கவிப்புயல் இனியவன் கஸல் 970 - 980

என் 
வாழ்கையில் ....
ஒரு மாற்றம் 
காதலில் 
ஏமாற்றம் .....!!!

முடிந்த வரை ...
சிரிப்பாய் இருந்த காதல் ....
இயன்றவரை அழும் ....
காதலானது ....!!!

உனக்கு காதல் ...
தந்து வாழ்கையும் ....
தந்தேன் -வாழ்த்தும் 
தந்தேன் .....
காதல் என்னை ....
தனிமரமாக்கியது ....!!! 

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 971

--------
உன் 
இதயம் தேன் கூடு ....
வார்த்தைகள் தேனீ ...!!!

காதல் 
என்றால் என்ன ...?
எனக்கு தெரியாது ...
உன்னை காதலிக்க ....
தெரியும் ....!!!

ஒவ்வொரு காதலின் ....
இதயமும் மண் பொம்மை ....
எப்போதும் உடையலாம் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 972

----------
பூவைபோல் அழகு ...
வேரைபோல் காதல் ....
நீரில்லாமல் அவையில்லை ...
நீயில்லாமல் நானில்லை ...!!!

நட்சத்திரம் ஒவ்வொன்றும் ....
மின்னவில்லை உன்னை ...
கண்ணடிகின்றன .....!!!

கண்ணீராலும் கவிதை .....
எழுதமுடியும் என்பதை ....
கற்று தந்தவள் நீ ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 973

---------
காயப்பட போகிறாயா ....?
காதலித்துப்பார் ....
காயப்பட்டு இருக்கிறாயா ...?
காதல் செய் ....!!!

நீ 
இதை விட பேசாமல் ....
இருந்திருக்கலாம் ...
தவளை தன் வாயால் ...
கெட்டதுபோல் நீயும் ...?

இதயம் 
வலிக்காவிட்டால் .....
காதலே இல்லை ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 974

----------
என்னை 
தோற்றே உன்னை ...
தோற்றேன் சூதல்ல ....
காதல் ....!!!

உன்னில் ....
காதல் மதுபானம் ....
தயாரித்தேன் .....
நீ மதுவா ....?
விஷமா....?

வாசம் போன பூவும் ....
மோசம் போன நானும் ....
ஒன்றுதான் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 975

----------
நீ நெருப்பு ....
உனக்கு உணர்வே இல்லை 
என்னை சுட்டெரிக்கிறாய் .....!!!

பகலில் உன்நினைவும் ...
இரவில் உன் கனவும் ....
இருதலை கொள்ளி ....
எறும்பு போல் கொல்லுதடி ...!!!

நான் 
பார்வையில்லாத கண் ....
நீ 
கண் இருந்தும் பார்வை ....
இல்லாதவள் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 976

------------
நீ 
காற்று 
என் மூச்சாவும் ...
புயலாகவும் ....
இருகிறாய் ....!!!

எவ்வளவு தான் ....
மறைத்தாலும் ...
பரகசியமாகும் ....
பிரசவம் ....
காதல் ....!!!

உன்னை நினைத்து.... 
அழும்போதெல்லாம் .... 
ஆறுதல் தருவது ...
உன் கடந்தகால உறவு ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 977

----------
உன் 
இதயத்தில் ....
நான் துடிப்பா ...?
நடிப்பா ....?

என்னிடம் நீ 
இருக்கின்ற போதெல்லாம் 
உன்னிடம் - நான் ...
இருக்க வேண்டும் ....
என்னை கலைகிறாய் ...?

உயிரே ...
நீ போதையா இரு ...
என்னை பேதையாக்காதே,,,,!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 978

-----------
சில நேரம் 
பாசமாய் இருக்கிறாய் 
சில நேரம் வேஷமாய்...
இருக்கிறாய்....!!!

பிரிந்து சென்றது ....
குற்றமில்லை ....
என்னை பிழிந்து ...
சென்றதே குற்றம் ...!!!

உன்னை கண்ணால் ...
வீசி பிடித்தேன் ....
அதுதான் என்னை ...
சிக்கலில் மாட்டி ....
வைத்திருகிறாயோ...?

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 979

-----------
உன் 
கண் வலைக்குள் ...
சிக்கிய மீன் நான் ....
எடுத்து விடு ...!!!

நம் 
காதல் தொடர் கதை ...
எப்போது நிறைவு ...
பெறும் ...?

நீ 
என்னை வதைப்பாய் 
தெரிந்தும் உன்னிடம் ...
வசப்பட்டேன் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 980

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்