இடுகைகள்

ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவால் இறப்போம் ...!!!

உன்னை நினைக்காத நேரம் நான் இறந்த நேரம் வா ,,,இருவரும் நினைவால் இறப்போம் ...!!! கணணி திரையில் உன் முகம் நிலையாக இருக்க மனத்திரையில் அசையும் படமாகும் ....!!! இதயத்தில் இரத்தோட்டம் நீ எனக்கோ இரத்த சோகை...!!! கஸல் 635

நினைவில் கோலம் போட்டேன்

அன்பை தந்தேன் காதலை தந்தாய் தண்ட வாளத்தில் காதல் பயணம் ....!!! காதல் சுவர் நீ காதல் படம் நான் தூசி பிடிக்கிறது காதல் நினைவில் கோலம் போட்டேன் -கனவில் புள்ளி போட்டேன் கண்ணீர் கோலத்தை அழிக்கிறது ....!!! கஸல் 634

கண்ணீரால் முடிந்தது ...??

இதயமும் இதயமும் சேர்ந்தால் காதல் உன் கணக்கில் பிழைக்கிறதே...??? பன்னீரால் காதலிக்கிறேன் கண்ணீரால் விடைதருகிராய் காதல் நீரும் நெருப்பும் கண்ணிலே தோன்றி இதயத்தில் முடியும் காதல் -எப்படி ..? கண்ணீரால் முடிந்தது ...?? கஸல் 633

ஏன் உனக்கு காதல் வரவில்லை ...!!!

தாமரை இலை நீ காதல் தடாகம் நான் தாமரை இலையில் தண்ணீர் நம் காதல் ...!!! சமுத்திர ஆழம் காதல் சமுத்திர கப்பல் நாம் ஓட்டை விழுந்த படகில் பயணம் செய்கிறோம் ...!!! எறும்பு ஊர கற்குழியும் என் நினைவுகள் ஏற ஏன் உனக்கு காதல் வரவில்லை ...!!! கஸல் 632

காதல் நின்றால் பூச்சியம்

என் இதயத்தை நானே   வெட்கப்படுகிறேன் ஒரு நொடியில் என்னை மறந்து   உன்னை நினைத்ததற்காக   உனக்காகவே வாழ்கிறேன்   கவிதை எழுதுகிறேன்   கவிதையே என்   காதலி   ஓடும் கடிகாரத்தைப்போல்   நம் காதல்   நின்றால் பூச்சியம்   கஸல் தொடர் 21

என்னை மீட்டு தந்துள்ளது

நீ   எப்படி எல்லாம் என்னை   காதலிக்கிறாய் என்று   உன் அன்புக்கு தெரியாது   காதலாக இருப்பது   பயப்பிடுவதற்கல்ல   கருங்கல்லை கூட காதல்   உடைக்கும்   உன் பிரிவு உன்னிலிருந்து   என்னை மீட்டு தந்துள்ளது   கஸல் ; தொடர் 20

எனக்கு சாதனை

தனிமையை தவிர்க்க   உன்னிடம்   தனிமையாக்கிவிட்டாய்   நீ   வந்த பாதையால் . நான் வரமாட்டேன்   இதயம் வலிக்கிறது   உன் காதல் பிரிவு   உலக காதலருக்கு   நல்ல போதனை   எனக்கு சாதனை   கஸல் ; காதலுடன்  பேசுகிறேன் -தொடர் 19

என் இதயம்

காதலின்   இதயக்கதவை   திறக்கும் சாவி   நீ   நீ சொல்ல வேண்டாம்   உன் முகம் சொல்லுகிறது   என்னை கொல்லப்போகிறாய்   நீ வந்த போதும்   சென்ற போதும்   வலிக்காமல் இருக்கும்   என் இதயம்   கஸல் ;தொடர் 18

உனக்கு கதாநாயகன் அதுபோதும்

உன் இதயத்தில்   நான்   என்னை கொல்ல மூச்சைநிறுத்து   நீ நடந்து   வந்த பாதை   எனக்கு கவிதையானது   உன் பெற்றோருக்கு   நான் வில்லன்   உனக்கு கதாநாயகன்   அதுபோதும்   கஸல் ;தொடர் 17

காதல் என்பது

என் இதயம்   திக்கு தெரியாத   காட்டில்  அகப்பட்டுவிட்டது . உன் உடைகளுக்கே   அழகு நீ  அணிவதால் தான்   காதல் என்பது   பஞ்சும் நெருப்பும்   போராடும் போராட்டம் . கஸல் ; தொடர் 16

பறித்தவள் நீ

என் இதயம்   மாயானம் -நீ   எலும்புக்கூடு   உன் வாழ்க்கைக்காக   என் சந்தோசத்தை   பறித்தவள் நீ   நீ   துவாரம் உள்ள   தொட்டி தண்ணீர்   உன்னை ஏந்துவதற்காக   காதல் பிச்சை எடுக்கிறேன்   கஸல் ; தொடர் 15

