கவிப்புயல் இனியவன் கஸல் 270 - 280

என் கனவை நான் 
வெறுக்கிறேன் 
உன்னை தவிர 
வேறு எதுவும் 
வருவதில்லை ....!!!

உனக்கு புரியும் 
என்று கவிதை 
கவிதை எழுதுகிறேன் 
நீ 
வாசிக்க மறுக்கிறாய் ....?

ஓய்வில்லாமல் 
இயங்கும் இதயம் நான் ..
உணர்வே இல்லாத உதிர்ந்த 
முடி நீ ....!!!

கஸல் 271

----

நான் வரும் போது ...
நீ மறைக்கிறாய் 
நீ வரும்போது .....
மறைக்கிறேன் ...
சூரிய சந்திரன் போல் ...!!!

அருகில் இருக்கும் 
போது அனலாய்
கொதிக்குது -உன் 
நினைவு ....!!!

இதயம் என்ன ..?
பலூனா .?
நீ ஊதி விளையாட ...?

கஸல் 272

-----

இதயத்தில் ..
இருக்கும் உன்னை 
தேடிப்பார்க்கிறேன் 
எங்கிருக்கிறாய் ....?

கவிதை எழுதும் நேரம் 
உன்னை மறக்கிறேன் 
கவிதை தானாக வருகிறது 

காதலில் ஓடி 
விளையாடியது நீ
தடக்கி விழுந்தது -நான் 

கஸல் 273 

----

விளக்கும் 
வெளிச்சமும் 
எப்படி பிரியும் ...?

தாமரை திரியோ 
வாழைதண்டு திரியோ 
நீ வெளிச்சம் தந்தால் சரி 

வண்டியின் இரு 
சக்கரம் காதல் 
நீ சிறிதாக இருக்கிறாய் ...!!!


கஸல் 274

----

என் காதல் 
இருட்டு -எப்படி ?
நிழல் வரும் ...!!!

நீ என்னோடு 
இருக்கும் நேரம்
நான் மூச்சு திணரும் 
நேரம் 

காதல் பட்டத்தை 
ஆசையுடன் ஏற்றினேன் 
அறுந்து விட்ட நூல் 
நீ 


கஸல் ;275

----

எனக்கு 
காதல் சோகம் 
உனக்கு கதை 

தனியே இருந்து 
அழுதேன் 
உன் கை துடைத்து 
விடுகிறது 
நினைவில் ...!!!

நினைவில் 
மறந்தேன் 
கனவில் வருகிறாய் ....!!!

கஸல் ;276

-----

சன கூட்டத்தில் 
ஆயிரம் கண் 
தேடும் -நான் 
உன்னை தேடுகிறேன் 

காதலில் -நான் 
நாகம் -நீ 
கழுகு 

கனவில் இரவில் 
தேடுகிறேன் 
நீ 
நினைவில் 
பகலில் தேடுகிறாய் ...!!!

கஸல் 277

-----

என் 
காதல் இருட்டறை 
நீ 
சின்ன தீப்பொறி 

என் 
காதல் கீதம் இன்பம் 
நீ சோக கீதம் 

மூழ்கும் படகில் 
உயிர் போகிறது 
நீ முத்தெடுக்க
சொல்கிறாய் 

கஸல் 278

-----

காதலில் 
உயர பறக்கிறேன் 
நீ 
இறக்கையை 
உடைக்கிறாய் 

காதலில் 
பாம்பின் வாயில் 
உள்ள தவளை நான் 

காதல் தீபம் 
காட்டுகிறேன் -நீ 
ஊதியணைக்கிறாய் 

கஸல் 279

----

கண் காதலுக்கு 
உனக்கு 
கண்ணீருக்கு ...!!!

உன்
நினைவுகள் 
அழுகை 
கனவுகள் 
இன்பம் 

காதலில் பால் 
நான் ...!!!
நீ 
புளிக்கும் தயிர் ...!!!


கஸல் 280

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்