கவிப்புயல் இனியவன் கஸல் 870 - 880

காதல் மழையில் ...
நனைய வந்தேன் -நீயோ ...
காதல் நெருப்பாய் ...
இருகிறாயே ....!!!

என்னை 
நீ வேண்டுமென்றே ....
காயப்படுத்துகிறாயா ...?
காயப்படுதுவத்தில் ....
இன்பம் காணுகிறாயா ...?

தயவு செய்து 
என் முகவரியை கொடு ....
நானும் வாழ ஆசைப்படுகிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 871

------
உன்னை 
நினைக்கும்போது .....
கண்ணீராய் வந்தாலும் 
ஏற்றுகொள்வேன்.....
அப்படியென்றாலும் ...
என்னோடு வருகிறாய் ....!!!

என் கண்ணீர் இருக்கும் ....
உன்னை பற்றிய கவிதை ....
எழுதிக்கொண்டே இருப்பேன் ...!!!

நீ 
ரொம்ப புத்திசாலி ...
இதய கதவை பூட்டி ....
சாவியையும் வைத்திருகிறாய் ...
யாரும் நுழைய கூடாது ....
என்பதற்காக ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 872
-----
நீ 
என் மூச்சாக இருந்த ....
காலமெல்லாம் நான் ....
உன் உயிராக இருந்தேன் ....
நீ மூச்சை நிறுத்தினாய் ...
காதல் இறந்தது ....!!!

இதயத்தில் ரோஜாவை ....
வளரவிடாமல் -எதற்கு ..?
முள்ளை வளர்கிறாய் ....?

நீடூடி வாழ்க ....
வாழ்த்துவோர் உள்ளார் ...
நீடூடி காதல் வாழ்க ...
வாழ்த்துவோர் யாரும் இல்லை ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 873
----
உன்னை காதலித்து ...
நானும் கற்றுகொண்டேன் ....
எப்படி வலிக்காமல் ....
மறப்பதென்று ....!!!

உன்னை நினைக்காமல் ....
கவிதை எழுத முயற்சித்தேன் ...
வெற்றிபெற்றது -நீ 

இக்கரைக்கு 
அக்கரை பச்சை - நீ 
அடிக்கடி இப்படிதான் ,,,
ஏமாற்றுகிறாய் ,,,,,
ஒருமுறை என்னை 
காதலித்துப்பார் ,,,,
பலஜென்மம் என்னை ...
காதலிப்பாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 874
------
ஓராயிரம்... 
நினைவுகளுடன் ....
ஆழமான துயரத்துடன்...
நிகழ்ந்து விட்டது ...
நம் பிரிவு......!!!

நீ
என்னை மறந்து போய்
நினைத்திருக்கலாம் 
இப்போதான் உனக்கு ...
காதல் புரிந்திருக்கும் ....!!!

ஒப்பாரி என்றால் என்ன ...?
இப்போது புரிந்தது எனக்கு ...
உன் ஒவ்வொரு செயலும் ...
என் காதலுக்கு ஒப்பாரிதான் ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 875

-------
காதல் மலர் போல் ....
காலையில் அழகாய் ....
மாலையில் வாடிவிடும் ....
என்றாலும் காதல் ...
அழகும் மென்மையும் ....!!!

மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
நீ உள்ளூர் மயானத்தில் ...
நான் வெளியூர் மயானத்தில் ....!!!

உன்னைப்போல் காதலிக்க ...
தெரியாத உள்ளமும் ஒரு ....
அங்கவீனம் தான் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 876

-----
இறந்த காலம் தான் ....
இனிமையான காலம் ....
இனிமையாய் நீ பேசி ....
இளமையை ரசித்தேன் ....
இப்போ தனிமையில் ....!!!

உனக்காய் வாழ்வேன் ...
உறுதியாய் கூறினாய் ....
உயிரை மறந்து வாழ்ந்தேன் .....
உயிர் வலிக்கிறது இப்போ ....!!!

அன்பே என்றாய் ....
அனைத்தையும் இழந்தேன் ....
ஆருயிரே என்றாய் ....
ஆவியாய் அலைகிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 877
--------
கண்ணில் பட்டு கதலானாய் ....
கல்லறைவரை தொடருமென்றாய்....
கண்மூடி தனமாய் நம்பினேன் ...
கண்ணீர்தான் இறுதி பரிசு ....!!!

கிட்டவா காதல் பரிசு தா ....
கிள்ளி விட்டு போனபோது ....
கிள்ளியது என் இதயம் என்பதை ....
கிட்டிய காலத்தில் நீ திட்டியபோது ....
கிறுக்கணுக்கு புரிந்தது ....!!!

காத்திருந்தேன் கவிதை வந்தது ....
காணாமல் போனாய் கவிதை வந்தது ....
காதல் பைத்தியம் என்றார்கள் ....
காதலித்து பாருங்கள் புரியும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 878
-----
வானவில்லில் ஏழுநிறம் ....
வானத்து அழகியே உனக்கும் ...
வானவில் குணமோ ....?
வா என்கிறாய் போ என்கிறாய் ....?

விட்டில் பூச்சியை ....
விளக்கம் காட்டினேன் ....
விதி எனக்கும் சரியானது ....
விதி மதி இரண்டும் இழப்பாய் ....
காதலித்துப்பார் ....!!!

வீறாப்புடன் ....
வீட்டை எதிர்த்து காதல் செய்தேன் ....
வீதியில் நிற்கிறேன் உன்னை இழந்து ...
காதல் கண்னை மறைக்கும் ...
உறவையும் மறக்கும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 879
-----
எட்ட 
முடியாத காதலர் நாம் .....
சூரியனும் சந்திரனாய் ...
வானமும் நிலமுமாய் ...!!!

காதலை விதைத்தேன் ...
வதையாகும் உணர்ந்தேன் ...
காதல் ஆழ்கடல் -நீ 
துறைமுகம் ....!!!

நான் 
வெறும் நெருப்பு ...
நீயே வெப்பம் ...
நீயே ஒளி....
நீயே கரி ....
நீ தணல் .....
அணைந்து விடாதே ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 880

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்