கவிப்புயல் இனியவன் கஸல் 320 - 330

நன்றாக இருக்கிறது 
காதல் 
வலியாக இருக்கிறது 
உன் நினைவு ....!!!

வெளியில் சிரிக்கிறது 
முகம் 
உள்ளே எரிகிறது 
இதயம் ......!!!

கண்ணெதிரே சிரிக்காத நீ 
கண் மூடும் வேளையில் 
சிரிக்கிறாய் ......!!!

கஸல் 321

----

நிலவுக்கு மனிதன் 
போகிறான் -நிலவாக 
நீ இருக்கும் போது ...!!!

நான் உன்னில் காதலை 
தேடுகிறேன் 
நீ என்னில் இதயத்தை 
தேடுகிறாய் .....!!!

உண்மைக்காதல் -எதையும் 
தாங்கிக்கொள்ளும் 
உன்னை போல் வார்த்தையால் 
தாக்காது .....!!!

கஸல் 322

----

என் கவிதை 
எனக்கு ஆறுதல் 
உனக்கு ஆராதனை ....!!!

காதல் நூலை 
கையை விட்டுக்கொண்டு 
இருக்கிறேன் -நீயோ 
சிரிக்கிறாய் ....!!!

பத்திரிகையில் 
நான் தலைப்பு செய்தி 
நீ விளம்பர செய்தி ....!!!

கஸல் 323

----

இதயத்தில் என் 
காதல் -உனக்கு 
உதட்டில் .....!!!

நான் முகப்பு அறுந்த 
பட்டம் ஆடிக்கொண்டு 
இருக்கிறேன் 

நம் காதல் பாதையை 
மீட்டுப்பார்க்கிறேன் 
நீ -தேடிப்பார்க்கிறாய் ....!!!

கஸல் 324

----

கண்டவுடன் 
வாங்குவது 
பொருள் 
உணர்வுடன் 
வருவது காதல் ....!!!

எதையும் இழந்துவிடு 
காதலை தவிர 

நான் சுவைக்கும் நா 
நீ திட்டும் நா ....!!!

கஸல் 325

-----

வீணையுடன் வருவாய் 
என்றிருந்தேன் -நீ 
நாணுடன் மட்டும் 
வருகிறாய் .....!!!

நாளில் 
இருளும் உண்டு 
வெளிச்சமும் உண்டு 
உன்னைப்போல் 

ஏக்கத்துடன் இருந்த 
எனக்கு உன் பதில் 
மயக்கத்தை தந்தது ....!!!

கஸல் 326

-----

காதலை தருகிறேன் 
நீ உயிரை 
கேட்கிறாய் ....!!!

கடலுக்குள் 
முத்துதான் 
தேடனும் -நீ 
நண்டை தேடுகிறாய் 

தென்றலாக வருவாயென்று 
இருந்தேன் -நீயோ 
சுனாமியாக வருகிறாய் ....!!!

கஸல் 327

-----

நீ என்னோடு 
தென்றலாக வா 
நான் 
இதழாக இருக்கிறேன் ...!!!

நான் வாண்டாக 
வருகிறேன் -நீ 
பூ உதிர்க்கிறாய் ...!!!

நான் நன்றி சொல்லி 
காதலை ஏற்றேன்
நீ வணக்கம் சொல்லி 
முடிக்கிறாய் ....!!!

கஸல் 328

---

நீ அன்பில் 
தங்கம் 
நான் பித்தளை ...!!!

தெய்வமாக உன்னை 
வணங்குகிறேன் 
அசையாமல் இருக்கிறாய் 

கண்டம் உயிருக்கு 
மட்டுமல்ல 
காதலுக்கும் தான் ....!!!

கஸல் 329

----

கடலைப்போல் 
காதல் ஆழமானது 
கப்பல் கரைதட்டுவது 
போல் நாம் காதல் 
ஆகிவிட்டது ....!!!

உன்னை மறக்காத 
இதயம் வேண்டும் 
வலிக்காத இதயமும் 
வேண்டும் ....!!!

உன் சிரிப்பு கண்ணை 
பறிக்க வேண்டும் 
கண்ணையே பறித்து 
கொண்டு போய்விட்டதே ....!!!

கஸல் ;330

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்