கவிப்புயல் இனியவன் கஸல் 300 - 310

நீயும் பறவை 
நானும் பறவை 
இருவரும் கீழே 
இறங்கிதான் 
ஆகவேண்டும் ...!!!

நான் கோலம் 
நீ புள்ளியா ...?
அழகா ...?
தெரியவில்லை ...!!!

காதல் வேக ..
நடையில் -நான் 
முயல் -நீ 
ஆமை ....!!!


கஸல் 301

----

என் நினைவுகள் 
கூட உன்னை கண்டால் 
வெட்கப்படுகின்றன ...!!!

காதலில் வரும் கண்ணீர் 
ஒருமுறை இனிக்கும் 
ஒருமுறை உவர்க்கும் 

கண்ணால் 
கைது செய்கிறேன் 
நீ 
விலங்க்கிடுகிறாய் ...!!!

கஸல் ;302

----

காக்கைக்கும் 
தன் குஞ்சு -பொன்
குஞ்சு -நீ 
எனக்குபோல் ....!!!

மலர் அழகாக 
வேர் காரணம் 
நான் -உனக்குபோல் ...!!!

இதயத்தால் 
காதல் செய் 
ஏன்..?
வார்த்தையால் 
காதல் செய்கிறாய் ...?

கஸல் 303

----

மனம் சுமக்கும் 
இதயம் கணக்கும் 

கண்டவுடன் 
கொண்ட காதல் 
இல்லை நம் காதல் 
இன்றுவரை 
இருக்கிறது ....!!!

பட்டாம் பூச்சியை 
தான் காதலர் 
விரும்புவர் ..நீ 
என் தேனீயை 
விரும்புகிறாய் ...???

கஸல் 304

----

வா 
மனிதர்கள் 
காதலிக்கும் 
இடத்துக்கு போவோம் ...!!!

காட்டுக்குள் 
பழமரங்கள் 
நீ தந்த நினைவுகள் ..
போல ....!!!

பானையில் 
இருந்தால் தான் 
அகப்பையில் வரும் 
உனக்கு காதல் 
வரவில்லை ...!!!

கஸல் 305

---

காதல் என்னும் 
இலந்தை முள்ளில் 
சிக்கி தவிக்கிறேன் 

உன்னை நம்பி 
வந்துவிட்டேன் 
வாழ்ந்துதான் 
ஆகவேண்டும் 

காற்றில் இயங்கும் 
காற்றாடி நான் 
காற்று - நீ 
காற்றுதான் இல்லை...!!!

கஸல் 306

----

காதலில் 
நீ முதல் நிலை 
நான் இரண்டாம் 
நிலை .....!!!

உனக்காக 
எரியத்தயார் 
நீ 
திரியாக வந்தால் 

கடலில் படகு 
ஓட்டுவோம் 
வா .....!!!
தரையில் 
அல்ல .....!!!

கஸல் 307

----

காதல் 
வாசமே 
இல்லாத இடத்துக்கு 
போகிறேன் ....!!!

காலில் தைத்த 
முள் போல் 
நெஞ்சில் 
தைக்கிறாய் ...!!!

காதலில் 
தர்மம் 
அதர்மம் 
இரண்டும் 
நீ தான் ....!!!

கஸல் ;308

----

ஊசி முனைக்குள் 
புகுந்த ஒட்டகம் 
போல் -நம் 
காதல் ....!!!

நீயும்
நானும் காதல் 
மொட்டுக்கள் 

சோகத்தில் 
வீணை வாசித்தால் 
நாண்களாக
இருந்த நீ 
அறுகிறாய் ....!!!

கஸல் 309

----

காதலுக்கு 
மாலை போட்ட 
முதல் ஆள் 
நீ தான் ....!!!

கல்லுக்குள் 
ஈரமுண்டு 
உன்னைப்போல் 

கண்ணில் 
காதல் வரவேண்டும் 
உனக்கு 
கண்ணீர் வருகிறது ...!!!

கஸல் ;310

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்