கவிப்புயல் இனியவன் கஸல் 460 - 470

நீ எதை சொன்னாலும் 
தலையாட்டினேன் 
இப்போ தலை குனிந்து 
வாழ்கிறேன் ....!!! 

அடிக்கும் காற்றும் 
நீயும் ஒன்றுதான் 
எப்போது எப்படி வருவாய் 
என்று புரியவில்லை ....!!! 

வாடிய மலரில் 
நடுப்பகுதி உடன் 
வாடுவதில்லை -அதில் 
ஈரம் இருக்கும் உன்னிடம் 
ஏன் காய்ந்தது .....? 

கஸல் 461

-----

நிலாவை போல் 
நீயும் 
நிலையில்லாதவள் ....!!! 

நான் சூரியன் எரிப்பேன் 
ஆனால் நிலையானவன் 
உன்னை 
தவிர எண்ணமில்லை 

என் காதல் வீட்டில் 
குப்பையாக இரு 
கூட்டி தள்ளி 
விடமாட்டேன் ....!!! 

கஸல் 462

-----

பொருள் சேர்த்தேன்...!!! 
உண்மை பொருளான 
உன் அன்பை சேர்க்காமல் 
மயங்கிவிட்டேன் ....!!! 

மாயைகள் நிறைந்த 
வாழ்க்கையில் -நீ 
மாய மான் -நான் 
தவிக்கிறேன் ....!!! 

தொட்டுப்பார் சுடும் 
நெருப்பு ...!!! 
விட்டுப்பார் சுடும் 
காதல் ....!!! 

கஸல் ;463

----

மீட்டு பார்ப்பதற்கு 
காதல் ஒரு புத்தகமில்லை 
நீயோ மீட்பது சந்தோசம் 
என்கிறாய் ....!!! 

பட்டறிந்து சொன்னான் 
ஒருவன் காதல் வேண்டாம் 
என்று - "பட்ட" அறிவான 
எனக்கு படவில்லை ....!!! 

காதலும் ஞானமும் 
ஒருதான் 
நினைக்க நினைக்க 
இன்பம் -நீ 
இரண்டுமற்றனிலை....!!! 

கஸல் 464

-----

உயிர் கொடுத்து 
காதலித்தேன் -அதனால் 
தான் என் உயிர் 
போகிறது .....!!! 

காதலால் பிறந்ததே 
உயிர் ....!!! 
நீ 
காதலால் கொல்கிறாய் ....!!! 

நினைத்த உடன் 
அழுகை வந்தால் 
தூய அன்பு - இது 
கடவுளுக்குதான் 
பொருந்தும் .....!!! 

கஸல் 465

----

நண்பன் காதலியின் வரவுக்கு ...
ஏங்குகிறான் ....
நான் உனக்கு காதல் வராதா ...
என்று ஏங்குகிறேன் ...?

நான் காதல் நெருப்பில் 
எரிகிறேன் -நீ 
மஞ்சள் பூசி குளிக்கிறாய் ...!!!

நீ 
நான் ஏற்றிய சுடர் 
நான் அதில் ஆடும் சுடர் ...!!!

கஸல் 466

----

நான் 
பட்டமாகவும் 
நூலாகவும் இருக்கிறேன் 
நீதான் காற்று 

சிலவேளை இனிப்பாகவும் 
சிலவேளையில் கசப்பாகவும் 
இருந்து -காதலை 
கற்று தருகிறாய் ...!!!

நீ என்று பிரிந்து 
சென்றாயோ -அன்று 
முதல் என் கண்ணில் 
கண்ணீர் இல்லை ...!!!

கஸல் 467

-----

நான் 
உன்னை காதலித்தாலும் 
உன்னிடம் இருந்து காதல் 
வராது - அதற்கு இதயம் 
வேண்டும் ....!!!

எனக்கு மாலை போடுவாய் 
என்றிருந்தேன் -எப்படி 
மாலை மாறியது ...?

உன் முகம் சூரியனும் 
சந்திரனும் -நான் 
ஒளிக்காக எங்கும் 
வான எரிகல்....!!!

கஸல் 468

-----

நீ 
சுயநலவாதி 
காதல் நின்றவுடன் 
நீயும் இருக்கவில்லை 

என்னை தேடினேன் 
உன்னில் கண்டேன் 
உன்னை தேடினேன் 
எங்கே இருக்கிறாய் ...?

நான் காதலில் 
தீபம் -நீ 
கடும் காற்று ....!!!

கஸல் 469

----

உன் காதல் ஆடையில் 
நான் ஒரு இழை 
எங்கிருக்கிறேன் 
தெரியவில்லை ....?

காதலில் விதிகளை 
கூறுபவள் -நீ 
விதி மீறுபவலும் -நீ 

உன்னோடு பேசிப்பார்த்தால் 
தெரிகிறது - காதல் உனக்கு 
வேடிக்கை பொருள் -எனக்கு 
வேதனை பொருள் ...!!!

கஸல் 470

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்