இடுகைகள்

அக்டோபர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கஸல் - 880

உன் வெட்கம் என்னை .... தலை குனிய வைக்கிறது .... உன் பார்வை என்னை .... மனிதனாக்கியது....!!! என் காதல் மீது - நீ ... ஏறிநின்று குதிக்க ஆசைப்படுவதேன் ...? காதலில் .... வலி -ராகம் .. கண்ணீர் - மது .... பிரிவு - வாழ்கை ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 880

கஸல் - 879

எட்ட முடியாத காதலர் நாம் ..... சூரியனும் சந்திரனாய் ... வானமும் நிலமுமாய் ...!!! காதலை விதைத்தேன் ... வதையாகும்  உணர்ந்தேன் ... காதல் ஆழ்கடல் -நீ துறைமுகம் ....!!! நான் வெறும் நெருப்பு ... நீயே வெப்பம் ... நீயே ஒளி.... நீயே கரி .... நீ தணல் ..... அணைந்து விடாதே ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 879

கஸல் - 878

வானவில்லில் ஏழுநிறம் .... வானத்து அழகியே உனக்கும் ... வானவில் குணமோ ....? வா என்கிறாய்  போ என்கிறாய் ....? விட்டில் பூச்சியை .... விளக்கம் காட்டினேன் .... விதி எனக்கும் சரியானது .... விதி மதி இரண்டும் இழப்பாய் .... காதலித்துப்பார் ....!!! வீறாப்புடன் .... வீட்டை எதிர்த்து காதல் செய்தேன் .... வீதியில் நிற்கிறேன் உன்னை இழந்து ... காதல் கண்னை மறைக்கும் ... உறவையும் மறக்கும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 878

கஸல் - 877

கண்ணில் பட்டு கதலானாய் .... கல்லறைவரை தொடருமென்றாய்.... கண்மூடி தனமாய் நம்பினேன் ... கண்ணீர்தான் இறுதி பரிசு ....!!! கிட்டவா காதல் பரிசு தா .... கிள்ளி விட்டு போனபோது .... கிள்ளியது என் இதயம் என்பதை .... கிட்டிய காலத்தில் நீ திட்டியபோது .... கிறுக்கணுக்கு  புரிந்தது ....!!! காத்திருந்தேன் கவிதை வந்தது .... காணாமல் போனாய் கவிதை வந்தது .... காதல் பைத்தியம் என்றார்கள் .... காதலித்து பாருங்கள் புரியும் ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 877

கஸல் - 876

இறந்த காலம் தான் .... இனிமையான காலம் .... இனிமையாய் நீ பேசி .... இளமையை ரசித்தேன் .... இப்போ தனிமையில் ....!!! உனக்காய் வாழ்வேன் ... உறுதியாய் கூறினாய் .... உயிரை மறந்து வாழ்ந்தேன் ..... உயிர் வலிக்கிறது இப்போ ....!!! அன்பே என்றாய் .... அனைத்தையும் இழந்தேன் .... ஆருயிரே என்றாய் .... ஆவியாய் அலைகிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 876
படம்
படம்
படம்
படம்

கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் கஸல் - 875

காதல் மலர் போல் .... காலையில் அழகாய் .... மாலையில் வாடிவிடும் .... என்றாலும் காதல் ... அழகும் மென்மையும் ....!!! மரணத்தில் கூட நாம் இணைய முடியாது நீ உள்ளூர் மயானத்தில் ... நான் வெளியூர் மயானத்தில் ....!!! உன்னைப்போல் காதலிக்க ... தெரியாத உள்ளமும் ஒரு .... அங்கவீனம் தான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 875

கஸல் - 874

ஓராயிரம்... நினைவுகளுடன் .... ஆழமான  துயரத்துடன்... நிகழ்ந்து விட்டது ... நம் பிரிவு......!!! நீ என்னை மறந்து போய் நினைத்திருக்கலாம் இப்போதான் உனக்கு ... காதல் புரிந்திருக்கும் ....!!! ஒப்பாரி என்றால் என்ன ...? இப்போது புரிந்தது எனக்கு ... உன் ஒவ்வொரு செயலும் ... என் காதலுக்கு ஒப்பாரிதான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 874

கஸல் - 873

உன்னை காதலித்து ... நானும் கற்றுகொண்டேன் .... எப்படி வலிக்காமல் .... மறப்பதென்று ....!!! உன்னை நினைக்காமல் .... கவிதை எழுத முயற்சித்தேன் ... வெற்றிபெற்றது -நீ இக்கரைக்கு அக்கரை பச்சை - நீ அடிக்கடி இப்படிதான் ,,, ஏமாற்றுகிறாய் ,,,,, ஒருமுறை என்னை காதலித்துப்பார் ,,,, பலஜென்மம் என்னை ... காதலிப்பாய் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 873

கஸல் - 872

நீ என் மூச்சாக இருந்த .... காலமெல்லாம் நான் .... உன் உயிராக இருந்தேன் .... நீ மூச்சை நிறுத்தினாய் ... காதல் இறந்தது ....!!! இதயத்தில் ரோஜாவை .... வளரவிடாமல் -எதற்கு ..? முள்ளை வளர்கிறாய் ....? நீடூடி வாழ்க .... வாழ்த்துவோர் உள்ளார் ... நீடூடி காதல் வாழ்க ... வாழ்த்துவோர் யாரும் இல்லை ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 872

கே இனியவன் - கஸல் 104

உன் கண்ணால் காதல் கோலம் போடுகிறாய் -நான் அதற்கு வர்ணம் திட்டுகிறேன் காதலில் பூக்கள் சிரித்ததை விட வாடியதுதான் அதிகம் உனக்கு நான் காதலன் உறவு நீ எனக்கு என்ன உறவு ....? + கே இனியவன் - கஸல் 104

கே இனியவன் - கஸல் 101

நீ வைரக்கல் மின்னுவதில் அழகாய்  கொல்லுவதில்.... விஷமாய் இருகிறாய் ...!!! உன்னை சந்தித்தது சூரிய உதயம் ... உன்னை பிரிந்தது .... சூரிய அஸ்தமனம் ....!!! நீ என்னை விட்டு விலகமுன் உன் எண்ணங்களை ... என்னிலிருந்து விலக்கிவிட்டு ... செல் உயிரே ....!!! + கே இனியவன் - கஸல் 101

கே இனியவன் - கஸல் 102

நீ வானவில்  நான் இரவு  எப்படி உன்னை  நான் பார்ப்பது ...? கவிதை எழுதும் போது  கற்பனை வரவில்லை  என்றால் -உன்னை  நினைப்பேன்  நான் இறக்கவே  மாட்டேன்  என் இதயம் -உன்  இதயத்துக்குள்  மறைத்து வைத்திருக்கிறேன்  + கே இனியவன் - கஸல் 102

கே இனியவன் - கஸல் 103

நீ சிந்திவிடாத கண்ணீரை உனக்கும் சேர்த்து நானே சிந்துகிறேன் ....!!! என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் தெருவிபத்து உன்னை நான் தெருவில் பார்த்தது என் தூக்கத்தை.... கனவு கலைக்கிறது... என் வாழ்கையை ... நீ கலைக்கிறாய் ....!!! + கே இனியவன் - கஸல் 103

கே இனியவன் - கஸல் 100

நீ வெயிலா மழையா சொல்லிவிட்டு போ...? நான் சிலந்திபோல் உன் நினைவுகளால் வலைபின்னுகிறேன் நீயோ - சிலந்தியாய்  என்னை விழுங்குகிறாய் நான்  மரணத்திலிருந்து தப்பிவிட்டேன் ... உன் வலியில் இருந்து தப்ப முடியவில்லை ....!!! + கே இனியவன் - கஸல் 100

கே இனியவன் - கஸல் 99

இப்போது நான் கல்லூரிக்கு போவதில்லை -நீ கல்லறைக்கு எப்படி ..? போவது என்று .... பயிற்சி எடுக்கிறேன் ....!!! என் கையெழுத்தில் முதல் எழுத்தே -உன் எழுத்தாக மாறிவிட்டது....!!! என் கவிதையை .... இரக்கம் இல்லாமல் ... எரித்து விட்டாய் .... எறிந்த சாம்பல் கூட என்மீதிவிழுந்து -உன் நாமத்தையே உச்சரிக்கிறது ....!!! + கே இனியவன் - கஸல் 99

