கவிப்புயல் இனியவன் கஸல் 440 - 450

நான் எத்திசையும் 
பார்க்கிறேன் -நீ 
எதிர் திசையில் 
இருக்கிறாய் ....!!!

அன்பின் ஆழத்தை 
அளக்க முடியாது 
எப்படி ..? நீ 
நான் -அன்பில்லாதவன் 
என்று அளந்தாய் ...?

நானும் நீயும் 
என்று இரு சொல் 
வேண்டாம் ...!!!
ஒரு சொல் போதும் 
காதல் .....!!!

கஸல் 441

-----

உனக்கு பயப்பிட்ட நான் 
இப்போ காதலுக்கு 
பயப்பிடுகிறேன் ...!!!

உடலுக்கு ஆடை தை 
நீ காதலுக்கு தைக்கிறாய் 
அதனால் தான் அடிக்கடி 
மாற்றுகிறாய் ....!!!

கண்ணீரால் எரியும் 
ஒரே விடயம் 
இதயம் தான் ....!!!

கஸல் 442

----

சிப்பிக்குள் தான் முத்து 
நீ 
நத்தைக்குள் 
எடுக்க சொல்கிறாய் ...!!!

நீ பிரிந்தபோது 
நான் அழவில்லை 
காதல் அழுதது 
நீ சிரிக்கிறாய் ...!!!

ஏழு வகை நிறத்தால்
வானவில் தோன்றும் 
இதயத்தில் ஏழுவகை
வலியால் தோன்றுகிறதே ...!!!

கஸல் 443

-----

நீ என்னை பிரிந்தால் 
சிறப்பு என்று நினைப்பாய் 
என்றால் - நான் 
உன் நிழலில் இருந்து 
விலத்துகிறேன்....!!!

கடலுக்குள் எறியப்பட்ட
கல் போல் திசை தெரியாமல் 
போய் விட்டது 
என் காதல்....!!!

காதல் தராசில் நான் 
நிற்கிறேன் 
மறு முனையில் 
உன்னை காணவில்லை ...!!!

கஸல் 444 

-----

உனது நோக்கம் 
நிறைவேறி விட்டது 
இதயத்தை களவெடுத்து 
இல்லை என்று சொல்லுகிறாய் 

பூவும் நாரும் சேர்ந்தால் 
மாலை -எனக்கு கிடைத்தது 
வெறும் நார் ....!!!

காற்றில் மிதப்பது போல் 
நினைவுகள் இருந்தன 
இப்போ நினைவுகள் 
இருக்கின்றன 
காற்று நீ எங்கே ...?

கஸல் 445

-----

இதயத்துக்கு இருபக்கம் 
இல்லை 
நாணயத்தை போல் 
நீ -நாணயம் ....!!!

உன்னை நினைத்து 
கவிதை எழுதினேன் 
எழுதுகருவியில் 
நெருப்பு வருகிறது ....!!!

காதல் மணிக்கூடு 
போல் ஓடிக்கொண்டே 
இருக்க வேண்டும்
நீ ஓடாத மணிக்கூடு ...!!!

கஸல் 446

-----

கண்ணீரால் ஊற்றி 
காதலாய் வருவது 
உண்மை காதல் -நீ 
வெந்நீரை ஊற்றுகிறாய் ...!!!

உன்னிடம் 
நிறைய பேசுகிறேன் 
காதல் தான் இல்லை 

உன் கண்ணுக்கு 
காதலனானாலும் 
கள்வன் என்றாலும் 
கைது செய் - மௌனமாய் 
இருக்கிறாய் ....!!!

கஸல் 447

-----

காதலுக்கு
எல்லாவற்றையும் 
பெற்று விட்டேன் 
உன்னை தான் இழந்து 
விட்டேன் ....!!!

காதலும் நிலாவும் 
ஒன்றுதான் -காலம் 
போனால் மறையும் 

அணைகட்டி வைக்கிறேன் 
நினைவுகளை -நீயோ 
துவாரம் போடுகிறாய் ...!!!

கஸல் 448

----

உன் 
காதல் என்னையும் 
காதலையும் அழிக்கிறது 
நீ அழகாக இருக்கிறாய் ...!!!

நிலாவில் இருந்து 
உன்னை 
பார்க்க சொல்கிறாய் 
நிலாவாக தானே 
பார்க்க முடியும் ...!!!

மழை வெள்ளத்தில் 
சிறு கல் அடிபட்டு 
ஓடும் ...!!! -நம் 
காதல் ஒடியதுபோல் ...!!!

கஸல் 449

-----

பாம்பாக இரு 
மீனாக இரு 
விலாங்கு மீனாக 
இருக்காதே ....!!!

நீ சக்தி 
நான் சிவன் 
வணங்கத்தான் 
காதல் இல்லை ...!!!

நட்சத்திரத்தால் 
எழுதியவை ...!!!
கரி கட்டையாக மாறி விட்டது 
இனி வெழுக்காது...!!!

கஸல் ; 450

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்