முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் 60 - 65

நம் காதல் 
சுவடு கடற்கரை 
மணலில் இருக்கிறது 
எப்போ வேண்டுமென்றாலும் 
அழிக்கப்படலாம்......!!!

உன்னை விட .....
காதலர்கள் தான் 
என் கவிதையை ....
ரசிக்கிறார்கள் ........!!!

மூச்சாக இருப்பதே ....
காதல் மூசசு திணற ....
வைப்பது காதல் அல்ல .....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 61


---------

காதல் அலைந்து ...
திரிகிறது .....
உண்மை காதலருக்குள் ....
குடி கொள்ள .....!!!

நீ 
காதல் தரவில்லை 
காதல் தான் உன்னை 
எனக்கு தந்தது .....!!!

காதல் பூ 
பூக்கும் போது பறிக்க ......
தவறி விட்டேன்......
இப்போ வாடுகிறேன் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 62


-----------
கவிதைகள்
காயப்படுத்தி....
இருந்தால் ........
என்னை .....
மன்னித்துவிடு......
எல்லா நேரமும் ..........
கற்பனையில் ...............
எழுதமுடியது ....!!!

உனக்கு 
நான் தந்த .....
திருமணபரிசுபோல்.....
யாரும் தரமுடியது.....
என்னையே விட்டு .....
கொடுத்துவிட்டேன்........!!!

காதலின் பனிதுளி.....
கண்ணீர் .........
நிலாவின் கண்ணீர்......
பனித்துளி.........!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 63


---------

நீ
ரோஜா ஐயமில்லை
இதழா..? முள்ளா...?
அதுவே ஐயம்....!!!

என்னை
காதலித்தால்......
கவிதைவரும்.....
கத்தரித்தால்......
கல்வெட்டு வரும்.....!!!

உன் 
விருப்பப்படி....
கண்ணுக்கு படாத.....
தூரத்துக்கு சென்று....
விட்டேன் -என்
விருபபப்படி.........
இதயத்திலிருந்து.....
எடுத்துவிடு.......!!!


&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 64


------------

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம் 
-------------------------------------------------------

பலருக்கு கஸல் கவிதை என்றால் என்ன ...?
என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது .அதை புரியாமல் 
வாசித்தால் இந்த கவிதையில் சுவாரிஸம் இருக்காது .
பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை 
முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் )

இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும் 
( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும் 
மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது .

அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது 
ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-)
3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது 
ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் ....

உதாரணத்துக்கு ஒரு கவிதை 
-----
வலமிருந்து ....
இடமாக காதல் ...
தேவதையை சுற்றி ....
வரவேண்டும் .....(+)
நம் காதல் தோஷம் ....
இடமிருந்து வலமாக ....
சுற்றுகிறேன் .......!!!(-)
----- 01
வாடி விழும் பூவின் ....
நெத்து மரமாகி ....
மீண்டும் பூக்கும் ...(+)
நீ வாடித்தான் ....
விழுந்தாய் ......
பூவின் மென்மை கூட .....
உன்னில் இல்லை ....!!!(-)
-----02
அடுத்த ஜென்மத்தில் ....
என் இதயத்தை ....
ஈரமாக படைக்காதே ...(-)
வீரமாக படைத்து விடு ....!!!(+)
-----03
&
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்