இடுகைகள்

அக்டோபர் 14, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே இனியவன் - கஸல் 100

நீ வெயிலா மழையா சொல்லிவிட்டு போ...? நான் சிலந்திபோல் உன் நினைவுகளால் வலைபின்னுகிறேன் நீயோ - சிலந்தியாய்  என்னை விழுங்குகிறாய் நான்  மரணத்திலிருந்து தப்பிவிட்டேன் ... உன் வலியில் இருந்து தப்ப முடியவில்லை ....!!! + கே இனியவன் - கஸல் 100

கே இனியவன் - கஸல் 99

இப்போது நான் கல்லூரிக்கு போவதில்லை -நீ கல்லறைக்கு எப்படி ..? போவது என்று .... பயிற்சி எடுக்கிறேன் ....!!! என் கையெழுத்தில் முதல் எழுத்தே -உன் எழுத்தாக மாறிவிட்டது....!!! என் கவிதையை .... இரக்கம் இல்லாமல் ... எரித்து விட்டாய் .... எறிந்த சாம்பல் கூட என்மீதிவிழுந்து -உன் நாமத்தையே உச்சரிக்கிறது ....!!! + கே இனியவன் - கஸல் 99

கே இனியவன் - கஸல் 98

நீ யாழ் வாசித்திருந்தால் என் ஊரின் பெயரில் உன்னை அழைத்திருப்பேன்... நீயோ காளியாய் இருகிறாய் ....!!! இசையில் அருமையான இனிமைகள் இருக்க -என்னை சோககீதம் பாட சொல்லுகிறாய்.... சோகம்தான் உனக்கு சொத்தோ ...? காதல் இசையை போன்றது தன்னை மறந்து சிரிக்கவும் செய்யும் -அழவும் செய்யும்....!!! + கே இனியவன் - கஸல் 98

கே இனியவன் - கஸல் 97

குற்றுயிரும் ... குறை உயிருமாய் .... வைத்திய சாலையில்.... இருக்கிறேன் -உன் கண்பட்டதால் ...!!! நான் காதலில் கர்ணனாக இருக்கிறேன் -நீ கண்ணனாக வந்து காதலை தானம் கேட்கிறாய்....!!! காதலுக்கு இன்பமாக கட்டிய காவியக்கட்டிடம் எங்கே உள்ளது ...???  + கே இனியவன் - கஸல் 97

கே இனியவன் - கஸல் 96

என்  மனம் உன் பார்வையால்.... உடைந்து சுக்குநூறாகி விட்டது .... கவலைப்படவில்லை...... உடைத்தது நீ.....!!! என்  காதலில் மின் சுழற்சியில் வருவதுபோல் வருகிறாய் எப்போது நிரந்தரமாக‌ வரப்போகிறாய் ...? உன்  அன்பு உன்னையும் கடந்து என்மீது பட்டதால்தான் இந்தவலி....!!! + கே இனியவன் - கஸல் 96

கே இனியவன் - கஸல் 95

காதல்  புற்கலாக‌... வளர்கின்றேன் ... பசுவாக‌ நின்று.... மேய்கிறாய்.....!!! கண்சிமிட்டும் நேரம் பார்த்துவந்தாய் புகைப்படமாக‌ உன்னை வைத்திருக்கிறேன் இதயத்தில் கண்ணில்....!!! உன்னை இனிபார்க்க‌ துடிக்க‌ மாட்டேன் இதயத்தில் இருகிறாய் .... வெளியேறும் வரை .... நீயே என்னை பார் ....!!! + கே இனியவன் - கஸல் 95