இடுகைகள்

செப்டம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே இனியவன் - கஸல் 79

நீ என்னில் வாழ்வதும் நான் உன்னில் வாழ்வதும் -தான் காதல்....! என் பிரிந்தாய் ...? குத்துவிளக்கு.. ஏற்றினாலும்... மின்விளக்கு... ஏற்றினாலும்... வெளிச்சம் .... ஒன்றுதான் ... வசதிக்காய் ... காதல் செய்யாதே ...!!! நீ பேசினாலும் பேசாவிட்டாலும் வலிப்பது என் இதயம் தான் கே இனியவன் - கஸல் 79

கே இனியவன் - கஸல் 78

நான் இறந்தால் ... புதைப்பார்களா ...? எரிப்பார்களா ...? என்றோ அவளின் .... வார்த்தையால் ... சாம்பலாகி விட்டேன் ...!!! அழகுக்கு அழகுதருவது காதல் உண்மைதான் ... உன்னோடு இருக்கும் .. காலத்தில் உணர்ந்தேன் ...!!! தட்டிய தீக்குச்சி விரைவாக அணைந்துவிடும் அந்த மன வேதனைதான் எனக்கும் ...!!! கே இனியவன் - கஸல் 78

கே இனியவன் - கஸல் 77

நீ மூட்டிய காதல் தீயை -நீயே கண்ணீரால் அணைக்க சொல்லுகிறாய்...!!! வீட்டு தோட்டத்தில் பூத்தும் வாடியும் ... இருக்கும் மலர்கள் ... உன்னை நினைவுக்கு ... கொண்டு வருகிறது ....!!! உயிர் பிரிந்தபின்பும் வாழும் ஒரே ஒரு விடயம் காதல் ...!!! கே இனியவன் - கஸல் 77

கே இனியவன் - கஸல் 76

உன்னை காதலிக்க .... என் துடிக்கிறது இதயம் .... உன் இதயமோ நடிக்கிறது ...!!! என் காதல் சுமையை இறக்கி வைக்க -நீதான் என் காதல் சுமைதாங்கி....!!! நினைப்பதெல்லாம்..... நடக்கிறது.....!!! காதலிலும் நடக்கும் .... தோல்வியில் ....? உன் திருமணத்தில் ....? கே இனியவன் - கஸல் 76

கே இனியவன் - கஸல் 75

பூந்தோட்டத்துக்கு ஏன் போகவேண்டும்  பூவாக நீயிருக்கையில்...? உடைந்த .... கண்ணாடியாய் ...... உன் முகம் -அதிலும் ... கண்ணீருடன் ...!!! உன் நினைவு.... காயமுன் வந்துவிடு....? கனவிலோ..... நிஜத்திலோ ..!!! கே இனியவன் - கஸல் 75

கே இனியவன் - கஸல் 74

என்றோ ஒருமுறை ..... என்னை நீ திரும்பி .... அழைப்பாய் ..... உன் மூச்சு நான் ....!!! பிரிந்துவிட்டாய் சந்தோசம் ....!!! நினைவில் நிற்கிறாய் சந்தேகம்.....!!! மீண்டும் வருவாயோ ...? பிரிந்தது வேறு .... பிரிப்பது வேறு.... நீ பிரிந்தாயா ....? என்னை பிரித்தாயா ....? கே இனியவன் - கஸல் 74

கே இனியவன் - கஸல் 73

மண் பானை தண்ணீரும்  காதலும் ஒன்றுதான் .... குளிர்மையாது .... அதிகமானால் .... ஆபத்தானது .....!!! காதலில் அழகு ... சந்தோசம் ... எச்சரிக்கை .... சந்தேகம் ....!!! நீ  என் அருகே... வந்தாலும்.... சென்றாலும்... ஒன்றுதான்.... காதல் நினைவு... வேண்டும்.....  நீயல்ல.....!!! கே இனியவன் - கஸல் 73

