கவிப்புயல் இனியவன் கஸல் 370 - 380

நான் படிக்கும் பாடம்
உன்னைப்பற்றிதான்
முடிந்த பாடில்லை ....!!!

சூடு கண்ட பூனை
அடுப்பங்கரையை
நாடாது என்ற பழமொழி
காதலுக்கு பொருந்தாது ...!!!

முழு நிலா நீ
உன்னை பார்த்து ரசிக்க
துடிக்கிறேன்
நீ
நண்பகல் தான்
வருவேன் என்கிறாய் ....!!!

கஸல் ;371

----

நம் காதல்
வெங்காயத்தை போன்று
ஒன்றுமே இல்லை ....!!!

கண்னை கட்டிக்கொண்டு
கூட கரை சேர்ந்துவிடுவேன்
உன்னை கட்டிக்கொண்டு
முடியவில்லை ...!!!

நிச்சயம் நீ காதல்
பறவைதான்
சோடியை விட்டு
பறக்கிறாய் .....!!!

கஸல் 372

----

காற்றின் இசையை
கேட்கவைத்தவள்
காதல் இசையால் ....!!!

உன்னை உன் கண்னால்
நான் பார்த்தால் -நீ
அழகில்லாமல் எப்படி
இருப்பாய் .....!!!

காதல் கரும்பால்
செய்யப்பட்டது
நீ கசக்கிறாய் .....!!!

கஸல் ;373

----

புயலின் சேதத்தை விட
உன்னால் வந்த காதல்
சேதம் அதிகம் ....!!!

ரோஜாவின் ஒவ்வொரு
இதழும் அழகு
சேர்ந்திருந்தால்

கற்பனையில் தான்
கவிதை வரும்
கல்லறையின் இருந்து
கவிதையை எதிர்பார்க்கிறாய்

கஸல் 374
-----

நிலவை பார்ப்பதும்
உன்னை பார்ப்பதும்
தூரமாக இருக்கிறது ...!!!

நீ அசைத்தால்
அசைவதற்கு
நான் கொப்புஅல்ல
மரம் ........!!!

கப்பலில் போய் கரையை
அடையலாம் -நீயோ
கட்டுமரத்தில் தான்
போய் கரையை அடைவேன்
அடம்பிடிக்கிறாய் .....!!!

----
கஸல் 375

நிலவை பார்ப்பதும்
உன்னை பார்ப்பதும்
தூரமாக இருக்கிறது ...!!!

நீ அசைத்தால்
அசைவதற்கு
நான் கொப்புஅல்ல
மரம் ........!!!

கப்பலில் போய் கரையை
அடையலாம் -நீயோ
கட்டுமரத்தில் தான்
போய் கரையை அடைவேன்
அடம்பிடிக்கிறாய் .....!!!

கஸல் 376

---
நெல் கதிர் தலைகுனிந்து
நிற்பதுபோல் -உன் அழகு
என்னை கவர்கிறது ....!!!

நாணயத்துக்கு இரு
பக்கம் போல் -உன்னை
மறப்பது
நினைப்பது ....!!!

நினைவுகளின் கூட்டம்
தான் காதல்
வலிகளின் கூட்டமாக
ஏன் உருவாக்குகிறாய் ....?

கஸல் ;377
-------
மலரை பெண்களுக்கு
ஒப்புடுவது தப்பாகி
விட்டது உன் செயல்

கடல் நீர்
இனிக்காலாம்
உன் வார்த்தை
எப்போது இனிக்கும் ...?

நீ வடக்கே நில்
நான் தெற்கே
நிற்கிறேன் அப்போதான்
ஈர்க்கும் -நீ மேற்கில்
நிற்கிறாய் ...!!!

கஸல் 378
--------
நானும் நீயும்
சேர்ந்தால்
மூன்று .....!!!

காதலுக்கு வாயில்லை
என்று யாரும்
சொல்லவில்லையே
மௌனமாய் இருக்கிறாய் ...!!!

அழகான காதல்
புடவை நீ -கட்டிக்கொள்ள
ஆசைப்படுகிறேன்
நீயோ அழுக்காக்கிறாய் ...!!!

கஸல் ;379

---

பூமாலையில் 
ஒவ்வொரு பூக்களாக 
உதிர்வதுபோல் 
உன் நினைவுகள் .....!!!

நான் பார்த்த முதல் 
பெண்ணும் நீதான் 
பார்க்கப்போகும் 
இறுதிப்பெண்ணும் 
நீதான் ....!!!

எல்லோருக்கும் 
காதல் - வாழ்க்கை 
எனக்கு உன்னால் 
வனாந்தரம் ......!!!

கஸல் 380

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்