இடுகைகள்

செப்டம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துடிக்கவும் வைக்கணும்.....!!!

இதயத்தின் வேலை ..... துடிப்பது மட்டுமல்ல.... துடிக்கவும் வைக்கணும்.....!!! எவ்வளவு தான் .... உன்னை சுற்றி வந்தாலும்.... நிமிட முள் போல்...... நீதான் முந்திக்கொண்டு செல்கிறாய் என்னை ...... கவனிக்காமல்.......!!! இதயத்துக்குள்..... காதல் யாரையும் கேட்டு..... வருவதில்லை...... அப்புறம் எதற்கு...... போகும்போது கவலைப்படுகிறீர்கள் ......!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1049 கவிப்புயல் இனியவன்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம் ------------------------------------------------------- பலருக்கு கஸல் கவிதை என்றால் என்ன ...? என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது .அதை புரியாமல் வாசித்தால் இந்த கவிதையில் சுவாரிஸம் இருக்காது . பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் ) இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும் ( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும் மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது . அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-) 3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் .... உதாரணத்துக்கு ஒரு கவிதை ----- வலமிருந்து .... இடமாக காதல் ... தேவதையை சுற்றி .... வரவேண்டும் .....(+) நம் காதல் தோஷம் .... இடமிருந்து வலமாக .... சுற்றுகிறேன் .......!!!(-) -----  01 வாடி விழும் பூவின் .... நெத்து மரமாகி .... மீண்டும் பூக்கும் ...(+) நீ  வாடித்தான் .... விழுந்தாய் ...... பூவின் மென்மை கூட ..... உன்னில் இல்லை ....!!!(-) -----0

முள்ளில் மலரும் பூக்கள் 1048

நீயும் காதல்...... சிறகு கொண்ட பறவை..... பருந்தல்ல...... என்னோடு பறந்து வர..... தயங்குகிறாய்.....!!! காதலில் அதிகமாக எரியாதே.... சாம்பலாகி விடுவாய் உலகம் ஊதியே மறைத்து.... விடும்............!!! காதலை .... உண் - உன் காதல்..... நம் காதல் ஆகிவிடும்....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1048 கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலரும் பூக்கள் 1047

காதலில் நான் ...... மூலவேர் - நீயோ..... இலை ஒரு நாள்..... உதிர்ந்து விழுவாய்........!!! நீ பனிக்கட்டியில் உருவாகிய..... கப்பல் தெரியாமல் உன்னில்...... பயணம் செய்துவிட்டேன்.......!!! என் காதல் தீபமே........ உன்னை அணைத்தேன்........ அணைந்தே விட்டாயே......!!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலர்ந்த பூக்கள் 1046

இதயத்தை சிதைப்பது ..... எப்படியென்பதை ..... உன்னிடம் .... கற்று கொள்ளப்போகிறேன் ......!!! காதலர் தினத்தை ..... கொண்டாடும் காதலர்களே ...... காதல் தோல்விக்கு ..... எப்போது நாள் .....? உன்னிடம் காதலை ..... சொல்லாமல் விட்டிருந்தால்..... சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை - 1046 ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர் காதல் கவி நேசன் இனியவன்

முள்ளில் மலர்ந்த பூக்கள் 1045

நீ  யாருக்காகவோ .... பிறந்தவள் என்றாலும் ..... நான் .... உனக்காக பிறந்தவள் ....!!! காதல் தோல்வி .... கண்டவர்களின் ..... பட்டியலில் என் ... பெயர்தான் முதல் ..... நீயும் தப்பமுடியாது .....!!! காதலுக்கு .... அழகழகான முகமூடி .... விற்பவள் - நீ ........!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை  ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர்  காதல் கவி நேசன்  இனியவன்

முள்ளில் மலரும் பூக்கள் 1044

நான்.... காற்றில் ஆடும் பட்டம்..... உன் கையில் நூல்.... என்ன வேண்டும் என்றாலும்..... நீ தான் முடிவெடு.......!!! காட்டுக்குள்.... தனியாக கண்ணை கட்டி .... விட்டவனைபோல்.... உன்னை பிரிந்த பின் ..... நிற்கிறேன்...... நீ தான் காப்பாற்ற வேண்டும்.....!!! உன்னோடு அலைந்த நாட்கள்.... மண்ணோடு மறையும் வரை.... தந்தவள் நீ.............!!! முள்ளில் மலரும் பூக்கள் கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 1044

முள்ளில் மலரும் பூக்கள் 1043

நீ.... பூப்போல் ..... பேசிய வார்த்தைகள்.... இப்போ புண்ணாய்..... மாறுகிறது.......!!! காதலால் காலனை...... சந்தித்தவன் நான்...... வீசு பாசக்கயிறை...... மார்கண்டேயன் நான்.....!!! காதல் கண்ணீரில்...... நீச்சல் அடிக்க வைச்சவள்..... அப்போதும் உன் காதல்..... கரை தெரியவில்லை.......!!! & முள்ளில் மலரும் பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1043