கவிப்புயல் இனியவன் கஸல் 860 - 870
உயிரே .... நீர் எழுத்து கடதாசியாய்.... மாறிவிட்டாயா....? எழுதும் கவிதைக்கு ... தாக்கம் சொல்கிறாய் .... இல்லையே ....!!! உன்னை அழக்காக .... வரைபடம் வரைந்தேன் .... கிறுக்கல் சித்தரம் போதும் .... என்கிறாயே ....!!! இந்த ஜென்மத்தில் முடியாது ... அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் .... என்கிறாயே - நீ என்ன ராமனா ...? இன்றுபோய் நாளை வா என்கிறாயே ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 861 ---------- உன் உயிராகவும்...... என் உடலாகவும் .... இருந்த என்னை ..... எலும்பாக மாற்றிவிட்டாய் .....!!! என் வாழ்க்கையையும் .... சேர்த்து உனக்கு தானம் .... போடுகிறேன் .... எங்கிருந்தாலும் வாழ்க .....!!! காதலித்தால் கிடைப்பது .... காதலியோ காதலனோ .... இல்லவே இல்லை ..... கண்ணீரும் கவலையும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 862 ----------- இப்போதுதான் புரிகிறது .... நான் உனக்காக பிறக்கவில்லை ..... தவறுதலாக காதலித்து விட்டேன் ....!!! எழுதப்பட்ட காதல் .... காவியங்களும் காப்பியங்களும் ... போதும் இதற்குமேல் .... எவராலும் அழமுடியாது .... நாம் மனத்தால் பிர...