கவிப்புயல் இனியவன் கஸல் 740 - 750

என் இதயத்திலிருந்து
வெளியேறியபோது
நீ
அறுத்து விட்டு வந்த ...
நரம்பின் அதிர்வுதான் ...
என் கவிதைகள் ....!!!


இதுவரை 
சேர்த்து வைத்த இன்பங்கள்
கண்ணீராய் ஓடுகிறது ...!!!


காதல் பிரிகின்ற போது ...
உயிரும் பிரியும் ...
என்பதை நீ ஏன்...?
புரியவில்லை ....?

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 741

-----

வா காதல் வழியே....
சென்று மரணம் வழியே ..
வெளியேறுவோம் ....!!!

காதலுக்கும் வீதி 
போக்குவரத்து விதிகள் ..
வேண்டும் ...
நம் காதல் விபத்துக்கு ...
உள்ளாகிவிட்டது ....!!!

நீ பரிசாக தந்த ...
கை குட்டை கண்ணீரால் 
மிதக்குறது ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 742

----

உன்னை நினைத்து ...
மூச்சு விட்டேன் ...
நான் இறந்த உணர்வை ...
பெற்றேன் ........!!!

காதல் கடலை விட ...
ஆழமானதாம் - நம் 
காதலில் ஆழம் தெரிந்து ..
விட்டதே ....!!!

உன்னிடம் இருந்து ...
கற்றுக்கொண்டேன் ...
இதயம் வேண்டும் ...
காதலுக்கு எங்கே...?
உன் இதயம் ....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 743

----

பாவம் நம் காதல் ...
முகவரி தெரியாமல் ...
தெரு தெருவாய் ...
அலைகிறது ....!!!

இரவு நட்சத்திரம் ....
அழகுதான் -பகலில் ..?
நான் பகல் நட்சத்திரமாகி ...
விட்டேனோ ...?

உன் 
காதலில் இருந்து 
விடுபட விஷத்தை...
எடுத்தேன் ....
விஷ கோப்பையிலும் ....
நீ .....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 744

----

இன்பம் துன்பம் ...
நடுவில் நம் ..
காதல் இரு தலை ...
எறும்பு போல் ...!!!

என் இதயம் சுமை ..
தாங்கி எவ்வளவு ...
வேண்டுமென்றாலும் ...
வலியை தா ....!!!

காதல் ஆடுபுலி ..
ஆட்டம் ...
நீயா ..? நானா ..?

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 745

-----

நீ 
பிரிந்து செல்லவில்லை ....
என் இதயத்தை பிரித்து ...
கொண்டு சென்றுவிட்டாய் ...!!!

தவளை 
தண்ணீர்ரால் ...
கெடும் - காதல் 
கண்ணீரால் கெடும் ......!!!

இறைவா ...
நீ விட்ட தவறு மனிதனை 
படைத்தது அல்ல ...
காதலை படைத்தது ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 746
---
காதல் ....
நாணயத்தின் ...
இருபக்கம் போல் ....
கவிதையும் வரும் ...
கல்லறையும் வரும் ....!!!

நீ காதல் முகிலா ...?
திடீரென் வருகிறாய் ...
கண்ணீரால் நனைகிறாய் ...!!!

உன் மடியில் சாய்ந்து 
எடுத்த இன்பங்கள் ...
கண் வழியாக வெறியேற ...
ஏனடி வைத்தாய் ,,,,,?

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 747
-----
பட்ட மரத்தில் 
ஆங்காங்கே ஒட்டி 
இருக்கும் பாசி படர் போல் 
என் காதல் உன் இதயத்தில் ...!!!

தினமும் ஏமாறுகிறேன் 
நினைவிலும் கனவிலும் ..
நீ பேசுவாய் என்று ....!!!

நீ மௌனமாய் இரு 
என் ஆயுள் மௌனமாகி ...
வருவதை உணர்திரு ....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 748
-----
உன் 
வலியை கிறுக்குகிறேன்...
கவிதையாக மாறுகிறது ...
நான் கவிஞனாம் ...
வலி தெரியாதவர்கள் ...!!!

உனக்கு எழுதிய கவிதை ...
கடதாசியை குப்பை வண்டி ...
ஏற்றி செல்கிறது ...
மனம் தப்பி விட்டது ....!!!

தேவாலையத்தில் ....
யோசிக்கிறேன் -இறைவா 
கேளுங்கள் தரப்படும் என்றீர் 
அவளிடம் கேட்டேன்....
தரவில்லையே ...!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 749
-----
என் 
மனதின் பலவீனம் 
மறக்கதெரியாது ...
உனக்கோ அது பலம் ...!!!


முகப்பருவை பார்த்து ...
கவலைபடுகிறாய்...
அது என் நினைவுகளின் ...
அடையாளம் ....!!!


காதல் 
எனக்கு உள் சுவாசம் 
உனக்கு வெளிச்சுவாசம் ..
நம் கடந்த காலம் ...
புதைகுழிக்குள் ....!!!


+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 750

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்