இடுகைகள்

பிப்ரவரி 3, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காட்சிப் பிழைகள்

காட்சிப் பிழைகள் என்பது தலைப்பு. தலைப்புக்கு பொருத்தமாக கனகச்சிதமாக கவிதைகள் செதுக்கியிருக்கிறார் தோழர் இனியவன்.  கஜல் கவிதைகளில் நன்கு அனுபவம் வாய்ந்தவரென அறிகிறேன்.  கண்ணால் காண்பதெல்லாம் பொய். இப்பழமொழியை இப்படி சுட்டுகிறார் பாருங்கள்  நெற்றியில் ...  குங்கும பொட்டு.....?  அப்பாடா - சாமி ....  கும்பிட்டு வருகிறாள் ....!!! /// நெற்றியில் குங்குமம். அச்சோ திருமணம் ஆகிவிட்டதா இவளுக்கு.? இல்லை இல்லை சாமி கும்பிட்டுதான் வருகிறாள். ஒரு தலைக் காதல் கொண்டவரின் மனநிலையினை விவரிக்கும் இவ்வரி அசத்தல்.  மூடபழக்க வழக்கங்களையும் சாடுகிறார் கவிஞர் இனியவன்.  கயிற்றை மிதித்து ...  பாம்பு என்று கத்தினான் ....  நாக தோஷ பூஜை ....  நடக்கிறது .....!!! / கயிறு பாம்பாக காட்சிப் பிழையானதற்கா நாக தோஷ பூஜை..? அடக்கடவுளே ! என சொல்ல வைத்த வரியில் பகுத்தறிவு வாசமும்.  காதல் சுவை. தத்துவ சுவை, நகைச்சுவை என பல்சுவைக்கொண்டது தோழர் கவிஞர் இனியவனின் காட்சிப்பிழை.!