கவிப்புயல் இனியவன் கஸல் 810 - 820

இரவு புல்மேல் பனி ....
நான் அழுத்த கண்ணீர் ....
துளிகள் ...
இரவில் தானே நீ 
நினைவுகளையும் ...
தந்தாய் .....!!!

உன்னை வர்ணிக்க ...
வார்த்தைகளை தேடினேன் ...
கண்ணீராய் வருகிறது ...!!!

காதல் தூவானம் அழகு ....
எனக்கு காதல் புயல் ...
வீசிவிட்டது ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;811
------------
கவிதையால் உன்னை ....
அழவைக்கவில்லை....
உன்னை காதலித்ததால் ...
கவிதையால் அழுகிறேன் ....!!!

எம் 
விடுதலை பேராட்டத்தின் ....
வடுபோல் தான் நீயும் ...
அழியவே மாட்டாய் ....!!!

நீ 
நெருப்பு -என்னை 
தீபமாக்கவதும் ....
சாம்பலாக்குவது ....
உன் கையில் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;812
-----------------
காதல் ...
செய்ய முன் இரத்தம் ...
உடலில் ஓடியது ....!
இப்போ கண்ணீர் ...
ஓடுகிறது .....!!!

காதல் 
தண்ணீரால் ....
அபிஷேகம் செய்வாயென ...
எதிர்பார்த்தேன் ....
வெந்நீரால் அபிஷேகம்....
செய்கிறாய் .....!!!

கண்ணால் காதல் .....
வருவதே வழமை ....
உன் கண்ணால் ....
காயம் வந்துவிட்டதே .....!!!


+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;813
-----------
வலையில் சிக்கிய மீன் ...
தப்புவதற்கு வாய்ப்பு உண்டு ...
காதலில் சிக்கிய எவரும் ....
தப்பியதே இல்லை .....!!!


முகத்தில் என் உருவம் ....
இதயத்தில் உன் உருவம் ...
தாங்க முடியாமல்....
தவிக்கிறது இதயம் .....!!!


நினைவுகளை தரும்போது ....
இன்புற என் இதயமே ...
துன்பத்தை தரும்போது ....
தங்கிகொள் - அது தான் 
காதலின் தண்டனை ....!!!


+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;814
-----------
உயிரே சற்று தூங்கு ....
அப்போதுதான் உன் கண்ணில் ...
இருந்து தப்பிக்கமுடியும் ....!!!

இன்பமாய் பயணித்த ....
காதல் படகில் எதற்கு ...
நடுகடலில் என்னை ....
தள்ளிவிட்டாய் ....?

நான் 
வேகமாக ஓடும் ....
காதல் சாரதி .....
நீ - சிகப்பு நிற சைகை ...
விளக்கு .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;815
-----------
சுடராக 
இருந்த நம் காதல் .....
நிழலாக மாறியதேன் ...?
நீ நிழலாக என்னை தொடர் ....
நான் வெளிச்சாக வருகிறேன் ....!!!

நம் 
காதல் பூமாலையில் ....
நார் உள்ளது பூவை யார் ....
யார் கோர்ப்பது ....?

மறந்துவிட்டேன் - நீ 
என்னை மறக்கசொன்னதை .....
மறந்துபோய் நினைத்துவிட்டேன் ....
மன்னித்துவிடு .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;816
-----------
காதல் 
ஆரம்பத்திலும் ....
முடிவிலும் ....
தலை குனிந்தது -நீ 

மழைக்கால ஓடை
மழைபொழிந்தால் அழகு ....
உன் காதலும் அதுபோல் ...
சில வேளை அழகு ....!!!

நம் 
காதல் தூக்கதில் அழகு.....
அப்போதுதானே கனவில் ....
இனிமை தருகிறாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;817
-----------
திக்கு தெரியாத காடு ....
தனிமையில் நின்றவன் ....
நிலைபோல் ஆகிவிட்டது ....
என் காதல் ....!!!

நான் 
வாசனையில்லாத மலர் ....
எப்படி விரும்புவாய் ....?

என்னையும் அழைத்து ....
செல் என்று அழுகிறது ....
உன்னிடம் இருக்கும் ....
என் இதயம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;818
------------
கவலை படவில்லை 
உன்னை இழந்ததால் ...!
காதலும் கவிதையும் ....
உன்னால் கிடைத்தது ....!!!

என் 
ஒவ்வொரு மூச்சும் 
உனக்கான கவிதை ....!!!

என்னை அழவைத்து ....
பார்ப்பது உனக்கு பிடிக்கும் 
என்று எனக்கு தெரியும் ....
இன்னும் தா வலியை....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;819

------------
கண்ணால் விபத்து .....
கவனம் காதல் வரும் ....
காதல் வந்தால் கவனம் ....
கண்ணீரும் வரும் ....!!!

நீ 
மூச்சு விடும் இதயத்தோடு ....
வாழ்கிறாய் -காதல் இதயம் ...
வரும்போது சொல் -நான் 
காதலிக்கிறேன் .....!!!

நன்றி உயிரே ....
எனக்குள்ளும் காதல் ...
இருக்கு என்பதை ....
புரியவைத்தமைக்கு ....
உனக்கு என்ன ஆயிற்று ....?

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;820

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்