கவிப்புயல் இனியவன் கஸல் 290 - 300

மனதை பார்க்காதே 
மனதுக்குள் பார் 
என் காதலை ....!!!

என் கண் ஒளி
நீ பார்த்த நாள் 
பிரகாசம் 
அடைந்தது ....!!!

காதல் வெற்றி 
பச்சைநிறம் 
நீ சிவப்பு நிறத்தை 
காட்டி நிறுத்துகிறாய் ....!!!

கஸல் ;291

----

நீ 
இன்பத்தை 
தருவதை காட்டிலும் 
வலிதரும் போது 
நிலையாக இருக்கிறது ...!!!

உன்னிடம் என் 
காதல் அடகு 
வைத்தத்தால் 
மீட்க வழியின்றி 
தவிக்கிறேன் ....!!!

நான் 
காதல் காதல் இசை 
கேட்கிறேன் 
அழகாக இருக்கிறது 
உன் மௌன இசை ....!!!

கஸல் 292

---

எப்படி 
உன்னிடம் இரண்டு 
இதயம் உன் -நினைவுகள் 
கலந்து வருகிறது ...!!!

காதல் சிலருக்கு 
சூரிய உதயம் 
சிலருக்கு 
அஸ்தமனம் 

காதல் நாள் தான் 
ஒவ்வொருவருக்கும் 
பிறந்த நாள் 
நமக்கு மட்டும் ஏன்
விதிவிலக்கு ....?

கஸல் 293

----

நீ 
காதலில் 
ஆணிவேர் 
சிரிப்பில் இளம் 
குருத்து ....!!!

சிலநேரம் 
கனவு கன்னியாய் 
வருகிறாய் 
சில நேரம் 
கணத்த கண்ணீயாய் 
வருகிறாய் ....!!!

என்னை பிரிந்து 
சென்றபின் -ஏன்
திருமணத்தை 
மறுக்கிறாய் ....!!!

கஸல் 294

----

உன்னை காதலிக்க 
முன் முள்ளில் நடந்து 
பழகினேன் ....!!!

காதல் ஒன்றும் 
நீர் குமிழியல்ல 
நீ அழுதவுடன் 
வெடிப்பதற்கு ....!!!

காதல் கடிதம் 
எழுதுகிறேன் 
நீரெழுத்தாக நீ ...!!!

----

ஊதிய பலூனில் 
நீ காற்று 
நான் பலூன் ....!!!

காதலில் நாம் 
ஆரம்ப கல்விதான் 
சுழியை நான் போடவா ...?
நீ போடுகிறாயா ....?

பொரி விற்கிறேன் 
அழகாக பொரி நீ 
காற்றடிக்க பறந்து 
விட்டாய் ....!!!

கஸல் 296

-----

உன் காதல் கதவு 
திறந்தா ...?
மூடியா ...?
இருக்கிறது ...?

கண்ணாம் பூச்சி 
விளையாட்டு 
காதலில் வேண்டாம் ....!!!

நான் நடுக்கடலில் 
அங்கும் இங்கும் 
தத்தளிக்கிறேன் 
நீ 
நடனம் என்கிறாய் ...!!!

கஸல் 297

----

நீ 
நட்சத்திரம் 
நான் மேலே உன்னை 
பார்க்கத்தான் 
முடியும் ...!!!

பூக்களில் நீ 
வாடாத மல்லி 
நான் சாதாரண 
மல்லிகை ...!!!

நீ 
செய்யும் வலியை 
புன்னகையால் 
மறைக்க வைக்கிறாய் ...!!!

கஸல் ;298

----

தமிழ்
மெல்லசாகாது 
உன்னான்-நான் 
மெல்ல சாகிறேன் ...!!!

காட்டில் ஒரு 
சிங்கம் போல் 
என் இதயத்தில் -நீ 

நிலவை ரசிக்காதான் 
முடியும் -நீயோ 
அங்கு பரதம் 
ஆடனும் என்கிறாய் ...!!!

கஸல் ;299

----

காதலுடன் பேசினேன் 
முன்னூறு முறை 
நீ முகத்தை திருப்புகிறாய் ....!!!

சிரிப்பிலும் 
வலியிலும்
கண்ணீர் வருவது 
காதல் தான் ....!!!

கண்ணே என்று 
கூப்பிடுகிறேன் -நீ 
பின்னே என்று 
செல்கிறாய் ....!!!

கஸல் ;300

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்