கவிப்புயல் இனியவன் கஸல் 340 - 350

கண்ணாடியில்
முகத்தை பார்ப்பதில் கண்ட
சந்தோஷம்
நேரில் இருக்கவில்லை ....!!!

காதல் உள்ளத்தை
தொடவேண்டும்
இங்கு உள்ளத்தை
கிள்ளுகிறதே ....!!!

வானத்தில் முகில் அசைவது
போல் உன் எண்ணம்
அசையவேண்டும்
உன் எண்ணம் சூரியனை
போல் நிலையாக உள்ளதே ...!!!

கஸல் ;341

----

ஓடும் மணிக்கூட்டில்
நிமிடகம்பி நீ
நினைவுகளும்
ஓடிக்கோண்டே
இருக்கிறது .....!!!

உன்னோடு
வாழ்வதை விட
கவிதையோடு வாழ்வது
சுகமாக உள்ளது ....!!!

உன் இதயத்தில்
குடியிருக்க விரும்புகிறேன்
நீ சிறை வைக்க
விரும்பிக்கிறாய் ....!!!

கஸல் 342

----

காதலுக்காக
உறவை மறக்கிறேன்
நீ என்னை
மறக்கிறாய் ....!!!

நிலாவில் இருக்கும்
பாட்டி உருவம் போல்
உன் உருவம் ....!!!

உன் நினைவுகள்
வானவில்லாய
வரவேண்டும்
வாளாய் வருகிறதே ...!!!

கஸல் ;343

-----

கண்ணில் பட்ட உன்
பார்வை காதலா ...?
காரியமா ...?

உன்னோடு வாழ்வதற்கு
பாடுபட்டேன் முடியவில்லை
இன்னும்
காத்துக்கொண்டிருக்கிறேன் ...!!!

காதல் ரோஜா சிவப்பு
நீ
கறுப்பு ரோஜா
கேட்கிறாய் ....!!!

கஸல் 344

----

உன்னை காதலித்தேன்
தேறியது
கவலை ....!!!

நீ சிரிக்கிறாய்
நானும் சிரிக்கிறேன்
கவிதை அழுகிறது ....!!!

நான் உன் நினையோடு
வாழுகிறேன்
நீ ஏன் சோகத்தோடு
வாழுகிறாய் ....?

கஸல் ;345

----

காதல் கொண்டேன்
காதலை -நீ
காதலிக்கவில்லை

கண்ணீரில் வரும்
பூ அழகானது
காதலித்தால் ....!!!

நான் உன்னை
விரும்புகிறேன்
நீ என்னை விரும்புகிறாய்
காதல் ஏன் நம்மை
காதலிக்க வில்லை ....!!!

கஸல் 346

----

நினைக்கின்ற போது
மட்டும் வருவதில்லை
தூய காதல் ....!!!

தான் கூட்டில்
இடம் கொடுத்த
குயில் போல்
உன் இதயத்தில்
நான் வசிக்கிறேன் ....!!!

எனக்கு காதல்
தூரபயணம்
உனக்கு தொடக்க புள்ளி ....!!!

கஸல் ;347

-----

உலகம் காதலால்
தான் இயங்குகிறது
நாம் மட்டும் என்ன ...?

உனக்காக இதயம்
துடிக்கிறது
எனக்கு உண்மை சொல்
உன் காதல்
காதல் உண்மையா ...?

நீ
கனவாக நினைப்பதை
நான் காதலாக
நினைக்கிறேன் ....!!!

கஸல் ;348

----

நினைப்பது
நடப்பது
வாழ்க்கையில்லை
வாழ்க்கை நினைப்பதே
நடக்கும் .....!!!

காதல் தோற்றதில்லை
இதயங்கள் தான்
காயப்படுகின்றன ...!!!

கண்முன் வரும் நீ
காதல் முன் வரவில்லை
வர காலம் எடுக்கிறாய் ....!!!

கஸல் ;349
----
நான் தலைவன்
நீ தலைவி
காதல் எங்கே ...?

மயில் ஆடும் போது
தோகை விரித்தால் போல்
உன் முகம் ...!!!

நான் காதலில்
இறக்கிறேன்
நீ இப்போ தான்
காதலில் பிறக்கிறாய் ...!!!

கஸல் 350

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்