கவிப்புயல் இனியவன் கஸல் 330 - 340

காற்றில் திரியும் 
கண்ணுக்கு தெரியாத 
தூசிபோல் -நம் 
காதல் .......!!!

கிளிக்கு தெரிவதில்லை 
பொறிவைகப்படுவது 
தான் கூட்டில் 
அடைபடுவதற்கு-என்று 
காதலைப்போல் ....!!!

பனித்துளியை புல்
நுனி சுமையாக 
நினைப்பது இல்லை 
நீ காதலை சுமையாக 
நினைக்கிறாய் ....!!!

கஸல் 331

----

உன்னை தொலைவில் 
பார்க்கும் தொலை நோக்கி 
என்னிடம் இல்லை ....!!!
அருகில் பார்க்கும் 
நுண்பெருக்கியும்-இல்லை ...!!!

இதயத்தால் பேசக்கூடியது 
பார்க்கக்கூடியது 
உன்னையும் உன் 
காதலையும் தான் ....!!!

நீ நினைப்பதை 
நான் எழுதுகிறேன் 
நான் நினைத்தவற்றை 
நீ வீசுகிறாய் .....!!!

கஸல் ; 332 

---- 

மரணத்தின் 
பின் பேசப்படுவது 
காதல் தோல்விதான் ....!!!
நாம் மட்டும் விதிவிலக்கா ...?

என் மனம் நிரம்பி விட்டது 
உன் நினைவுகளால் -இனி 
பேசிப்பயனில்லை 
உன்னுடன் ......!!!

அடிமேல் அடியடித்தால் 
அம்மியும் நகரும் ...!!!
நீ இரும்பு -எப்படி ...?
நகர்வாய் .....? 

கஸல் 333

-----

எனக்கும் உனக்கும் 
சின்ன வேறுபாடுதான் 
நான் உன்னை காதலிக்கிறேன் 
நீ காதலிக்கவில்லை ....!!!

நாள் தோறும் 
கைநீட்டுகிறேன் 
உன் நினைவுக்காக 

உன்னருகில் வருகையில் 
எட்டி உதைக்கிறது 
உன் இதயம் .....!!!

கஸல் 334

----

எனக்கும் உனக்கும் 
சின்ன வேறுபாடுதான் 
நான் உன்னை காதலிக்கிறேன் 
நீ காதலிக்கவில்லை ....!!!

நாள் தோறும் 
கைநீட்டுகிறேன் 
உன் நினைவுக்காக 

உன்னருகில் வருகையில் 
எட்டி உதைக்கிறது 
உன் இதயம் .....!!!

கஸல் 335

---


உன்னை இதயத்தில்
தேடி களைத்துவிட்டேன்
வெளியில் தேடுகிறேன் ...!!!

தங்கத்தை
உருக்கினாலும்
குணம் மாறாது
நம் காதல் போல் ...!!!

நீ
என் சுவாசம்
உனக்கு ஏன் என் மீது
அசுவாசம்....?

கஸல் 335
-------

காதல்
உன்னையும் விடாது
என்னையும் விடாது
யாரையும் விடாது
விடாது கறுப்பு .....!!!

நீ
வலியை தொடர்ந்து
தருகிறாய் அப்போ
பிரியப்போகிறாய் ....!!!

காதல் விலங்கு
பூவால் போடணும்
நீயோ முள்ளால்
போடுகிறாய் ....!!!

கஸல் 336

----

காதலில்
வலி
சிரிப்பு
சோகம்
தருபவள் நீ

கடலில் மீன்
மீண்டும் மீண்டும்
மேலே வந்து சுவாசிப்பது
போல் -உன்னை சுவாசிக்கிறேன்

கண்ணாடியில்
உன் முகத்தை தேடினேன்
நிழலாய் வருகிறாய் ....!!!

கஸல் 337

------

வானமும்
காதலும்
ஒன்றுதான்
எல்லையில் ....!!!

நடுக்காட்டில்
கண்ணை கட்டி
விட்டதுபோல்
உன் காதல்
காட்டில் நான் ...!!!

மூச்சு விட்டால்
காற்றுத்தான் வரவேண்டும்
நீ நெருப்பாய் வருகிறாய் ....!!!

கஸல் 338
----
அழிக்க முடியாத
வலி காதல்
நீ அழிக்க சொல்கிறாய் ....!!!

காதலில் உவமை அழகு
உபத்திரம் எப்படி ...?
அழகு ....?

நான் உன்னுடன்
வாழ்கிறேன் -நீ
காதலுக்காய்
காத்திருக்கிறாய் ...!!!

கஸல் ;339
----
கடலில்
உப்புத்தான் விளையும்
நீ சக்கரையை
உருவாக்கா சொல்கிறாய் ...!!!

இரு புள்ளி வேண்டும்
கோடு வரைய
நீ ஒரு புள்ளியில்
கோடு வரையச்சொல்கிறாய்

கஸல் 340

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்