கே இனியவன் - கஸல் 98

நீ யாழ் வாசித்திருந்தால் என் ஊரின் பெயரில் உன்னை அழைத்திருப்பேன்... நீயோ காளியாய் இருகிறாய் ....!!! இசையில் அருமையான இனிமைகள் இருக்க -என்னை சோககீதம் பாட சொல்லுகிறாய்.... சோகம்தான் உனக்கு சொத்தோ ...? காதல் இசையை போன்றது தன்னை மறந்து சிரிக்கவும் செய்யும் -அழவும் செய்யும்....!!! + கே இனியவன் - கஸல் 98

கே இனியவன் - கஸல் 97

குற்றுயிரும் ... குறை உயிருமாய் .... வைத்திய சாலையில்.... இருக்கிறேன் -உன் கண்பட்டதால் ...!!! நான் காதலில் கர்ணனாக இருக்கிறேன் -நீ கண்ணனாக வந்து காதலை தானம் கேட்கிறாய்....!!! காதலுக்கு இன்பமாக கட்டிய காவியக்கட்டிடம் எங்கே உள்ளது ...???  + கே இனியவன் - கஸல் 97

கே இனியவன் - கஸல் 96

என்  மனம் உன் பார்வையால்.... உடைந்து சுக்குநூறாகி விட்டது .... கவலைப்படவில்லை...... உடைத்தது நீ.....!!! என்  காதலில் மின் சுழற்சியில் வருவதுபோல் வருகிறாய் எப்போது நிரந்தரமாக‌ வரப்போகிறாய் ...? உன்  அன்பு உன்னையும் கடந்து என்மீது பட்டதால்தான் இந்தவலி....!!! + கே இனியவன் - கஸல் 96

கே இனியவன் - கஸல் 95

காதல்  புற்கலாக‌... வளர்கின்றேன் ... பசுவாக‌ நின்று.... மேய்கிறாய்.....!!! கண்சிமிட்டும் நேரம் பார்த்துவந்தாய் புகைப்படமாக‌ உன்னை வைத்திருக்கிறேன் இதயத்தில் கண்ணில்....!!! உன்னை இனிபார்க்க‌ துடிக்க‌ மாட்டேன் இதயத்தில் இருகிறாய் .... வெளியேறும் வரை .... நீயே என்னை பார் ....!!! + கே இனியவன் - கஸல் 95

கே இனியவன் - கஸல் 94

நான் காதலின் பிறப்பிடம் .... நீயோ மறைவிடம் ...!!! நீ வராவிட்டால் எனக்கென்ன -உன் நினைவோடு போவேன் வாழுவேன் காதலின் உச்சத்தை அடைவேன் ...!!! காதலால் அறிஞனாகியவனும் ... அசிங்கபட்டவனும் ... இருக்கிறார்கள் ....!!! + கே இனியவன் - கஸல் 94

கே இனியவன் - கஸல் 93

என்  இதயத்தில் - உன்  எண்ணங்களால்.. கூடு காட்டுகிறேன் ...!!! நீ என் இதயத்தில் .. வந்து போவதுதான் .. என் உயிர் மூச்சு ... அதுதான் வந்து வந்து ... போகிறாயோ ...? நான்  பொறுப்பில்லாதவன் ... பொறுமையில்லாதவன் ... உன்னை கண்டபின் ... மற்றவர்களுக்கு .... வழிகாட்டியாக இருக்கிறேன் ...!!! + கே இனியவன் - கஸல் 93

கே இனியவன் - கஸல் 92

உடலாக இருந்தேன்  உன் நினைவுகளால்  எழும்பாகி விட்டேன் ....!!! உன்  வாழ்க்கைக்காக...  என் வாழ்க்கையை ... தானமாக தருகிறேன் ... பிழைத்து கொள் ...!!! காதலுக்கு காதலி  தேவையில்லை  நினைவுகள் போதும்  என்கிறாய் -நான்  என்ன செய்ய ....??? + கே இனியவன் - கஸல் 92

கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 871

உன்னை  நினைக்கும்போது ..... கண்ணீராய் வந்தாலும்  ஏற்றுகொள்வேன்..... அப்படியென்றாலும் ... என்னோடு வருகிறாய் ....!!! என் கண்ணீர் இருக்கும் .... உன்னை பற்றிய கவிதை .... எழுதிக்கொண்டே இருப்பேன் ...!!! நீ  ரொம்ப புத்திசாலி ... இதய கதவை பூட்டி .... சாவியையும் வைத்திருகிறாய் ... யாரும் நுழைய கூடாது .... என்பதற்காக ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 871

கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 866

காதல் மழையில் ... நனைய வந்தேன் -நீயோ ... காதல் நெருப்பாய் ... இருகிறாயே ....!!! என்னை நீ வேண்டுமென்றே .... காயப்படுத்துகிறாயா ...? காயப்படுதுவத்தில் .... இன்பம் காணுகிறாயா ...? தயவு செய்து என் முகவரியை கொடு .... நானும் வாழ ஆசைப்படுகிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 866

கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 870

உன்னை நான் நேரில் .... பார்த்த நாட்களை விட .... கவிதையில் பார்ப்பதே ... அதிகம் .....!!! மற்றவர்களுக்கு ... நான் அழகான ரோஜா .... உனக்கேன் நான் முள் ...? நீ சொல்லாவிட்டால் என்ன ...? உன் செயல் சொல்கிறது ... என்னை விட்டு விலகிறாய்... எனக்கு வேண்டும் -உன்னை ... காதலிக்கும்போது உன்னிடம் ... அனுமதியில்லாமல் காதல் ... செய்ததற்கு ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 870

கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 869

மூச்சுக்கும் காதலுக்கும் ... ஒரு வேறுபாடும் இல்லை ... நின்றால் ஒருவன் மரணம் ...!!! நீ  வாசிக்கும் வீணையின் ..... நாதம் நான் - இழையை .... அறுத்துவிட்டு வாசிக்க ... சொல்கிறாய் ,,,,,,!!! கவிதையின் வரி -நீ  கண்ணீரின் வலி -நீ  காதலில் கானல் -நீ  உன்னின் காதலை ... தேடுகிறேன் நான் ...? + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 869

கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 868

இலை உதிர்ந்த மரத்தில் ... ஒரு அழகு உண்டு ... என் காதல் உதிர்ந்த ... பின்னும் வாழ்கிறேன் ...!!! உன் கனவுக்குள் ... நான் வந்துவிட கூடாது .... என்பதற்காக தூங்காமல் ... இருந்துவிடாதே -உன் கண்ணுக்குள் இருக்கும் ... நான் இறந்துவிடுவேன் ...!!! நீ மௌனமாய் இருக்கும் .... ஒவ்வொரு நொடியில் ... என் இதயத்தில் உயிர் .... நிற்கும் நொடியென்று .... எப்போது உணர போகிறாய் ...? + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 868

கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 867

காதலை மறைத்து வாழ்வதும் .... மறந்து வாழ்வதும் ... இரட்டை துன்பம் .... இரண்டையும் .... தருகிறாய் ...? காணாமல் போனது ... ஆரம்பத்தில் இதயம் .... இப்போ காதல் ....!!! உன் நினைவுகள் தேன் .... உன் பேச்சுகள் தேனி .... தேன் எடுக்க தேனியிடம் ... துன்பபடத்தானே வேண்டும் ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 867

கே இனியவன் - கஸல் 91

நீ தூண்டில் நான் துடிக்கும் மீன் பாவம் காதல் புழுவாய் இறந்துவிட்டது ...!!! உன் பேச்சு உனக்கு வார்த்தை .. எனக்கு வாழ்க்கை உன் அழகு உனக்கு கர்வம் -எனக்கு .... கர்மா ....!!! காதல் மரணத்தில் முடிந்துவிட கூடாது என்பதால் தான் -நான் காதலிக்காமல் இருக்கிறேன் + கே இனியவன் - கஸல் 91