கே இனியவன் - கஸல் 72

நான் அழகை இழந்தேன் உன்னால் உடைந்த இதய சில்களை  கொண்டு -காதல் வீதி அமைக்கிறேன் .... இடையிடையே ... குத்துகிறது ....!!! வலிதான் காதலின் முதலீடு..... கண்ணீர்தான் காதலின்  வருமானம் ....!!! என்று நீ என்னை காதலித்தாயோ அன்று முதல் -நான் அழகை இழந்தேன் ....!!! கே இனியவன் - கஸல் 72

கே இனியவன் - கஸல் 71

எப்படி விலக்க முடியும் நீ என்னை ஒதுக்க ஒதுக்க என் கவிதை ஓங்குகிறது நானோ -உன் ஆணிவேர் எப்படி விலக்க முடியும் நான் உனக்காக... காத்திருந்த மணி.... என் ஆயுள் முறையும் .... நேரமடி ....!!! கே இனியவன் - கஸல் 71

கே இனியவன் - கஸல் 70

நான் யாரோடு பேசினாலும் ..... என் கண்ணிலும் ... இதயத்திலும் -நீ  தொழுவத்தில் கட்டிய மாடு போல் எங்கு சென்றாலும் உன்னிடமே திரும்பி வந்துவிடுகிறேன் ....!!! கூட்டி கழித்துப்பார்... காதலின் தொடக்கமும்  வாழ்க்கையின் பயணமும் வலியின் வழியால் செல்கிறது ...!!! கே இனியவன் - கஸல் 70

கே இனியவன் - கஸல் 69

காதலுக்கு .. ஆதாம் ஏவாள் காலத்தை சொல்ல்வார்கள் அதற்கே காதல்தான் காரணம் நீ சிலநேரம் குளிந்த நீர் வெந்நீர் குட்டைநீர் காதல் கடலின் ஆழத்துக்கே எடுத்து செல்லுகிறது தேடிக்கொண்டே இருக்கிறேன் காதலை இல்லை கடல் ஆழத்தையாவது கே இனியவன் - கஸல் 69

கே இனியவன் - கஸல் 68

நீ ஆடையை மாற்று.... ஆளை மாற்றாதே .... கவிதை கண்ணீர் .... விட்டு அழும் ....!!! உடலில் வாசனை .... அழகுதரும் ..... எனக்கு நீ உள்ளத்தால் .... வாசனை செய் ....!!! தரையில் கண்டெடுத்த -காசுபோல் உன் காதல் கடிதம் பலகோடி பணம் ...!!! கே இனியவன் - கஸல் 68

கே இனியவன் - கஸல் 67

நான் காதலில் எரிகிறேன் நீயோ காதல்  மழையில் நனைகிறாய்....!!! அழுவதை தடுக்க காதலின் ஒரு விதியும் இல்லை.... காதலரின் சதியே ...!!! என்  ஒவ்வொரு கனவும் உனக்கு எழுத்தும்  காதல் காவியம் ....!!! கே இனியவன் - கஸல் 67

கே இனியவன் - கஸல் 66

முதல்  பார்வையில் காதல் .... இரண்டாம் பார்வையை .... இன்றுவரை தேடுகிறேன் ...!!! தேனியைப்போல்... உன் நினைவுகளை..... சேர்க்கிறேன் .... நீயோ .... தேனிபோல் கொட்டுகிறாய் ,,,!!! நிலாவில்..... சேர்ந்திருக்கிறோம்.... நிலாவே உன்னை... எட்டிப்பார்க்கிறது...... உண்மைதானா நம் காதல் ...? கே இனியவன் - கஸல் 66

