முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் 40 - 50

காதல் ஒரு ....
மந்திர உலகம் .....
சிரிப்பில் தோன்றி ....
கண்ணீரில் முடியும் ....!!!

பேசாமல் இருந்தபோது ....
காதல் இனித்தது ....
பேசினாய் - காதல் .....
வெறுத்து விட்டது ......!!!

உன்னை கண்ணில் .....
தேடுகிறேன் ....
நீ கண்ணீரில் வந்து .....
போகிறாய் ......!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 41

---------

மின்னலை பார்த்தால் .....
கண் கெட்டுவிடும் ....
என் கண்ணில் நீ ....
பட்டாய் நான் .......
பட்டுவிட்டேன் ....!!!

மதுவை விட போதை நீ .....
மது உயிரை குடிக்கும் ....
நீயோ............ 
உயிரை வதைக்கிறாய் .....!!!

காதலை .....
ஆரம்பித்ததும் நீ ....
முடித்ததும் நீ ......
நான் என்ன பாவம் ....
செய்தேன் ......?

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 42

------------

நீ 
யாருக்காகவோ ....
பிறந்தவள் என்றாலும் .....
நான் ....
உனக்காக பிறந்தவள் ....!!!

காதல் தோல்வி ....
கண்டவர்களின் .....
பட்டியலில் என் ...
பெயர்தான் முதல் .....
நீயும் தப்பமுடியாது .....!!!

காதலுக்கு ....
அழகழகான முகமூடி ....
விற்பவள் - நீ ........!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை  43

-----------

இதயத்தை சிதைப்பது .....
எப்படியென்பதை .....
உன்னிடம் ....
கற்று கொள்ளப்போகிறேன் ......!!!

காதலர் தினத்தை .....
கொண்டாடும் காதலர்களே ......
காதல் தோல்விக்கு .....
எப்போது நாள் .....?

உன்னிடம் காதலை .....
சொல்லாமல் விட்டிருந்தால்.....
சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை - 44

------------
காதலில் நான் ......
மூலவேர் - நீயோ.....
இலை ஒரு நாள்.....
உதிர்ந்து விழுவாய்........!!!

நீ
பனிக்கட்டியில் உருவாகிய.....
கப்பல் தெரியாமல் உன்னில்......
பயணம் செய்துவிட்டேன்.......!!!

என் காதல் தீபமே........
உன்னை அணைத்தேன்........
அணைந்தே விட்டாயே......!!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 45

-----------

நீயும் காதல்......
சிறகு கொண்ட பறவை.....
பருந்தல்ல......
என்னோடு பறந்து வர.....
தயங்குகிறாய்.....!!!

காதலில் 
அதிகமாக எரியாதே....
சாம்பலாகி விடுவாய்
உலகம் ஊதியே மறைத்து....
விடும்............!!!

காதலை ....
உண் - உன் காதல்.....
நம் காதல் ஆகிவிடும்....!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 46

-----------

இதயத்தின் வேலை .....
துடிப்பது மட்டுமல்ல....
துடிக்கவும் வைக்கணும்.....!!!

எவ்வளவு தான் ....
உன்னை சுற்றி வந்தாலும்....
நிமிட முள் போல்......
நீதான் முந்திக்கொண்டு
செல்கிறாய் என்னை ......
கவனிக்காமல்.......!!!

இதயத்துக்குள்.....
காதல் யாரையும் கேட்டு.....
வருவதில்லை......
அப்புறம் எதற்கு......
போகும்போது 
கவலைப்படுகிறீர்கள் ......!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 47

-----------

உன் 
தலை குனிவின் .....
அர்த்தமென்ன....
வெட்கமா....?
வெறுப்பா.....?

காதலால்.....
கோலம் போடும் ....
போதெல்லாம்.......
கண்ணீரால்.......
அழித்துவிடுகிறாய்......!!!

காதலை...
மறைத்து மறைத்து....
வைத்தே மறைந்து....
போய்விட்டாய்......!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 48

-------------

எதிரும் புதிருமாய் .....
காதலில் பேசினாய் ....
நீரும் நெருப்புமாய் ....
அணைந்துவிட்டோம் ....!!!

முள்ளும் மலருமாய் .....
உன் நினைவுகள் .....
இரவும் பகலும் .....
வந்து கொல்கிறது.........!!!

வாழ்க்கை 
மேடு பள்ளம் தான் ....
அதற்காக பள்ளத்திலேயே .....
வாழ்வதா ......?

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 49

-------------

சொற்களால் ....
கவிமாலை தொகுக்கிறேன் .....
நீ 
இதழ்களாய் உதிர்கிறாய் ....!!!
உன் 
புன்னகை அவ்வளவு ....
கொடுமையா ......?
இதயத்தில் ஒளியே ....
இல்லாமல் போகிட்டுதே ....!!!
நீ 
என்னை நோக்கி வருகிறாய் .....
என் இதய கதவு தானாக 
முடுக்கிறது .....!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 50

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்