கவிப்புயல் இனியவன் கஸல் 890 - 900

நான் 
கரையோர நண்டு .....
நீ எழுந்து விழும் அலை ....
மீண்டும் உள்ளே இழு ...!!!

காதல் படகில் தனியே ....
பயணம் செய்து என்ன ...?
சாதிக்கபோகிறாய்....?

பட்டபகலில் ....
நிலாபாடல் கேட்கிறாய் ....
நடு இரவில் சூரிய உதயம் ....
பார்க்கணும் என்கிறாய் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 891

-----
என்னமோ புரியல்ல ....
உன்னை நினைக்கும்போது ...
கண்ணீருடன் கவிதை ...
அருவியாய் வருகிறது ....!!!

உனக்கு காதல் குப்பை ...
எனக்கு காதல் குண்டுமணி ....
தண்டவாளமாய் ......
பயணிக்கிறோம் ....!!!

உன்னில் 
ஒரு திறமை இருக்கிறது .....
நீ சிரித்துகொண்டே ...
என்னை அழவைப்பதில் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 892
----------
என் 
காதல் சமாதியாகிவிட்டது....
உன் நினைவுகள் கல்லறை ...
சுவராய் நிறுவியிருக்கிறேன் ...!!!

காதல் தோற்காது ....
என்னை கவிஞனாக்கியதே ...
வரிகளில் காதல் ...
வாழ்ந்துகொண்டே இருக்கிறது ....!!!

நீ என் காதலை ....
நிராகரித்ததிலிருந்து....
என் வீட்டு மலர்கள் ....
கருகிகொண்டு வருகின்றன ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 893
----------
காதலுக்கு 
உன் கண் தூண்டில் ....
என் இதயம் அகப்பட்ட ...
மீன் ....!!!

உனக்கு புரியாது ....
என் இதயம் உன்னைவிட ...
வலிமையானது ....
இத்தனை வலிகளை..
சுமக்கிறது ....!!!

உன் 
காதல் விசித்திரமானது ....
தண்ணீராகவும் இருகிறாய் ...
வெநநீராகவும் இருகிறாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 894
-----------
நீ நிழல் ...
என்னை விட்டு ...
விலகுவதுமில்லை .....
எப்போதும் என்னோடு ...
இருப்பதுமில்லை ...!!!

கட்டை விரலை ...
இழந்த ஏகலைவன் போல் ...
காதல் அம்பிருந்தும் ...
எய்ய முடியவில்லை ...!!!

நீ என்னில் இருக்கும் ...
நொடிகளில் நான் இறக்கிறேன்...
நீ என்னில் இல்லாதபோது ...
உயிர்க்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 895
---------
வா ....
காற்றோடு கலந்து ....
விண்ணோடு மறைந்து ...
நிலவோடு காதல் செய்வோம் ...!!!

காதல் உன்னை கண்டால் ...
கண் மூடிகொள்கிறது...
உன்னை பிடிகவில்லையாம் ...!!

நீ காற்று ...
எப்படி வீசுவாய்....?
பயமாக இருக்கிறது ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 896
-------------
நீ தீபமாய் இரு ....
அப்போதும் நான் ....
விட்டில் பூச்சியால் ....
உன்னால் இருப்பேன் ...!!!

என் 
கண்ணீர்த்துளிகள் ...
வைரக்கல் போல் தெரிகிறதா ...?
அப்போ உனக்காய் ....
நான் அழத்தயார்....!!!

நீ 
கற்பனையாய் இரு ....
அப்போதுதான் எனக்கு ....
கவிதை வரும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 897
----------
நீ காற்று ....
எப்படி வருகிறாயோ ...?
ஆனால் வருகிறாய் ....
நீ இல்லாமல் எப்படி ....?
வாழ்வது ...?

நான் 
கண்ணீர் விட்டதை ....
புற்கள் பனித்துளியாய் ....
எடுத்துவிட்டன .....!!!

நான் மூச்சு ...
விட்டதை பஞ்சுகள் ...
உல்லாசமாய் எடுத்து ...
மகிழ்கின்றன ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 

தொடர் பதிவு கஸல் - 898
------------
தத்தளிக்கிறேன் ....
என்னை காதலில் இருந்து ...
காப்பாற்று ....!!!

எனக்காக 
வாழ ஆசைபடுகிறேன் ....
என்னை விட்டுவிடு .....!!!

நான் சிறுகதை ....
எழுதுகிறேன் -நீ 
தொடர்கதையாய் ....
வர ஆசைபடுகிறாய்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 899
--------
உன்னை ....
காதலித்ததால் ....
எனக்கு விஞ்சியது ....
ஒன்றே ஒன்றுதான் ....
கவிதை ....!!!


பூக்களால் கவிதை ....
எழுதுகிறேன் ....
சோகத்துடன் வாசிக்காதே ....
பூக்கள் அழுதுவிடும் ....!!!


நீ 
எதை பேசினாலும் ....
அதில் அர்த்தமில்லை ....
அர்த்தமாக்கவே ....
கவிதை எழுதுகிறேன் ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 900

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்