முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் 10 - 20

காதலித்தால் ....
மனிதனாகலாம் ....
அவள் காதலோடு ....
இருந்தால் ....!!!

நானும் ......
பாவத்தை ....
சுமக்கும் சிலுவை ....
நாதன் தான் .....
அவள் வலியை ....
சுமக்கிறேன் .....!!!

அவளிடம் ....
காதல் நிறைந்து ....
இருக்கிறது ...
அவள் வீட்டில் ....
காசு நிறைந்திருகிறது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 11

------

அடுத்த ....
ஜென்மத்தில் ....
காதலிபப்தற்காக ....
இந்த ஜென்மத்தில் ....
வலிகளை தருகிறாள்....!!!

கண்களால் சித்திரம் ....
வரைந்தவள் .....
கண்ணீரால் சித்திரம் ....
வரைய வைக்கிறாள் ....!!!

காதலுக்காக ...
நமக்குள் நாமே ....
காதல் செய்வோம் ....
காதல் என்றாலும் ....
இன்புறட்டும் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 12


-------

என் ......
கவிதைகளை ...
வலிமையாக்க -நீ 
இன்னும் வலிகளை....
தந்துவிடு .....!!!

உன்னை 
காதலிப்பதும் .....
மணல் வீடு கட்டுவதும் .....
ஒன்றுதான் .....!!!

யார் சொன்னது ...
காதலுக்கு கண் இல்லை ...
என்று - அப்போ கண்ணீர் ....
எப்படி வருகிறது ....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 13


-------
நான் காதலில் ...
கனவு காண்கிறேன் ...
நீ தூக்கத்தில் 
கனவு காண்கிறாய் ....!!!

ஈசலின் வாழ்வும் ....
ஒருசில மணிநேரம் ...
காதலின் இன்பமும் ....
ஒருசில மணிநேரம் ....!!!

பகலின் முடிவு இருள் ....
காதல் இதயத்தின் அருள் ...
காதலின் முடிவு இருள் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 14


-------

இறந்த காலம் சில ...
வேளை இனிமையாகும் .
இறந்த காதலும் சில ...
வேளை இனிமையாகும் ....!!!

தண்ணீர் ஊற்றி ....
செடியை வளர்க்கிறேன்.
கண்ணீர் விட்டு ....
காதலை வளர்க்கிறேன்....!!!

நீ அதிசயப்பிறவு ....
காதலின் தொடக்கத்திலும் ...
இறுதியிலும் சிரித்த ...
முகத்தோடு செல்கிறாய் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 15


--------

உன்னை காதலிக்க .....
எழுதிய கவிதைகள் .....
கண்ணீர் கவிதையாக .....
மாறி வருகிறது ....!!!

மறந்துபோய் உன்னை ....
மறந்து நினைத்துவிட்டேன் ...
காதலில் மட்டும்தான் ....
மறதி தொழிற்படாது .....!!!

கண்ணுக்குள் பூவாக ....
இருந்த -நீ 
முள்ளாய் ஏன் மாறினாய் ...?
கண்ணீரை எதற்காக ....
வரவழைக்கிறாய் ....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 16


-----------

நீ 
காதல் தூண்டில் ....
நான் 
சிக்கிய மீன் ......!!!

இறைவன் ...
அழகாக படைக்கும் ....
போது அவஸ்தையையும் ....
படைக்கிறான் ....!!!

காதலை விட ....
கண்ணீர் வலுவானது ....
நிச்சயம் வரும் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 17


-------------

காதலில் பாத சுவடு .....
எதிரும் புதிருமாக ....
காணப்படுவது ....
நம்மில் தான் ....!!!

உன்னை நினைக்கும் ...
போதேல்லாம் ...
என் எழுதுகருவி ....
தீப்பந்தமாகிறது .....!!!

உனக்காக ....
கல்லறையில் ....
காத்திருக்கிறேன் ....
என்றோ ஒரு நாள் ....
நீயும் அங்கு வருவாய் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 18


---------
நெருப்பாக நீ இரு ....
நீராக நான் வந்து ....
அணைக்கிறேன் ...
காதல் ....
கருகிப்போகட்டும் ......!!!

என் புருவத்தில் ....
ஊஞ்சல் ஆடியவலே ....
இப்போ கண்ணில் ...
இருந்து........
வெளியேறுகிறாள் ....!!!

உச்ச கட்ட காதல் ....
காட்சி முடிவுக்கு ....
வந்தது .....
காட்சியை பார்ப்பவர் ....
கண்களில் கண்ணீருடன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 19

------


காதல் 
கடல் போன்றது ....
உண்மைதான் ...
கண்ணீர் உவர்க்கிறது ....!!!

நீ 
பேசிய நாள் ...
பௌணமி ...
பேசிய வார்த்தை ...
அமாவாசை .....!!!

காதல் ...
திருமண அழைப்பிதல் ...
வரும் வரை தான் ....
இன்பம் .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 20


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்