கவிப்புயல் இனியவன் கஸல் 360 - 370

மறந்த காதல் 
என்ற ஒன்று இல்லை 
மறக்க கூடிய காதல் 
இதுவரை வரவில்லை ....!!!

இளநீருக்குள் உள்ள 
தண்ணீர் போல் 
என் இதயத்துக்குள் -நீ 

வார்த்தையும் 
இசையும் சேர்ந்தால் 
பாடல் வரவேண்டும் 
உனக்கு ஏன் இன்னும் 
வரிகள் கூட வரவில்லை ...?

கஸல் ;361

--

பூக்களும் 
முற்களும்
கலந்த நினைவு 
கலவைதான் 
காதல் .....!!!

காதலுக்குள் 
நீந்தி கரை சேர்ந்தவர் 
யாருமில்லை ....!!!

நான் 
கடலாக இருந்தால் 
நீ 
அலையாக 
இருக்க வேண்டும் 
மணலாக இருக்கிறாய் ...!!!

கஸல் ;362

---

நிலாவை தூக்கத்துக்கு 
பயன் படுத்தினார் -தாய் 
துக்கத்துக்கு 
பயன்படுத்துகிறாள் 
காதலி .....!!!

நீ வரும் வழியில் 
காத்திருக்கிறேன் 
நீயோ வெளியே 
வரமறுக்கிறாய் ....!!!

உன் வரவு 
கனவுதான் -உன் 
செலவு கண்ணீர்தான் ...!!!

கஸல் 363

---

நம் காதல் 
அமர்முடுகளில் செல்ல 
வலிகள் ஆர்முடுகளில் 
செல்கிறது ....!!!

காதல் ஒன்றும் 
விஞ்ஞானம் இல்லை 
நிரூபித்துக்காட்ட ...!!!
நம் ஞானம் ....!!!

காதல் எனக்கு 
விடியல் காலை 
உனக்கு அந்திநேரம் ....!!!

கஸல் 364

----

உன்னை 
பார்க்காமல் 
போக முகத்தை 
திருப்பினேன் 
இதயம் உனக்கும் 
கைகாட்டுகிறது ...!!!

பூக்களை தேடித்தான் 
தேனிவரும் 
முற்களையல்ல...!!!

காதல் கிணறில் 
இருந்து ஊற்று 
வரவேண்டும் -இங்கு 
காற்று வருகிறது ....!!!

கஸல் 365

----

காதலை விடுவதும் 
கவிதையை விடுவதும் 
உன்னை விடுவதும் 
ஒன்றுதான் ......!!!

சந்தனக்கட்டையில் 
வாசம் வரவேண்டும் 
இங்கு விறகுதான் 
வருகிறது .....!!!

தண்ணீரில் உப்பை 
கொட்டுவதும் ஒன்றுதான் 
உன்னை காதலிப்பதும் 
ஒன்றுதான் ....!!!

கஸல் 366

----

கண்ணால் ஓவியம் 
வரைந்தவள் 
ஓலமிடிக்கிறாள் ....!!!

காதல் ஒரு கணிதம் 
வேதனை கூட்டல் 
போதனை கழித்தல் 

உன்னை கண்டநாள் 
முதல் -என் கவிதை 
அழுகிறது ....!!!

கஸல் 367

---

நீ 
வைரக்கல் 
வடிவாகவும் 
விசமாகவும் 
இருக்கிறாய் ....!!!

ஞாபங்கள் எனக்கு 
கற்கள் -உனக்கு 
பஞ்சு .....!!!

நீ  என்னை விட்டு 
விலகமுதல் -உன் 
நினைவுகள் என்னிடம் 
உறங்கிவிடுகின்றன ....!!!

கஸல் ;368

----

தெரிந்தும் 
தொலைவதுதான் 
காதல் ....!!!

நினைவுகள் அழியாது 
கனவுகள் குலையாது 
உண்மைக்காதல் ...!!!

உலகமே நாடக களம் 
அதில் காதலர்கள் 
காமடி நடிகர்கள் ....!!!

கஸல் 369

----

உணர்வைப்போல் 
உனக்கும் 
வரைவிலக்கணம் 
இல்லை ....!!!

உடலில் எங்கு
இருக்கிறது உயிர் ...?
இதயத்தில் எங்கு 
இருக்கிறாய் நீ ....?

என் கண்ணில் 
இருக்கும் நீ 
ஏன் கண்ணீராய் 
வெளியேறுகிறாய்...?

கஸல் 370

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்