கவிப்புயல் இனியவன் கஸல் 410 - 420

நீ 
என்று என்னை 
வெறுத்தாயோ அன்றிலிருந்து 
காதல் என்னை 
அணைத்து கொண்டது ...!!!

நான் 
உன்னை நினைத்து 
வருகிறேன் -கால்கள் 
என் வீட்டுக்கே செல்கிறது 

மழையில் நனைந்தேன் 
உன்னை நினைத்தேன் 
மழைநீர் வெந்நீர் ஆனது ...!!!

கஸல் ; 411

----

காதல் மதுவை 
அதிகம் அருந்தி விட்டேன் 
மதுக்கிண்ணத்தோடு 
அழைக்கிறேன் ...!!!

அழுது 
கண் சிவந்த விட்டது 
நீ அழகான 
கண் என்கிறாய் ...!!!

உன்னிடம் 
தாகத்துக்கு தண்ணீர் 
குடிப்பதும் -கடல் 
நீரை குடிப்பதும் 
வேறுபாடில்லை ....!!!

கஸல் ;412

---

பௌர்ணமி நிலாவில் 
உன் வரவை 
எதிர் பார்த்திருந்தேன் 
நீ வந்தாய் -நிலா 
முகிலுக்குள் மறைந்தது ...!!!

காதலுக்கு நிலாவை 
ஒப்பிட்டேன் -நம் 
காதலும் தேய்கிறது ...!!!

நீ இதயத்தில் இருந்து 
வெளியேறி விட்டாய் 
உன் நிழல் இதயத்தில் 
இருக்கிறது ....!!!

கஸல் ;413

-----

நீ வருவாய் என்று 
ரோஜாவுடன் நின்றேன் 
ரோஜா இதழ் உதிர்கிறது 

கவிதைக்கு 
வாய் இருந்தால் 
நிச்சயம் என்னை திட்டும் 
உன்னை புகழ்ந்ததற்கு ...!!!

உனக்காக 
பூவை பறித்தேன் 
காதல் என்னிடமிருந்து 
பறிக்கப்பட்டு விட்டது ....!!!

கஸல்; 414

----

பூக்களின் தொகுப்பு 
மாலை - உன் 
நினைவுகளின் 
தொகுப்பு நம் காதல் 

தலை நிமிர்ந்து 
காதலித்தேன் -இப்போ 
வௌவால் ஆனேன் 

என் கையில் இருந்து 
விட்ட காதல் பட்டம் 
மரத்தில் சிக்கி 
தத்தளிக்கிறது ....!!!

கஸல் 415

-----

தப்புக்கு தண்டனை உண்டு 
காதல் தப்பல்ல -என்பதற்கு 
நீ தப்பையே செய்கிறாய் ...!!! 

ஒவ்வொரு பார்வைக்கும் 
ஒவ்வொரு அர்த்தம் உண்டு 
உனது பார்வை எப்பவுமே 
காதலை கொண்டு வரவில்லை ...!!! 

கடிகார முள் சுற்றி 
களைப்பதில்லை ,.... 
உன்னை சுற்றிய நான் 
இருக்கப்போவதில்லை ...!!! 

கஸல் 416

-----

காலை பொழுது 
பறவைகள் இன்பமாக 
காதலை ஆரம்பிக்கும் 
மாலை பொழுது இன்பமாக 
இருக்கும் -நீ பறவையிடம் 
கற்றுக்கொள் காதலை ,,,,,!!! 

நான் மூச்சு விடுவது 
காதலுக்கு -நீ 
மூச்சு விடுகிறாய் 
வலிப்பதற்கு ....!!! 

காட்டில் திரியும் 
மான் தண்ணீரை தேடுவது 
போல் ..!!! உன்னை தேடுகிறேன் 
நீ கானல் நீர் 

கஸல் 417

----

நீ சிரித்தாய் 
நான் சிரிப்பை 
தொலைத்தேன் 
நம் காதல் கதை ...!!!

காதல் இன்பமானது 
உன்னை கண்டபின் 
உணர்ந்தேன் - கிணற்று 
தவளையாக்கி விட்டாய் ...!!!

மனதில் உன்னை 
சிலையாக செதுக்கினேன் 
நீ 
காதலிக்க மறந்து விட்டாய் ...!!!

418 

---

உயிரே உயிரே 
என்று அழைப்பதுதான் 
காதல் -நீயும் 
அப்படித்தான் 
அழைக்கிறாய் -எனக்கு 
பயமாக இருக்கிறது ...!!!

பூவைவிட 
மென்மையானவள் 
கருங்கல்லாய் 
மாறிவிட்டாள்....!!!

காதலில் நான் சிலை 
நீ 
இப்போதான் கல் ...!!!

கஸல் 419

-----

நினைவு.. கனவு..வார்த்தை 
கோர்வையால் ஆனது 
காதல் - உன்னில் ஏதோ 
ஒன்று குறைகிறது ...!!!

அடிப்படை தேவையாக 
காதலை சேர்க்கலாம் 
உனக்கு பொருந்தாதே 
என்று 
கவலைப்படுகிறேன் ...!!!

கண்ணை கட்டிவிட்டு 
கடலுக்குள் குதித்து 
கரைசேர்ந்து விட்டேன் 
கரையில் நீ நின்று 
மீண்டும் கடலுக்குள் 
தள்ளி விடுகிறாய் 

கஸல் 420

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்