இடுகைகள்

செப்டம்பர் 28, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே இனியவன் - கஸல் 55

உனக்கு .. காதலில் மரியாதை கிடைக்கும் என்றால் நான் உன்னை விட்டு விலகவும் தயார் ... கடலுக்குள்... எறியப்பட்ட... கல் நீ....... எப்படி உன்னை .... தேடுவது ...? சிபி மன்னன் .. தன் உடலை... புறாவுக்கு சமனாக்கினார் நீ வந்தால் தான் நம் காதல் சமனாகும் ..!!!  கே இனியவன் - கஸல் 55

கே இனியவன் - கஸல் 54

எங்கு .... பார்த்தாலும் ..... தெரிவது...... உன் முகம் ....!!! உன்  அன்பின் ஆழத்தை.... காணமுடியாது... தெரிந்தும் .. துடிக்கிறேன்  ஆழத்தைபார்க்க....!!! நான் என்பது நீ... என்று அகராதியில்.... மாற்ற வேண்டும்... நமக்காக அல்ல.... காதலுக்காக ...!!! கே இனியவன் - கஸல் 54

கே இனியவன் - கஸல் 53

எனக்கு காதலே...... பிடித்தது இல்லை .... எப்படி -என்...... இதயத்துக்குள்...... வந்தாய் ...? இதமாக இருக்கிறது ..!!! என் .... இதய தடாகத்தில்..... நீச்சல் பழகுகிறாய்..... நான்....  மூழ்கித்தவிக்கிறேன்..... நீ  என்ன பேசினாலும்.... அர்த்தமாக உள்ளது...... நீ  என் அர்த்தமானவள் என்பதால் ...!!! கே இனியவன் - கஸல் 53

கே இனியவன் - கஸல் 52

காதல்  ஒரு தேன் கூடு தேனில் மது இருக்கும்  நீயும் போதையாகிறாய்.. எனக்கு ..!!! நீயும் நானும் காதலில் சூரிய சந்திரர்கள் ...!!! என்னை .... வட்டமிடுகிறாய்.... பருந்துபோல்... நான் தவிக்கிறேன்.... சிறகுடைந்த பறவையாய் ....!!! கே இனியவன் - கஸல் 52

கே இனியவன் - கஸல் 51

நீ  எனது வினா . நான்  உன் வினா  விடைதான் புரியாத  காதல் ...!!! நான் நங்கூரம்  உடைந்த கப்பல்  நீ  எங்கே துறைமுகமாக  இருக்கிறாய்  நம் காதல்  கண்ணீரால்  கட்டப்பட்ட  கண்ணீர் மாளிகை  கே இனியவன் -  கஸல் 51

கே இனியவன் - கஸல் 50

நீ மீன் தொட்டி  நான் அதிலுள்ள மீன்  வெளியே போக முடியாது  என்பதால் உன்னையே  சுற்றி சுற்றி வருகிறேன்  உனக்காக -ஒரு  ஜீவன் அழுகிறது என்றால் .. என்னைவிட நீ யாரை சொல்வாய்  நீ போதையுடன் .. விஷம் உண்டால் நிச்சயம்  இறப்பு தான் ... தெரிந்தும் குடிக்கிறேன்  கே இனியவன் -  கஸல் 50

கே இனியவன் - கஸல் 49

இரவில் விளக்கை .. விரைவில் அணைத்துவிடுவேன்  எங்கே நீ கனவில்  வராமல் விட்டுவிடுவாயோ  என்ற பயம் தான்  வா  பௌணமி நிலவில் .. ஒழித்து பிடித்து  விளையாடுவோம்  அமாவாசை அன்று  நேருக்கு நேர்  பேசுவோம்  உனது முன்னாள்  காதலன்  இந்நாள் கணவன்  கே இனியவன் -  கஸல் 49

கே இனியவன் - கஸல் 48

காதலில் நாம்  ஓட்டைப்பானை  நீ என்னை நிரப்பு  நான் உன்னை  நிரப்புகிறேன் நான் உன் காலில் மெட்டி  போடவிருமபுகிறேன் நீ விலங்கு போட  விரும்புகிறாய்  நீ தயவு செய்து  காதலிக்காதே  பார்த்ததிலேயே  இத்தனை தொல்லை என்றால் காதலித்தால் ..??? கே இனியவன் -  கஸல் 48

கே இனியவன் - கஸல் 47

நான் இரவில்  தனியாக பேசுவேன்  விடியல் காலை  அதுதான் பத்திரிகையில்  கவிதை  நீ  பனிக்கட்டி  உனக்கில்லை  குளிர்  நீ சூடில்லாத  நெருப்பு  நான் நெருப்பில்லாத  சூடு  கே இனியவன் -  கஸல் 47

கே இனியவன் - கஸல் 46

காதலில் தோற்றவன் .. கண்ணீர் விடுகிறான் காதலை விரும்புபவன் கண்ணை தேடுகிறான் நான் இரண்டுக்கும் நடுவில் தத்தளிக்கிறேன் .... நான் எரிகிறேன் நீயோ சூரிய குளியல் குளிக்கிறாய் நான்  என் இஸ்ரத்தை சொன்னேன் -அவள் தன கஸ்ரத்தை  சொன்னாள் ...!!! கே இனியவன் -  கஸல் 46

கே இனியவன் - கஸல் 45

நீ  பூவாகவும்  மென்மையாகவும்  இருக்கிறாய் -பூவின்  சிரிப்பும் வாட்டமும்  தெரிகிறது உன்னில்  சில வேளையில்  கல்யாணி ராகம்  சிலவேளையில்  பூபாளராகம்  நானோ சோகம்  நீ பிரிந்து சென்ற பின்  என் வாழ்வில்  முழு நிலா  வந்ததே இல்லை  கே இனியவன் -  கஸல் 45

கே இனியவன் - கஸல் 44

நான் பின்னும் வலை .. உன் கண் மீனுக்காக .. இல்லை . கண்ணீருக்காக நான் உன்னை  காதலிக்க வில்லை  நீ விட்டுவிட்டு போனால்  தோல்வியை உனக்கு  முன்பே விரும்பிவிட்டேன்  நான் வென்றும் விட்டேன்  இரவு நட்சத்திரம் போல்  உன் நினைவுகளும்  மின்னுகின்றன  கே இனியவன் -  கஸல் 44

கே இனியவன் - கஸல் 43

நீ தரும் வேதனைகள்... நீவரும் போது வருவதில்லை... நீ -போகும் போது ... போவதுமில்லை ...!!! என்னோடு நீ இருக்கும் போது நான் இருப்பதில்லை என் இதயத்தில் கண் உள்ளது நீ வந்ததும் கண்ணீர் விடுகிறது சில வேளை கண்சிட்டுகிறது..!!!   கே இனியவன் -  கஸல் 43

கே இனியவன் - கஸல் 42

நீ  தொடர்ந்தும் -என் .. ஆசையாக- இரு... அப்போதுதான் -உன்னை ... தொடர்ந்து ... ஏங்கிக்கொண்டிருப்பேன் ... கனவு ஒரு சிறகு  நினைவு ஒரு சிறகு  பறக்கிறேன் நடுவானில்  தொலைந்து போவதற்கு  கண்ணே நீ  என் கனவுகளின் ராணி  நினைவுகளின் மகா ராணி  கே இனியவன் -  கஸல் 42

கே இனியவன் - கஸல் 41

நீ என்  கைதொலைபேசி  வைத்திருக்கவும்  முடியல்ல  விட்டுட்டு வரவும்  முடியல்ல  காற்றாடியை  போட்டுவிட்டு  தீபத்தை பார்க்கிறாய்  நான் படும் வேதனை  கற்பத்தையும்  காதலையும்  மறைக்கவே  முடியாது  கே இனியவன் -  கஸல் 41

கே இனியவன் - கஸல் 40

தாமரை மலர்வதை .. பார் -மலருக்குள் மலர்வு ... ஒருபகுதி மலராததுபோல் ... நீயும் மௌனமாக இருக்கிறாய் .. உன் காதல் சுமையால்  நான் வண்டிக்குள் சிக்கிய  தவளையானேன் .. நீ வெளியில் வரும்போது  மட்டும் காதல் உடை  போட்டுக்கொண்டு  வருகிறாய்  கே இனியவன் -  கஸல் 40

கே இனியவன் - கஸல் 39

என் காதல்  குச்சியில் இருக்கும்  ஐஸ் போன்றது  இப்போ -குச்சி  என்னிடம் இருக்கு  ஐஸ்சைக்கானவில்லை .. மனம் என்னும் -என்  வயிறு பசிக்கிறது  நீ  சமைக்கவில்லை  என்கிறாய்  சிறுவயதில்  நடந்த நிகழ்வு  கனவில் வந்ததுபோல்  நீ வருகிறாய்  மங்கலாக ...!!! கே இனியவன் -  கஸல் 39

கே இனியவன் - கஸல் 38

என் கண்ணீர் துளிகள் .. உன் வீட்டுப்பூக்கள் .. அழகாகவும் இருக்கிறது ,, விரைவாகவும் வாடுகிறது .... நெருப்பின் மீது .. போடப்பட்ட கற்பூரம் -நான்  வாசமாகவும் .. விரைவாகவும் .. எரிகிறேன் .. இரண்டு கறுப்பு .. சந்திரன் இருப்பது .. உன் முகத்தில் தான் ...!!! கே இனியவன் -  கஸல் 38

கே இனியவன் - கஸல் 37

கொடியது கொடியது  காதல் கொடியது  அதனிலும் கொடியது  உன் காதல் எனக்கு  கொடியது  இனியது இனியது  தனிமை இனியது  அதனிலும் இனியது  உன்னால் நான்  தனிமையானது  வலியது வலியது  என் காதல் வலியது  அதனிலும் வலியது  நீ தந்த வலியானது கே இனியவன் -  கஸல் 37

கே இனியவன் - கஸல் 36

தாமரை அல்லி மல்லிகை மலர்வதற்கு  சூரிய சந்திரர் வருகையை  எதிர்பார்ப்பதுபோல் -நானும்  தூங்கனாங்குருவிக்கூட்டில்  இருக்கும் மின்மினிபூச்சிப்போல்  நீ என் இதயத்தில்  பல யுகங்களின் தவம்  மனிதப்பிறப்பு  பல நினைவுகளின் தவம்  நீ காதலியாக ...  கே இனியவன் -  கஸல் 36

கே இனியவன் - கஸல் 35

உனக்கு  கண்ணால் கடிதம்  எழுதி -என்  கண்ணீரால்  கையொப்பம் இடுகிறேன் ... விட்டிலின்  வாழ்க்கைதான் -என்  காதல் -உன் வெளிச்சத்தில்  மயங்கி விட்டேன்  காக்கையின் கூட்டில்  அடைகாக்கும் -குயில்  முட்டைபோல் .. நான் உன் காதலில்  கே இனியவன் -  கஸல் 35