கஸல் கவிதையின் 100 வதுபதிவு

நிலவில் உள்ள ஓவியம் போல் உன் நினைவுகள் தூரத்தில் அழகாக உள்ளது ... சகுனத்தை நம்புவதில்லை என்றாலும் நீ -திடீர் என்று தோன்றிய அமாவாசை -நீ என்னை மறக்கிறாய் போலும் வலையில் சிக்கிய மீனைவிட உன் நினைவில் சிக்கிய -நான் படும் அவஸ்தை கொடூரம் (கஸல் கவிதையின் 100 வது பதிவு இது )

கே இனியவன் - கஸல் 65

நீ  செதுக்கிய சிற்பமா ..? இதயத்தையும் செதுக்கி .... வைத்திருக்கிறாயோ ...? செக்கு மாடுபோல்.... உன்னையே சுற்றி.... சுற்றி வருகிறேன்... உன் வேக வண்டிக்கு..... பொருத்தமானவன்அல்ல ..!!! பிரிந்து செல்லும் - நீ திரும்பி பார்க்கவில்லை...! உன் இதயம் எனக்கு கைகாட்டுகிறது ....!!! கே இனியவன் - கஸல் 65

கே இனியவன் - கஸல் 64

உன்  கண் செய்த .. வித்தை தான் .... காதல் - வித்தை ..... வித்தாகி தழைக்கிறது ...!!! உடலில் ஒன்பது வாசலையும் மூடிவிட்டேன்  எப்படி சென்றாய் ....? என்னைவிட்டு ....!!! மின்னலில் வரும் முறிகோடுதான் காதல் முகவரி முடித்தால் முகவரிக்கு.... வந்துவிடு என்கிறாய் ...? கே இனியவன் - கஸல் 64

கே இனியவன் - கஸல் 63

நான்  இதயத்துக்குள் வரும் போது கதவை மூடுகிறாய் ....!!! இன்றுபோய் நாளை வா என்று சொல்ல நான் ராவணன் அல்ல...!!! என்  இதயக்கதவு மட்டுமல்ல வீட்டு வாசல் கதவும் திறந்திருக்கிறது..... எப்போது வருவாய் ...? கே இனியவன் - கஸல் 63

கே இனியவன் - கஸல் 62

உன்  கண்ணின் பார்வையிலிருந்து நான் தப்பவே முடியாமல் .... காயப்பட்டு விட்டேன் ...!!! என்  கவிதை வரிகள் அனைத்தும் நீ தந்தவை  நீ தந்தவை இப்போ ... ஏனோ வலிக்கிறது ...!!! என்  சோகத்தை கேட்டு சோகமே அழுகிறது....!!! கே இனியவன் - கஸல் 62

கே இனியவன் - கஸல் 61

நீயும் நானும் பிரிந்து போகலாம்.... கவலைப்படாதே .... உன்னையும் என்னையும் .... கவிதை இணைக்கும் ...!!! என்  உள்ளே இருக்கும் - நீ .. அடிக்கடி வெளியில் ... எடிப்பார்கிறாய் ...?  உயிரே .. நான் உன்னால் காயப்பட்ட இதயம்... எனக்கு ஏன்...?  இதற்கு மேல் இதயம் ...??? கே இனியவன் - கஸல் 61

கே இனியவன் - கஸல் 60

எனக்கு தெரியும் .. நீ காதலிக்கவில்லை என் இதயத்தை .. களவு செய்யவந்தவள் ...!!! நீ - பூ நான் - நார் எப்போது வரும் காதல் மாலை....? பூ வாடும்போது .... நார் வாடுவதில்லை ... நாருக்கு தலைக்கனம் ...!!! கே இனியவன் - கஸல் 60

கே இனியவன் - கஸல் 59

நீ ரோஜாவின் பூவை மட்டும் ரசிக்கிறாய் நான் முள்ளையும் பூவாக ரசிக்கிறேன்...!!! உன்னுள் நான்... கிணற்றுத்தவளை... இதில் என்ன வெட்கம்....? உச்சி வெயிலில் நிற்பதும் உன் நினைவில் வாழ்வதும்  ஒன்றுதான் ...!!! கே இனியவன் - கஸல் 59