கவிப்புயல் இனியவன் கஸல் 840 - 850

பகலில் சந்திரன் ...
இரவில் சூரியன் ...
நம் காதல் நிலை ....
இதுதான் ....!!!

என்னிடம் கவிதையும் ....
உன்னிடம் காதலும் ...
என்னபயன் ...?
நம்மிடம் காதல் ...
இல்லையே......!!!

நீ 
கனவாய் வந்தால் ....
என் கவிதை வேறு....
நினைவாய் வந்தால் ...
என் கவிதை வேறு....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;841
----------
நம் 
காதல் கண்னில் ....
ஆரம்பித்ததால் .....
கண்பட்டு விட்டது ....
காயப்பட்டுவிட்டது ....!!!

காதலில் நான் ....
தொடக்கப்புள்ளி....
நீ வட்டம் ......!!!

உனக்கு போட்ட ....
காதல் கடிதம் ...
எனக்கே திரும்பி ....
வந்துவிட்டது ....
காதல் முகவரியில் ...
நீ இல்லையாம் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;842
----------
காதல் வானவில் வந்தது .... 
ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் .... 
வானவில்லை ....!!! 

தண்ணீர் கேட்டால் தரலாம் .... 
நீயோ வீம்புக்கு காணல் நீர் .... 
கேட்கிறாய் -சற்று பொறு .... 
நம்காதல் காயட்டும் .....!!! 

நான் அழுகிறேன் .... 
நீயோ வியர்வை என்கிறாய் .... 
காதலித்துப்பார் அன்பே .... 
உனக்கும் கண்ணீர்வரும் ....!!! 


கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;843
----------
திருவிழாவில் கைவிட்ட ....
குழந்தைபோல் நிற்கிறேன் ....
எங்கே என்னை விட்டு ....
சென்றுவிட்டாய் .....!!!

என் கண்ணில் ஏதோ....
குறைபாடு இருக்கிறது ....
பார்ப்பதெல்லாம் -நீயாக
தெரிகிறாய் .....!!!

நான் வெறும் கூடு ....
என் இதயமும் நீ
மூச்சும் நீ
என்னை உண்மையில்
கூடாக்கிவிடாதே....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் 844

----------

உன்னிடமும் காதல் இல்லை...
என்னிடமும் காதல் இல்லை .....
நம் காதல் ஊர் முழுதும் ....
வாழ்கிறது .....!!!

ஒவ்வொரு
இளையோருக்கும் ....
இரண்டு காலம் உண்டு ....
காதலுக்கு முன் .....
காதலுக்கு பின் .....!!!

நீ
அத்தியாய காதல் கடல் .....
ஆழம் என்று இறங்கினேன் ....
வரண்டுபோய் உள்ளது....
உன் காதல் கடல் .....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் 845
-----
உன்னைத்தான் 
வெறுத்தேன் ஏன்...?
என்னை வெறுக்கிறேன் ...
காதல் இப்படித்தானோ ..?

நீ என் இதயத்தில் ....
தூசியாக இருந்துவிடு ...
அப்போதும் உன்னை ...
துடைத்து எறிய மாட்டேன் ...!!!

என் கண்ணீரும் ...
கடல் நீரும் ஒன்றுதான் ....
அளவற்று இருக்கிறது ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 846
----------
நான் 
காதலில் கண்ணாடி 
நீ கருங்கல் ....
அருகில் வர பயமாய் ...
இருக்கிறது ....!!!

நான் 
வெறும் கடிதம் 
நீதான் முகவரி ...
மாறிவிடாதே ....!!!

கண்ணுக்குள் ....
வந்த நீ எதற்கு ...?
கண்ணீராய் வடிகிறாய்...
அதை பன்னீராய் ....
நினைக்கிறேன்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 847
------
சாமியை நினைத்ததை ....
காட்டிலும் உன்னை ....
நினைத்தததே அதிகம் ....
வரம் கிடைக்கவில்லை ....!!!

காதல் பாவமா ...?
புண்ணியமா ...?
பிறவி பயனா...?
பிறவி துன்பமா ...?
எதுவென்று நீ ...
சொல்லிவிட்டு போ ....!!!

என்றோ ஒருனாள் ....
என்னிடம் அகப்படுவாய் ...
கொக்குபோல் ....
காத்திருப்பேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 848
------------

நீ 
எல்லோருக்கும் ....
பாசமானவள் .....
எனக்கோ -நீ 
வேஷமானவள்....!!!

ஒற்றை பாதையால் ....
சென்றே பழகியவன் ....
எப்படி காதல் வரும் ....?

நீ 
இல்லையென்றால் ....
எனகென்ன ...?
என்னோடு உன் காதல் ....
இருக்கிறது ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 849
----------
நீயும் கண்ணீரும் ...
உடன் பிறப்புகள் ....
அதுவும் இரட்டை ....
பிறவிகள் .....!!!

நானும் தெரு சுற்றி ....
உன்னை தொலைத்து ....
தேடி அலைகிறேன் ....!!!

தயவு செய்தது ....
கண் கலங்காதே ....
உனக்கும் சேர்த்து ....
காதலித்த நான் ....
உனக்கும் சேர்த்து ....
அழுகிறேன் .....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 850

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்