1/11/2018

இறுதிசுற்றாகிவிட்டது....!

வலையில் சிக்கிய
பூச்சி நான்.....
சிலந்தியாக வந்து....
விழுங்கிவிடு.....!

என் கவிதை .....
சிரமப்படுத்தினால்
மன்னித்துவிடு......!

உன்னை சுற்றி....
வந்தேன்........
முதல் சுற்றே....
இறுதிசுற்றாகிவிட்டது....!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

மதுவுக்கு ஆசைப்பட்டு.....

மதுவுக்கு ஆசைப்பட்டு.....
மதுக்கிண்ணத்தில்....
விழுந்த புழுவானேன்.....!

நீ
அணியப்போவது....
மலர்மாலையா...?
மலர் வளையமா...?

மணிமேகலை.......
காதலனை இழந்தாள்....
காவியமானாள்......
காவியமும் காப்பியமும்......
காதல் தோல்வியே.....!

@
கவிப்புடயல் இனியவன்
கஸல் கவிதை

காதல் ஒரு பூச்சியம்.....

பசியோடு......
வாழகற்றவன்......
காதலில்லாமல்.....
வாழ கற்றுகொள்ள.....
தவறி விட்டேன்.....!

காதல் ஒரு பூச்சியம்.....
ஏக்கத்தோடு......
ஆரம்பித்து............
ஏமாற்றத்தோடு......
முடிகிறது..........!

அன்பே வா.......
இன்பவலியோடு.....
இவ் உலகை விட்டு.....
பறந்து விடுவோம்.....!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை