கவிப்புயல் இனியவன் கஸல் 470 - 480

நம் காதல் பூவின் 
வாழ்க்கையாகிவிட்டது 
அழகு வாசனை மென்மை 
மாலையில் வாடிவிடுகிறாய் 

வா கண்ணே.. 
மனிதர்கள் வாழும் 
இடத்தில் காதலிப்போம் 

உன்னையும் தூக்கி 
என்னையும் தூக்கும் 
காதல் சுகமானது 
நீ சுமையை தரமாட்டாய் 
என்கிறாய் ....!!! 

கஸல் 471

----

பசும் பாலில் கலந்த 
தண்ணீர்போல் -உன்னில் 
நான் கலந்திருக்கிறேன் 
அதுதான் உனக்கு 
விளங்கவில்லை .....!!! 

நான் வாக்கியமாக 
இருந்தால் -நீ 
சத்தமாக இருக்க வேண்டும் 
மௌனமாக இருக்கிறாய் ....!!! 

சூரிய காந்தி பூ 
சூரியன் திசையில் தான் 
திரும்பும் -நீ 
சந்திரன் வந்தால் தான் 
திரும்புவேன் என்று 
அடம்பிடிக்கிறாய் .....!!! 

கஸல் 472

----

இதயத்தில் இருக்க 
இடம் தந்தேன் -நீயோ 
வலியை தர தந்ததாய் 
நினைக்கிறாய் .....!!! 

வெய்யிலில் நனைந்து 
மழையில் உலரும் 
காதல் போல் ஆகிவிட்டது 
நம் காதல் ...!!! 

நீ காதல் கொண்டு 
பார்க்கிறாய் -என்ன 
செய்வது உன்னில் 
காதல் வரமாட்டேன் 
என்கிறதே .....!!! 

கஸல் 473

----

காதல் வாகனத்தில் 
இன்ப பயணம் செய்தேன் 
விபத்தில் சிக்கிவிட்டேன் ....!!! 

உன்னை கொண்டு 
காதல் கவிதை எழுதலாம் 
கவிதை 
வரமாட்டேன் என்கிறது .....!!! 

காதல் என்ற உன் 
கிண்ணத்தில் விழுந்து 
கடல் அளவு ஆசையுடன் 
ஏங்கும் தவளை நான் .....!!! 

கஸல் 474

-----

எனக்கு நீ 
பயப்பிடுகிறாய் 
என் காதலை விரும்புகிறாய் 

காதலை கண்டு பிடித்து 
விட்டேன் -என்னை 
கண்டு பிடிக்க வேண்டும், 

வேயப்பட்ட காதல் 
குடிசையில் -நீ குடிசை 
நான் ஒரு கிடுகு ....!!! 

கஸல் 475

-----

காதலில் நான் கடல் மீன் 
நீ தொட்டி மீன் ....?
எப்படி 
இணைவது இருவரும் ...?

உண்டியலில் காசை 
சேமிப்பது போல் உன் 
நினைவை சேர்த்தேன் 
நீ உண்டியலையே 
உடைத்து விட்டாய் ...!!!

காதல் தோல்வியில் 
தத்தவம் வரும் 
நீ தத்துவத்தை 
தந்துவிட்டாய் ....!!!

கஸல் ;476

---

உன்னால் தூக்கி 
வீசப்பட்ட மலர் நான் 
இன்னும் வாசமாக 
இருக்கிறேன் ...!!!

தூங்காமல் கனவு 
வரும் உன்னை 
நினைத்தால் -இப்போ 
தூங்கியும் வருவதில்லை 

நூல் அறுந்த பட்டமும் 
நானும் ஒன்றுதான் 
ஒருதான் எங்கே விழுவது 
என்று தெரியாமல் அலைகிறேன் 

கஸல் 477

----

என்னை உனக்கு பிடிக்கும் 
என் காதலை உனக்கு 
பிடிக்கவில்லை ....!!!

காதலில் நாம் 
நெருங்கி விட்டோம் 
காதல் தான் பாவம் 
அழப்போகிறது ....!!!

உன்னை சந்தித்தபின் 
மனிதனானேன் -நீ 
என்ன வாகினாய் ...?

கஸல் ;478

-----

கவிதைக்கு 
பொய் அழகு 
உனக்கும் அதுதான் 
அழகு ....!!!

இருட்டில் பூத்த 
மலரை கேட்கிறாய் 
பகலில் பறிக்க சொல்கிறாய் 

நாம் காதலர் 
என்று சொன்னால் 
யாரும் நம்புவதில்லை 
நம்பும் படியாக நீ 
மாறவில்லை ....!!!

கஸல் 479

----

திக்கு தெரியாத காட்டில் 
உன்னோடு அலைகிறேன் 
காதல் என்ற நோயால் 

கடல் சமுத்திரத்தில் 
கலக்கும் -நீ 
குளத்தை கலக்க 
சொல்கிறாய் ....!!!

அன்பு கயிற்றால் 
என்னை கட்டுவாய் 
என்றிருந்தேன் -இரும்பு 
கயிற்றால் காட்டிவிட்டாய் ...!!!

கஸல் ;480

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்