கவிப்புயல் இனியவன் கஸல் 260 - 270

நீ 
வானத்தில் ஒரு 
நட்சத்திரம் 
நான் 
நட்சத்திரத்தின் ஒளி 

சிறுவயதில் ..
சாமிக்கு பயப்பிட்டேன் 
இப்போது உனக்கு ...!!!

உன்னுடன் கதைத்து 
விட்டு வரும் போது 
உடல் எல்லாம் 
சிலுக்கிறது 
மனம் காயமாகிறது ...!!!

கஸல் 261

-----

என் வீட்டு 
பூ சிரிப்பதும் 
நீ சிரிப்பது 
எனக்கு ஒன்றுதான் 

என் காதல் நினைவு 
உன் காதல் நினைவு 
எப்படி தாங்கும் என் 
இதயம் ....!!!

நீ உன் குணத்தை ..
அடிக்கடி மாற்றுகிறாய் 
ஆனால் காதல் வரமும் 
தருகிறாய் ...!!!


கஸல் ;262

-----

அமாவாசையில் 
இருந்த எனக்கு 
மூன்றாம் பிறை போல் 
காதல் கீற்றை தந்தவள் 
நீ 

சிட்டு குருவி கூட்டை 
அழகாக பின்னுவதுபோல் 
உன் நினைவுகளால் 
இதயத்தில் கூடு கட்டுகிறேன் 
உள்ளிருந்து ஊசியால் 
குற்றுகிறாய் 

ஆண் பனைமரம் 
காய்ப்பது போல் 
காய்த்திருக்கிறது 
நம் காதல் 
விதிவிலக்காய் ...!!!

கஸல் ;263

-----

உன்னை 
காதலித்த நாள் முதல் 
என் உடல் நீலமயமாகிறது 
விஷத்தால்....!!!

காதலில் கிருஸ்னன் 
நான் - நீயோ 
ஐந்து தலை பாம்பு ...!!!

உனக்கு இதயத்தால் 
கவிதை 
கண்களால் அனுப்புகிறேன் 
நீ இன்று விடுமுறை நாள் 
என்கிறாய் ....!!!

கஸல் 264

----

நீ காணாமல் 
போவதும் - நான் காணாமல் 
போவது காதல் என்பதை 
தவறாக விளங்கிவிட்டாய் 
காணாமலே போய் விட்டாய் 

உன் நினைவுகள் 
பசுவாக இல்லை 
பாயும் புலியாக 
உள்ளது

காதலில் வெற்றியை 
எதிர்பார்கிறேன் -நான் 
காதலுக்கு கல்லறை 
கட்டுகிறாய் ....!!!

கஸல் 265

-----

என் கண்ணின் 
கருவளையமும் நீ 
கரு விழியும் நீ 
கண்ணீரும் நீ 

நான் நெருப்பின் புகை 
நீ வான் வெளி காற்று 
கலந்தால் ஒன்றுதான் 

நாம் காதலை அகராதியில் 
எழுதுகிறேன் -நீ 
கல்லறையில் எழுதுகிறாய் ...!!!

கஸல் 266

----

நீ 
என்னை தயவு செய்து 
மறந்துவிடு 
அப்போதுதான் -நான் 
உன் இதயத்தில் 
நிரந்தரமாக இருப்பேன் ....!!!

காதலில் வலியும் 
தனிமையும் -காதல் 
பறவையின் சிறகுகள்
தூரமாக பறந்து செல்ல ...!!!

நீ 
என் உயிரின் வலியும் 
வலியின் இன்பமும் 

கஸல் ;267

----

நீ 
என் கைபேசி 
நிறுத்தவும் முடியவில்லை 
தொடரவும் முடியவில்லை 

நீ 
என் சூரியன் 
என் சந்திரன் 
இரவு பகலாய் 
உன் நினைவுகள் ...!!!

மலிந்தால் சந்தைக்கு வரும் 
விளைபொருள் போல் 
நாம் காதல் மலிந்துவிட்டது ...!!!

கஸல் ;268

----

நீ 
எழுத்தின் மீது 
இருக்குக் ஒற்றை விசிறி 
அதுதான் தலை குனிந்து 
நிற்கிறாய் ....!!!

நான் 
வணங்கும் தெய்வம் தாய் 
மதிக்கும் தெய்வம் நீ 

தண்ணீர் தொட்டியில் 
நீர் நிரப்புபவன் நான் 
தொட்டியுள்ளது 
கிணற்றில் நீ(ர்) வற்றிவிட்டது ..!!!

கஸல் 269

----

நீ 
அமாவாசை 
நிலவாக நான் வரும் போது 
காணாமல் போகிறாய் ...!!!

உன்னை நான் 
விரும்ப முடியாது 
உன்னிடம் இதயமில்லை 

அவசர சிகிச்சையில் 
நாம் காதல் அனுமதிப்பு 
பிராணவாயு நீ .....!!!

கஸல் ;270

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்