கே இனியவன் - கஸல் 90

உன்னை நினைக்கும் போது .. கவிதை என்னைவிட்டு போகிறது கவிதை எழுதும் போது -நீ என்னைவிட்டு போகிறாய் ...!!! உன்னை நேரில் பார்ப்பதை .... மறந்து வருகிறேன் ... கவிதையில்,, கனவில் .... அழகாய் இருகிறாய் ....!!! காதலில் விழுந்து கதறுகிறேன் .... என்னை காதலில் ... இருந்து எடுத்துவிடு ...!!! + கே இனியவன் - கஸல் 90

கே இனியவன் - கஸல் 89

காதல்  நல்லதும் இல்லை .... கெட்டதுமில்லை.... தயங்கினாய் .... தவிக்கிறேன் ....!!! காதல்  சுதந்திர பறவை ... உன்னை .... காதலித்தேன் .... படும் வேதனை போதும் ...!!! காதலுக்கு .. கண்ணில்லை  இதயமில்லை  பேச்சில்லை  என்றால் -காதலில்  என்னதான் இருக்கிறது ..??? + கே இனியவன் - கஸல் 89

கவிக்கோ வை தவிர ஆள் இல்லை

படம்
JINNA  • நேற்று 11:13 pm தமிழில் கசல் எழுத கவிக்கோ வை தவிர ஆள் இல்லையென்று நினைத்திருந்தேன்...  இப்போது நீங்களும்...  அருமை...  வாழ்த்துக்கள் தொடருங்கள்... 1 வாக்குகள் கே இனியவன்  • 33 நிமிடத்திற்கு முன் மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு  இதுவரை 850 கஸல் எழுதிருக்கிறேன்  ஏதோ எனக்கு இந்த கவிதையில் ஒரு மிக பிடிப்பு

தஞ்சை குணா அவர்களுக்கு நன்றி

படம்
Thanjai Guna  • 2 மணி நேரத்திற்கு முன் அன்பரே !...   Thanjai Guna  • 2 மணி நேரத்திற்கு முன் அன்பரே !...  தங்களின் வரிகளின் பொருள் எப்போதும் மேன்மை உடையதாய் இருப்பதைக் கண்டு வியக்கிறேன்.....  எனது ஆராய்ச்சிப் பனியின் காரணமாக நீண்ட நேரம் தளத்தில் வீற்றிருக்க இயலவில்லை என்பது என் வருத்தமாகும்... காலம் கனியும் என காத்திருக்கிறேன் தங்களின் விரிந்த பார்வை படைப்புகளை உற்று நோக்க...  தொடருங்கள் அன்பரே !......  வாழ்த்துக்களுடன் தஞ்சை குணா..... 0 வாக்குகள் கே இனியவன்  • 3 நிமிடத்திற்கு முன் தங்களின் அருமையான கருத்துக்கு தலை வணங்குகிறேன்  என்னால் முடிந்த வரை எழுதுகிறேன் எழுதுவேன்  தமிழ் தாய்க்கு நன்றி 0 வாக்குகள்

கசல் எழுத கவிக்கோ வை தவிர ஆள் இல்லை

JINNA  • நேற்று 11:13 pm தமிழில் கசல் எழுத கவிக்கோ வை தவிர ஆள் இல்லையென்று நினைத்திருந்தேன்... இப்போது நீங்களும்... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... @ கே இனியவன்  • 1 வினாடிக்கு முன் மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு இதுவரை 850 கஸல் எழுதிருக்கிறேன் ஏதோ எனக்கு இந்த கவிதையில் ஒரு மிக பிடிப்பு

கே இனியவன் - கஸல் 88

பொருத்தமில்லாதது .. பொருந்தாது .. பொருந்தக்கூடியது பொருந்தாமல் இருக்காது பொருத்தமானவளா ...? பொருந்தாதவளா...? தாமைரை இலையில்.... தண்ணி நிற்காது என்கிறாய்... தாமரையே தண்ணீரில் தான்... இருக்கிறது..... நான் உன்னோடு கண்ணீரில் ... நிற்பதுபோல் ....!!! நீ என் பகலும் இரவும்..... மீண்டும் என்னிடம் நீ... வரத்தான் வேண்டும் .... பகலில் இருளாய் இருக்கிறேன் .... இருளில் பகலாய் இருக்கிறேன் ...!!! + கே இனியவன் - கஸல் 88