கவிப்புயல் இனியவன் கஸல் 310 - 320

காதல் வலியில் 
கிறுக்குகிறேன் 
கவிதையாகிறது 

உன்னோடு நான் 
வாழ்விரும்புகிறேன் 
நீ என்னை 
வாழ்த்தவிரும்புகிறாய் 

நான் உன்னை 
கண்ணுக்குள் 
வைத்திருக்கிறேன் 
நீ 
கவிதையாய் 
வலிக்கிறாய் ....!!!

கஸல் ;311

----

நிலவுக்கு தெரியாது 
தான் அழகு 
உனக்கும் தான் ...!!!

பலாப்பழத்துக்குள் 
இருக்கும் -சுழை
போல் நான் உன்னுள் 

நினைத்து பார்க்கிறேன் 
நீ காதலியா ..?
காதல் விதியா ..?

கஸல் ;312

----

நீ 
விலாங்கு மீனா ...?
காலை இன்பம் 
மாலை துன்பம் 

பூட்டிய இதய 
திறப்பை 
என்னிடம் 
தராதே 

நினைக்கும் 
போது -நீ 
ஒளியாகவும் 
இருளாகவும் 
வருகிறாய் 

கஸல் ;313

----

நான் 
உன்னோடு 
கதைத்ததை விட 
தனியே கதைத்தது 
அதிகம் 

காதலுக்கு 
ஊசியும் நீ 
நூலும் நீ 

நெருப்பில் 
புகை வரவேண்டும் 
உன்னால் இதயத்தில் 
இருந்து வருகிறது ...!!!


கஸல் ;314

----

இதயத்தில் 
முள்ளாய் படர்கிறாய் 
சுகமாய் இருக்கிறது 

இதயம் தான் 
எனது மூச்சு 
உனது ....!!!

ஆலயத்தில் 
பந்தல் போடுகிறேன் 
நீ 
ஆகாயத்தில் 
போட சொல்கிறாய் 

கஸல் ;315

----

காத்திருப்பது சுகம் 
காயவைப்பது 
அதர்மம் ....!!!

பாலுக்குள் தண்ணீரை 
கலப்பது இயல்பு 
நீ எண்ணையை 
கலந்து குடிக்கிறாய் 

இதயத்தில் காயத்தை 
ஏற்படுத்திய நீ 
பெரிய காயத்துடன் 
இருக்கிறாய் .....!!!

கஸல் 316

----

காதல் 
எல்லாவற்றிலும் 
உண்டு -எல்லாவற்றிலும் 
வரும் 
அழகானது 
ஆபத்தானது ....!!!

உன்னால்
என் ஆயுள் 
குறைகிறது 
உன்னை பற்றிய
நினைக்கையில்
அதிகரிக்கிறது 

காதல் பூ 
குளிக்க ஆசைப்படும் 
என்னை
தீக்குளிக்க சொல்கிறாய் ...!!!

கஸல் 317

----

உன் வலியால் 
என் காதல் முகவரியை 
தற்காலிகமாக 
மாற்றி விட்டேன் ....!!!

காதல் தேன்கூடு...!!! 
போதையாகவும் இருக்கும் 
அதிகமானால் வலியாகவும் 
மயக்கமாகவும் இருக்கும் ....!!!

காதல் நிலாவை கைபிடிக்க 
ஆசைப்படால் -காதலி 
காதல் சூரியனை ஏன் 
தேடுகிறாய் ....!!!

கஸல் 318

----

பிரமிட் 
மம்மி போல் உன் 
நினைவுகளும் 
அழியாமல் இருக்கின்றன ...!!!

காற்றில் பறக்கும் 
பஞ்சுபோல் -உன் 
நினைவுகளும் 
நிலையற்று அலைகிறது ...!!!

காதலின் மலராக 
உன்னை பார்க்கிறேன் 
நீ மரமாக இருக்கிறாய் ...!!!

கஸல் 319

----

உயர செல்ல செல்ல 
ஈர்ப்பு குறையும் 
நீ தூர செல்ல செல்ல
நினைவு கூடுகிறது ...!!!

உன்னை கண்டவுடன் 
முகம் சிரிக்கிறது 
இதயம் அழுகிறது ...!!!

காதல் கீதம் 
குயில் போல் பாடு 
மயில் போல் அழறுகிறாய் ...!!!

கஸல் ;320

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்