கவிப்புயல் இனியவன் கஸல் 760 - 770

காதலுக்கு கண் இல்லை 
கண்ணூறு உண்டு ....
ஊர் கண் படவில்லை ...
நம் கண்ணே பட்டு விட்டது ...!!!

ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!!!

கண்ணுக்குள் ஈரம் ...
காதல் - உன்னுக்குள் 
ஏன் ஈரமில்லை உயிரே ...!!!
+
கே இனியவன் கஸல் 
கவிதை ;761

-----------

நீ 
தொலைந்தால் தானே...
நான் கவலைப்படுவேன் ...
நீ என்னை நினைத்து ஏன்..
கண்ணீர் விடுகிறாய் ,,,,?

உன் வாழ்க்கைக்காக ...
என் வாழ்க்கையை 
பறித்தவள் -நீ 
சந்தோசமாய் இரு ....!!!

உன்னை நான் நேரில் ...
ரசிப்பதை விட கவிதையில் ...
ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!!!

+
கே இனியவன் கஸல் 
கவிதை ;762

-----

என் கவிதைகள் 
கண்ணீரை பேனா மையாக்கி ....
கண்ணால் பேசியவை வரிகளாய் ...
வலிகளாய் பிறக்கின்றன ....!!!

என்னவளே ...
நீ காலை மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
அப்போதுதான் வாடமாட்டாய் ...!!!

உன் பார்வைக்கு அஞ்சி ...
நீ அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...!!!

+
கே இனியவன் கஸல் 
கவிதை ;763

------

சொர்க்கம் நரகம் ...
காதலில் இருந்துதான் ...
பிறந்திருக்கவேண்டும் ....!!!

என் 
கண்ணீர் துளிகள் ...
அத்தனை அழகு ...
வழிந்தோடுவது -நீ 

என்... 
இதயத்தை ...
கவனமாக வைத்திருக்கிறேன் ...
உன் 
இதயத்துக்குள் மறைத்து....!!!

+
கே இனியவன் கஸல் 
கவிதை ;764

-----

சொர்க்கம் நரகம் ...
காதலில் இருந்துதான் ...
பிறந்திருக்கவேண்டும் ....!!!

என் 
கண்ணீர் துளிகள் ...
அத்தனை அழகு ...
வழிந்தோடுவது -நீ 

என்... 
இதயத்தை ...
கவனமாக வைத்திருக்கிறேன் ...
உன் 
இதயத்துக்குள் மறைத்து....!!!

+
கே இனியவன் கஸல் 
கவிதை ;765

-----
காதல் ஒரு மூச்சு ...
வருவது போவதும் ...
வழமை ....!!!

எனக்கு 
இறப்பே இல்லை 
காதலில் உன்னிடம் ...
இறந்து விட்டேன் ...!!!

அழகான... 
விண்மீன்கள் ...
நம் நினைவுகள் -
நான் அழுவது பகலில் ...
விண்மீன்கள் ....!!!

+
கே இனியவன் கஸல் 
கவிதை ;766

------
காதலே என் காதலியை ....
காப்பாற்று நான் படும் ....
வேதனையை அவள் ...
அனுபவிக்க கூடாது ....!!!

முழு நிலா சந்திர காதல் ....
தேய்பிறைக்கு வருகிறது ....
உன் முகம் மெல்ல மெல்ல ...
என்னை விட்டு மறைகிறது ...!!!

காதல் கடலில் நீ ...
விழுந்தாலும் நான் ...
கட்டுமரமாக இருப்பேன் ....
காதலை காப்பாற்ற ....!!!

+
கே இனியவன் கஸல் 
கவிதை ;766

-----------

என் 
பேனா காத்திருக்கிறது ...
உன் வரவுக்காக அல்ல ...
கண்ணீருக்காக ....!!!

இரும்பு மட்டும்
துருப்பிடிப்பதில்லை ....
காதலும் தான் ....!!!

என் 
இதயம் மயானம்....
நினைவுகள் சடலங்கள் ....!!!

+
கே இனியவன் கஸல் 
கவிதை ;767

-----------

உன்னை காதலித்த ...
குற்றத்துக்காக நான் ...
எனக்கே பாவமன்னிப்பு ...
கேட்கிறேன் .....!!!

உன் 
காதலின் பின் தான் ..
எனக்கு இதயம் இருப்பதை ...
புரிந்து கொண்டேன் ...!!!

என்னை கண்டதும் ...
உன் கண் கலங்குகிறது ...
விட்ட தவறை ....
உணருகிறாய் போல் ...?

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;768

-------

என் 
கவிதைகள் பேனாவால் ....
எழுதப்படவில்லை ....
மெழுகுதிரியால் ...
எழுதப்படுகிறது ....!!!

நம் காதலும் ஒரு ...
தண்டவாளம் தான் ...
தொடர்ந்தே போகிறது...!!!

இதயம் இல்லாமல் ...
வாழுகிறேன் ...
பாழாய் போன இந்த ....
காதலால் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;769

-----------

நான் 
வரும் போது - நீ 
மறைகிறாய் - நீ 
வரும்போது நான் 
மறைகிறேன் - காதல் 
சூரிய சந்திர உதயமோ ...?


கடலுக்கு கூட ஒய்வு ...
உன் நினைவுகளுக்கு ...
ஒய்வு இருப்பதில்லை ...!!!


காதல் ஒரு கனவு ....
காதலி ஒரு மாயை ....
மரணம் மட்டும் நிஜம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;770

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல்..127

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிப்புயல் இனியவன் கஸல் - 983