கவிப்புயல் இனியவன் கஸல் 540 - 560
என் ஒவ்வொரு வரியும் உன்னை பற்றிய துடிப்புக்கள் நீ தவிக்காமல் இருக்கிறாய் காதலி இல்லாமல் நான் வாழ்வேன் -காதல் இல்லாமல் உன்னைப்போல் வாழமுடியாது உன் காதல் கண்ணாடி என் காதல் கருங்கல் நானே உடைந்து விட்டேன் காதல் வலியால்....!!! கஸல் 541 ---- காதலுக்கு நீஅழகு கவிதைக்கு நான் அழகு எப்படி காதல் அழிந்தது ...? நீ வலது கண் நான் இடது கண் நம் காதல் குருடானது காதலர் விடும் மூச்சு பூவுலகில் பூக்கும் பூக்கள் காதலியே உன் மூச்சின் வெப்பம் என்னையே கருக்கி விட்டது .....!!! கஸல் 542 --------- உன்னை கண்டிருந்தால் காதலித்து இருக்க மாட்டேன் உன் கண்னை கண்டு தொலைத்து விட்டேன் .....!!! உன்னால் நான் மனிதன் ஆகிறேனோ தெரியாது கவிஞன் ஆவேன் நீ என்னில் உரசினால் காதல் வந்திருக்கவேண்டும் கண்ணீர் எப்படி வந்தது ...? கஸல் 543 ---------- நீ கண்ணில் தோன்றி கண்ணில் முடியும் காதலை விரும்புகிறாய் -அது எனக்கு வேண்டாம் ....!!! கன்ணில் தோன்றி வார்த்தையில் முடியும் காதலும் வேண்டாம் ....!!! காதல் உன்னிடத்தில் வந்திருக்க வேண்டும் நீ என்னிடத்தில் வந்து விட்டாய் காதல் வரவில்ல...