்பெயர்இருந்து வந்தது. பின்னர், அன்பளிப்பை மனத்திற் கொண்டு ஒரு கவிஞர் ஒரு செல்வரையோ, அவரின் குலத்தையோ புகழும் நீண்ட பாக்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது”1 என்பார் எம்.ஆர்.எம். கஸீதாவின் தன்மைகள் கஸீதாவின் கண்ணிகள் சில வேளை நூற்றுக்கும் மேற்பட்டு அமைவதுண்டு. கஸீதாவின் தன்மைகள் குறி

கே இனியவன் - கஸல் 110

பூவைப்போல் காதலும் .... போராடி பூக்கும் ... ஒரு நொடியில் கசங்கும் .....!!! உன்னைப்பற்றி ... கவிதை எழுதுவதென்றால் ... கண்ணீர் மையாகவும் .... வலிகள் எழுத்து கருவியாகவும் .... இருக்கும் ....!!! பூத்திருந்த காதல் .... உத்திர தொடங்கிவிட்டது .... உதிர்ந்திருந்த கனவு ... தளிர் விடுகிறது ....!!! + கே இனியவன் - கஸல் 110

கே இனியவன் - கஸல் 109

காற்றில் ஆடும்  தீபம் போல் ஆனேன் .... நீ  சொல்லும் சொல்லால் ...!!! நினைக்கவும் ... மறக்கவும் .... பழகிய இதயத்துக்கு .... நன்றி ....!!! தனிமையில் அழுதேன்,, உறவுகள் இல்லாமல் அல்ல.... காதல் இல்லாமல் ...!!! + கே இனியவன் - கஸல் 109

கே இனியவன் - கஸல் 108

காதலியாக ..... இருக்காவிட்டாலும் ..... காதலாக இருந்துவிடு .... அப்போதுதான் -உனக்காக  ஏங்கிக்கொண்டிருப்பேன் ...!!! கனவு ஒரு சிறகு நினைவு ஒரு சிறகு பறக்கிறேன் நடுவானில் தொலைந்து போவதற்கு....!!! கண்ணே நீ கனவுகளின் ராணி நினைவுகளின் மகா ராணி காதலில் நீ யார் ....? + கே இனியவன் - கஸல் 108

கே இனியவன் - கஸல் 107

நீ  தரும் வேதனைகள்... நீ தருவதில்லை ..... நீ தரும் இன்பம் ... நீ தருவதில்லை .... எல்லாம் காதல் தரும் ....!!! என்னோடு நீ இருக்கும் போது நான் இருப்பதில்லை என் இதயத்தில் கண் உள்ளது நீ வந்ததும் கண்ணீர் விடுகிறது...!!! + கே இனியவன் - கஸல் 107

கே இனியவன் - கஸல் 106

நான்  பின்னும் வலை .. கண் மீனுக்காக .. இல்லை . கண்ணீருக்காக....!!! நீ  விட்டுவிட்டு போனால் தோல்வியை உனக்கு முன்பே விரும்பிவிட்டேன் நான் வென்றும் விட்டேன்....!!! இரவு நட்சத்திரம் போல் உன் நினைவுகளும் மின்னுகின்றன..... விடிந்தபின் எல்லாம் மாயம் ....!!! + கே இனியவன் - கஸல் 106

கஸல் - 910

உன் கனவு வலைக்குள் ... சிக்கி தவிக்கிறேன் ... என்னை மீட்டுவிடு ....!!! பார்க்கும் இடமெல்லாம் .... பாவையாக இருந்தாய் .... எப்படி இப்போ ...? பாவியாக  மாறினாய் ...? என் இதயம் இருண்டு  .... பலகாலம் என்றாலும் .... இதய நரம்பில் உன் கீதம் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 910

கஸல் - 909

இறைவனை தரிசித்து .... நாட்களாகிவிட்டது .... உன் தரிசனம் .... கிடைத்ததிலிருந்து ....!!! பகலெல்லாம் இரவாகி ... உன்னையே கனவாக்கி .... வாழ்ந்த எனக்கேன் .... கண்ணெல்லாம் .... கண்நீராக்கினாய்...? நீ எனக்காக ... பிறந்த தேவதை .... காதலையும் தருகிறாய் .... கவலையும் தருகிறாய் .... கவிதையும் தருகிறாய் .... வாழ்கை எப்போது தருவாய் ...? உன்னை மறந்து வாழ .... மறந்துபோய் உன் வீட்டுக்கு ... வந்துவிட்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 909

கஸல் - 908

தென்றல் காற்று .... தோளில் படும்போது .... உன் நினைவுகள் ..... மெல்ல சுடுகிறது ...!!! மூச்சால் அடைத்து ... காதலை பாதுகாத்தேன் ... முள் கம்பியால் .... பாதுகாக்க ஏன்...? வழிவகுத்தாய்....? தவமிருந்து வரம் பெற்றேன் ..... காதலி நீ கிடைத்தாய் ... என்ன சாபமோ ...? நிலைக்கவில்லை ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 908

கஸல் - 907

என்னை கொடுத்து ... உன்னை பெறுவது ... காதல் .....!!! மலர் செடியில் .... இருக்கும் போதுஅழகு ... நீ என்னோடு காதலில் .... இருந்தாலே அழகு ....!!! காதல் கண்ணோடு.... விளையாடி ... காற்றோடு கலந்து  மூச்சோடு முடிகிறது ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 907

கே இனியவன் - கஸல் 105

தாமரை மலர்வதை .. பார் -மலருக்குள் மலர்வு ... ஒருபகுதி மலராததுபோல் ... நீயும் மௌனமாக இருக்கிறாய் ..!!! உன் காதல் சுமையால் நான் வண்டிக்குள் சிக்கிய தவளையானேன் ..!!! நீ வெளியில் வரும்போது மட்டும் காதல் உடை போட்டுக்கொண்டு வருகிறாய் ....!!! + கே இனியவன் - கஸல் 105

கஸல் - 906

உன்னோடு  வாழ ஆசைப்பட்டேன் .... உன்னோடுடனா...? வாழப்போகிறேன் .... என்றாகிவிட்டாயே ...!!! உன்னை காதலித்தேன் .... காதலோடு இருக்கிறேன் .... காதலியை காணவில்லை ....!!! மறதியை மறந்திடலாம் .... மறந்துகூட உன்னை .... மறக்க முடியவில்லை ....!!!  + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 906