முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் 20 - 30

காதலின் ..
கல் வெட்டு ....
திருமண அழைப்பிதழ் ....!!!

காதல் 
ஒரு முக்கோணம் .....
எந்தப்பக்கம் ....
உடைந்தாலும் ....
குப்பைதொட்டி ....!!!

உனக்காக வாழ்ந்தேன் ....
காதல் இனித்தது ....
உனக்காகவே வாழ்ந்தேன் ....
உவர்க்கிறது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 21
----------

தென்றல் காற்றாய் ....
வீசிய நீ 
எதற்காய் கண்ணில்...
தூசியை கொட்டினாய் ...?

காட்டாறு வெள்ளம் -நீ 
கொஞ்சம் இரக்கப்படு....
சிறு படகாக உன்னில் ....
மிதக்கிறேன் ....!!!

எனக்கு நீ மட்டுமே ...
உனக்கு நான் ...?
நான் மட்டுமா ....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 22

--------

ஈரமான நாக்கில் 
எரிகிறது ...
காதல் வார்த்தை .....!!!

காதல் ஒரு 
பயிரிடல் பருவம் ...
அறுவடை ...
திருமணம் ....!!!

உன் மனதில் ...
வில்லனாக நான் ...
தூக்கி எறிந்து விடாதே ...
வலியை நீயும் ....
சுமக்க வேண்டும் ...!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 23

-----------

காதலாலும் உன்னை ....
காணமுடியும் .....
கண்ணீராலும் உன்னை ...
காணமுடியும் ....!!!

உன்னை பார்க்க .....
ஆசைப்படும் போது ....
கவிதையால் பார்ப்பேன் ...
இல்லையேல் கண்ணீரால் ....
பார்ப்பேன் ......!!!

நினைவுகள் எல்லாம் .....
தண்ணீர் போல் ஆவியாகி ....
கண்ணீராய் மழை போல் ....
கொட்டிக்கொண்டே இருக்கிறது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 24

----------

உன்னை காதலித்தது ...
முதல் என் ஆயுள் ரேகை ....
தேய்த்துக்கொண்டே ......
வருகிறது ......!!!

காதலில் கண்ணீர் ...
வரவில்லையென்றால் .....
இன்பமில்லை .....!!!

காதலில் சொல்லுவதை ....
சொல்லவேண்டும் ....
சொல்லாததை சொல்ல ...
கூடாது .....
அந்த வார்த்தை எது ...?
என்பது புரியாத புதிர் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 25

-------------

உன்முகம் .....
பூரண சந்திரன் ....
வார்த்தைகள் சூரியன் ...
நம் காதல் சிலவேளை 
குளிர்கிறது .....
சுடுகிறது .....!!!

இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!!!

காதல் குயவன் ....
கையில் பானைபோல் ....
அழகாக வடித்தால்....
அழகுதான் ,.........!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 26

------------

உன் நினைவுகளின் ....
எண்ணங்களோடு ....
தூங்கினேன் -நீ 
கனவில் கூட வரவில்லை ....!!!

காதல் 
நிறைந்த இடத்தில் ....
வாழ பொருத்தமில்லாதவள் ....
காதலே இல்லாத இடத்தில் ....
உன்னை சேர்த்து விடுகிறேன் ....
என்னோடு வந்துவிடு .....!!!

நான் 
விடுவது கண்ணீர் ....
என்று நினைக்கத்தே ....
நீ தந்த நினைவுகள் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 

கஸல் கவிதை 27

-------------

உன்னை காதலிக்கும் ....
போதே கற்று விட்டேன் .....
நீ தரும் வலியை எப்படி ....
சுமப்பதென்று .....!!!

உனக்கு என் ஞாபகங்கள் ....
பறக்கும் பஞ்சு ....
எனக்கு தலையணை பஞ்சு ....
தினமும் அதில் தூங்குகிறேன் ....!!!

காதல் இரு வழி பாதை ....
எனக்கோ இரு வலி பாதை ....
உன்னையும் சுமக்கிறேன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 28

-------------

நிச்சயமாக நீ 
என் நினைவுகளால் ....
வதைக்கப்படுகிறாய் ....
இங்கு என் இதயம் ...
கண்ணீர் விடுகிறது ....!!!

என் இதயம் ....
வீதியோர சுமைதாங்கி ....
இறக்கிவை உன் சுமையை ...

காதல் ...
ஊதும் பலூனுனை போல் ....
அளவாக காற்றை ....
ஊதவேண்டும் .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 29

-------------

உன் 
இதய சிறை கைதி நான் ....
நினைவுகளால் மீண்டும் ...
விலங்கிடாதே .....!!!

உன் பார்வையால் ...
கவிஞனாகினேன் ....
நீ காதலித்தால் ...
பித்தனாகிவிடுவேன் ....!!!

உன் கண்ணில் காதல் ....
இல்லை - கண்ணாடியை ....
பார் உன் கண்ணுக்குள் ....
நான் இல்லை .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 30

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்