உன் இதயக்காயங்களில்

கவிதை   அன்னையின்   பாலிலிருந்து வந்த வரிகள்   வா கண்ணே கல் தோன்றா மண்   தோன்றா காலத்துக்கு   செல்வோம்   கவிதையின்   விமர்சனத்துக்கு   உன் இதயக்காயங்களில்   ஒழித்து வைக்கிறேன் ...!!! கஸல் ; தொடர் 14

இரண்டுக்கும் நடுவில் நீ

நீ வெறும் இதழ்தான்   நான் விரும்புவது   பூவில் உள்ள தேனை   நான் நெருப்பு நீ வெப்பம்   என் எல்லாவார்த்தைகளை   நீ கவிதையாக   உருவாக்குகிறாய்   சுகம் துக்கம்   இரண்டுக்கும் நடுவில் நீ   கஸல் - காதலுடன் பேசுகிறேன் - 13

உனக்காக பிறக்கப்படாதவன்

நீ எனக்காக   படைக்கபட்ட தேவதை   நான் உனக்காக   பிறக்கப்படாதவன்   காதலின்   தோற்றமும் முடிவும்   கண்தான் உன் கண்ணைதான் என் மூக்கு கண்ணாடியாக   வைத்திருக்கிறேன்   கஸல் ;தொடர் 11

கற்றுக்கொள்ளுகிறேன்..............

என் நோய்க்கு   மருந்தாக கிடைத்தவள்   நீ   என்னை மறந்துவிடு   சொல்லியபடி அழுகிறாய்   உன்னை மறந்து   ஒவ்வொரு காதல்   வலியும் உன்னிடமிருந்தே   கற்றுக்கொள்ளுகிறேன்....

இறந்துவிடுகிறேன் ................

நான் செய்த குற்றம்   உன்னை கண்டது   காதலித்தது   என்னிடம்   ஒரு உறவும் இல்லை   உன் இதயம் மட்டும்   இருக்கிறது   நீ திரும்பிப்பார்க்கும்   போதெல்லாம்   இறந்துவிடுகிறேன் ................

போராடும் மீன்

நம் தேசிய மொழி மௌனம்   நம் தேசிய கீதம் காதல்   வறண்டிருக்கும் நதியில்   நான் உயிருக்கு போராடும்   மீன்   உன் முகம் தான்   எனக்கு சூரிய உதயம்   நினைவுகள் தான்   சந்திரோதயம்   கஸல் ;38  

உன் சிரிப்பு

என் முகத்தில்   உன்னை பூந்தோட்டமாக   வளர்க்கிறேன்   அடிக்கடி பூக்கிறாய்   வாடுகிறாய்   பாலைவனத்தில்   தண்ணீராக உன்   சிரிப்பு   உன்னை விட்டு விலகும்   பாதை   360 பாகை கஸல் ; 36

எப்படி சொல்வது ...?

யாரிடம் சொல்வது ...?   பூவாக இருந்தவள் ...   புயலாக மாறிவிட்டாய் ..   என்று -யாரிடம் சொல்வது ...?   எப்படி சொல்வது ...?   உயிரே நீ தான் என்றவள் ...   உயிரையே எடுத்துக்கொண்டிருக்கிறாள்   என்று -யாரிடம் சொல்வது ...?   எப்படி சொல்வது ...?   காற்றாக இருந்தவள் ..   கல்லறையாக மாறுகிறாள் ...   என்று -யாரிடம் சொல்வது ...?   எப்படி சொல்வது ...? 09

நான் செய்த குற்றம்

நான் செய்த குற்றம்   உன்னை கண்டது   காதலித்தது   என்னிடம்   ஒரு உறவும் இல்லை   உன் இதயம் மட்டும்   இருக்கிறது   நீ திரும்பிப்பார்க்கும்   போதெல்லாம்   இறந்துவிடுகிறேன்   நன்றி தொடர்ந்து வருகிறது   கஸல்   ஆனால் ஒன்றொடு மற்றையது தொடர்பு இல்லை   விரும்பியதை யாரும் பார்க்கலாம் 08

கற்றுக்கொள்ளுகிறேன்

என் நோய்க்கு   மருந்தாக கிடைத்தவள்   நீ   என்னை மறந்துவிடு   சொல்லியபடி அழுகிறாய்   உன்னை மறந்து   ஒவ்வொரு காதல்   வலியும் உன்னிடமிருந்தே   கற்றுக்கொள்ளுகிறேன் 07

உள் மூச்சு நீ

என் முகத்தில் நீ   என்று வந்தாயோ   அன்றே என் முகத்தை   காணவில்லை   நீ   நெருப்பை விட   அன்பானவள்   நினைவுகளை விட   மென்மையானவள்   என் சுவாசத்தில் .. உள் மூச்சு நீ   கஸல் தொகுதி -06