கவிப்புயல் இனியவன் கஸல் 450 - 460

உன்னை 
பார்த்த அன்று 
இழந்தேன் 
என் முகத்தை ......!!!

கனவில் தப்பினேன் 
உன் நினைவில் தப்ப 
மறந்துவிட்டேன் ...!!!

நான் காதலில் 
ஊர் குருவி -நீயோ 
ஊமை குருவி ....!!!

கஸல் 451

----

உன் கண் அழகில்லை 
நீ என்னை காதலித்ததால் 
உன் கண் அழகு ....!!!

நகத்தில் பூசிய 
வர்ணம்போல் 
நாம் 
காதல் மூடப்பட்டு 
விட்டது ...!!!

காதல் கடிதம் போட்டேன் 
அனைத்தும் எனக்கு 
வந்து சேர்ந்தது ....!!!

கஸல் 452

----

நீ காகிதம் 
கடிதமாகவும் 
இருப்பாய் ...
குப்பையாகவும் 
இருப்பாய் .....!!!

நீ 
உன் வாழ்வுக்காக 
என் காதலை பறித்தவள் ...!!!

உனக்கு 
காதல் வரவைக்க 
நான் 
கவிதை எழுதுகிறேன் 
நீ ...கல்லறையை 
விரும்புகிறாய் .....!!!

கஸல் 453

----
என் 
இதயம் மணல் மண் 
அதில் வீடு கட்டியவள் நீ 

என்னை என்னில் 
பார்க்க முடியவில்லை 
உன்னிலும் 
பார்க்கமுடியவில்லை
காதலில் பார்க்கலாம் வா ...!!

காதல் 
நெருப்பும் சூடும் போல் 
நீ குளிர்கிறாய் ...!!!

கஸல் 454

----

உன் கூட்டில் வாழ
வந்தவனை 
சிறைபிடிக்கிறாய்...?

நீ 
தெருவில் நடந்தால் 
நான் நெருப்பில் ..
நடக்கிறேன் ....!!!

நான் ஊசி தான் 
மற்றவர்களை 
குற்றுவேன் உனக்கு 
மாலை கோர்ப்பேன் ...!!!

கஸல் 455

----

சோகங்கள் பிறருக்கு 
கண்ணீர் -எனக்கு நீ 
தந்த பரிசு .....!!! 

இருட்டில் காதலி 
வந்தால் கூட 
தெரிவது தான் காதல் 
நீ காதலையே இருட்டாக்கி 
விட்டாய் ....!!! 

காதல் கடலில் இறங்கி 
விட்டேன் நீந்த தெரியவில்லை 
வா இருவரும் சேர்ந்தே 
மூழ்குவோம் ....!!! 

கஸல் 456

-----

கடல் அலை கரையின் 
மேல் காதல் கொள்ளும் 
நீ -கரையில் மட்டும் 
காதல் கொள்கிறாய் ...!!! 

நான் நடந்து வந்த 
பாதையை திரும்பி 
பார்க்கிறேன் முற்களாக 
இருக்கிறது ....!!! 

வாடிய பூவை காதலில் 
தந்தவள் -நீ 
அன்றே புரிந்துவிட்டேன் ...!!! 

கஸல் ;457

----

பிறந்தவுடன் ஓடியவர் 
யார் உள்ளனர் ...? 
ஏன் காதலில் ஓடுகிறாய் ...? 

நெய் குடத்தில் 
விழுந்த தவளை போல் 
காதலில் அவசரப்பட்டு 
விட்டேன் .....!!! 

காதலில் கரை சேர்ந்தவரை 
விட கரைசேராதவர்கள் 
அடைந்த இன்பம் அதிகம் 

கஸல் 458

----

உலக வாழ்க்கையில் 
நான் ஒரு நடிகன் 
நீ பெரும் நடிகன் ....!!! 

நீ என் வீட்டு குப்பை 
ஆக இருந்தால் தூக்கி 
வீசியிருப்பேன் 
என் மனக்குப்பை 
ஆகிவிட்டாய் .....!!! 

கண்டவுடன் காதல் 
கண்ணீரில் முடியும் 
என்பதை -நம் காதலில் 
உணர்ந்தேன் .....!!! 

கஸல் 459

----

நன்றி சொல்வேன் உனக்கு 
துன்பத்தில் சிரிக்க 
பழக்கியதற்கு -உன்னால் 
ஞானியானேன்.....!!! 

காதலில் தற்கொலை 
என்பது முடிவல்ல ... 
பிறர் சொத்தை 
சேதமாக்கிய தேச(தேக) 
குற்றம் .....!!! 

சிரித்துப்பார் கடவுள் 
தெரியும் -அழுது பார் 
காதல் தெரியும் ....!!! 

கஸல் ;460

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்