கவிப்புயல் இனியவன் கஸல் 860 - 870

உயிரே ....
நீர் எழுத்து கடதாசியாய்....
மாறிவிட்டாயா....?
எழுதும் கவிதைக்கு ...
தாக்கம் சொல்கிறாய் ....
இல்லையே ....!!!

உன்னை அழக்காக ....
வரைபடம் வரைந்தேன் ....
கிறுக்கல் சித்தரம் போதும் ....
என்கிறாயே ....!!!

இந்த ஜென்மத்தில் முடியாது ...
அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் ....
என்கிறாயே - நீ என்ன ராமனா ...?
இன்றுபோய் நாளை வா என்கிறாயே ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 861
----------
உன் உயிராகவும்...... 
என் உடலாகவும் ....
இருந்த என்னை .....
எலும்பாக மாற்றிவிட்டாய் .....!!!

என் வாழ்க்கையையும் ....
சேர்த்து உனக்கு தானம் ....
போடுகிறேன் ....
எங்கிருந்தாலும் வாழ்க .....!!!

காதலித்தால் கிடைப்பது ....
காதலியோ காதலனோ ....
இல்லவே இல்லை .....
கண்ணீரும் கவலையும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 862

-----------
இப்போதுதான் புரிகிறது ....
நான் உனக்காக பிறக்கவில்லை .....
தவறுதலாக காதலித்து விட்டேன் ....!!!

எழுதப்பட்ட காதல் ....
காவியங்களும் காப்பியங்களும் ...
போதும் இதற்குமேல் ....
எவராலும் அழமுடியாது ....
நாம் மனத்தால் பிரிவோம் ....!!!

காதலர்கள் நல்ல நடிகர்கள்....
உனக்காக உயிர் விடுவேன் ....
என்று சொல்வதில் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 863

-------------
இரட்டை கதவை கொண்ட ....
நம் காதல் ஒற்றை கதவானது ....
யார் மூடுவது மற்ற கதவை ...?

காதல் மூறெழுத்தாய் ....
இருப்பதுதான் தவறு ....
கவலையும் மூன்றெழுத்து ....!!!

காதலிப்பது கடினமில்லை ....
காதலை சொல்வது கடினம் ...
அதைவிட கடினம் ....
காதலோடு இறப்பது .....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 864

----------

சிரித்து வாழவேண்டும் ....
காதலுக்கு இது பொருந்தாது ....
அழுதுவாழ்வதே காதல் ....!!!

நானும் ஞானிதான் ....
உள்ளே இருக்கும் உன்னையே ...
தினமும் தியானம் ....
செய்கிறேன் ....!!!

நான் முதல் தோற்றதும் ....
இறுதியில் தோற்றதும் ...
உன்னிடம் தான் ....
காதல் உனக்கு வராதத்தால் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 865
-----------
காதலை 
மறைத்து வாழ்வதும் ....
மறந்து வாழ்வதும் ...
இரட்டை துன்பம் ....
இரண்டையும் ....
தருகிறாய் ...?

காணாமல் போனது ...
ஆரம்பத்தில் இதயம் ....
இப்போ காதல் ....!!!

உன் நினைவுகள் தேன் ....
உன் பேச்சுகள் தேனி ....
தேன் எடுக்க தேனியிடம் ...
துன்பபடத்தானே வேண்டும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 867
----------
இலை 
உதிர்ந்த மரத்தில் ...
ஒரு அழகு உண்டு ...
என் காதல் உதிர்ந்த ...
பின்னும் வாழ்கிறேன் ...!!!

உன் கனவுக்குள் ...
நான் வந்துவிட கூடாது ....
என்பதற்காக தூங்காமல் ...
இருந்துவிடாதே -உன் 
கண்ணுக்குள் இருக்கும் ...
நான் இறந்துவிடுவேன் ...!!!

நீ 
மௌனமாய் இருக்கும் ....
ஒவ்வொரு நொடியில் ...
என் இதயத்தில் உயிர் ....
நிற்கும் நொடியென்று ....
எப்போது உணர போகிறாய் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 868
-----------
மூச்சுக்கும் காதலுக்கும் ...
ஒரு வேறுபாடும் இல்லை ...
நின்றால் ஒருவன் மரணம் ...!!!

நீ 
வாசிக்கும் வீணையின் .....
நாதம் நான் - இழையை ....
அறுத்துவிட்டு வாசிக்க ...
சொல்கிறாய் ,,,,,,!!!

கவிதையின் வரி -நீ 
கண்ணீரின் வலி -நீ 
காதலில் கானல் -நீ 
உன்னின் காதலை ...
தேடுகிறேன் நான் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 869
------------
உன்னை நான் நேரில் ....
பார்த்த நாட்களை விட ....
கவிதையில் பார்ப்பதே ...
அதிகம் .....!!!

மற்றவர்களுக்கு ...
நான் அழகான ரோஜா ....
உனக்கேன் நான் முள் ...?

நீ 
சொல்லாவிட்டால் என்ன ...?
உன் செயல் சொல்கிறது ...
என்னை விட்டு விலகிறாய்...
எனக்கு வேண்டும் -உன்னை ...
காதலிக்கும்போது உன்னிடம் ...
அனுமதியில்லாமல் காதல் ...
செய்ததற்கு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 870

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்