கவிப்புயல் இனியவன் கஸல் 500 - 510

நிலா 
உன்னை கண்டதால் 
வருத்தபடுகிறது -என்னை 
காத்திருப்பதை நினைத்து ...!!!

நான் பாதை 
நீ தூரம் 
காதல் தான் கால் 
பயணம்தான் முடியவில்லை ...!!!

இது கண்ணீர் கதை இல்லை 
நம் காதலி கதை 
கண்ணீர் ஆக்கியது நீ ....!!!

கஸல் 501

----------------
காத்திருக்கிறேன் 
காதல் வந்தது 
நீ வந்தாய் இருந்த 
காதலும் போனது ....!!!

உன்னை விட்டால் 
என்னை காதலிக்க 
யாரும் - என்று நினைக்கிறாய் 
அது காதல் இல்லை ...!!!

உனக்கு பயந்து என் 
வீட்டாரே வந்து விடார்கள் 
உன்னை பெண் பார்க்க ...
காதல் மிரட்டி வரகூடாது ...!!!

கஸல் 502

-----------

காதலை நீ எப்போது 
ஏற்றாயோ அப்போதே 
ஆரம்பித்துவிட்டது 
கண்ணீர் .....!!!

என் இறப்புக்கு முன் 
உன்னோடு காதலாக 
இருந்திட வேண்டும் ...!!!

விளக்கில் படிந்த 
புகைபோல் ஒட்டி 
இருக்கிறது உன் 
நினைவுக்குள் 
துலக்கி எடுத்துவிடாதே ....!!!

கஸல் 503

------------

என்னிடம் நிரம்பி 
இருக்கும் காதலை 
காதல் செய்யாமல் 
தா என்கிறாய் எப்படி ....?

காதல் சுகத்தைவிட 
நீ தந்த வலிதான்
சுகமாக இருக்கிறது ...!!!

நீ 
பிரிந்து போனத்தில் 
சந்தோசம் - நினைவகளை 
கொண்டு போகவில்லை ....!!!

கஸல் 504

------------

என்னுடையது 
உன்னுடையது 
என்று நான் காதலை 
பார்க்கவில்லை -நீ 
உன் காதலை கொண்டு 
சென்றுவிட்டாய் .....!!!

காதலை எதனோடும் 
ஒப்பிடுவேன் -ஆனால் 
உன்னை தவிர ....!!!

பெண் மனதை தொட்டால் 
காதல் நான் உன் மனதை 
தொட்டேன் -காதல் 
காதல் வாடியது....!!!

கஸல் 505

-------------

என் புகைப்படத்தில் 
எப்படி வந்தாய் ....?
இதயம் எப்போது 
புகைப்படம் எடுத்தது ...?

உன்னை காதலித்தது 
நான் பெற்ற பாக்கியம் 
என்றிருந்ததை ஏன் 
வீணாக்கினாய் ...?

காதலித்தபின் 
எல்லோரும் அறிவாளி ஆவார் 
நீ என்னை முட்டாள் 
ஆக்கிவிட்டாய் .....!!!

கஸல் 506

--------------

என்னை கண்டதும் கண்ணீர் 
வடிக்கிறாய் -உன்னைப்போல் 
எனக்கு அழதெரியாது
இதயம் பற்றி எரிகிறது ...!!!

காதலில் மயங்கி 
வந்தேன் -நீ மயக்கிவிட்டாய் 
நீ மயக்கும் வலி தருபவள் 

உன்னை சந்தித்தபின் 
தான் - நான் காதலிக்க 
தகுதியுடையவன் 
என்று உணர்ந்தேன் 
நீ அதை ஏன் மறுக்கிறாய் ...?

கஸல் 507 

-------------

இதயத்தில் குடியிருப்பாய் 
என்றுதான் நினைத்தேன் 
இதயத்தை புண்ணாக்கி 
விட்டாய் ....!!!

காதல் என்றால் இரட்டை 
தண்டவாளம் -நீ 
ஒற்றை தண்டவாளத்தில் 
பயணம் செய்கிறாய் ...!!!

காதலில் மௌனம் தேவை 
நீ பேசியே என்னை ஊமை 
ஆக்கிவிட்டாய் 
நான் இப்போ மௌனவிரதம் ....!!!

கஸல் 508

------------

காதலித்தவுடன் 
உள்ளம் வெளிச்சமாகும் 
எனக்கும் வந்தது 
இப்போ இருட்டி விட்டது ...!!!

காதல் நதியில் 
காதல் படகில் செல்ல 
விரும்பும் என்னை 
வறண்ட நதியில் கூட்டி 
செல்கிறாய் ....?

காதல் ஒரு பூச்சியம் 
காதலித்தவர் சேர்ந்தால் 
காதல் பூச்சியமாகி விடும் ....!!!

கஸல் 509

-----------

உனக்கு என்று கவிதை 
எழுதினால் அது எப்பவும் 
சோகமாக வருகிறது ....!!!

உன்னில் ஒளித்து 
விளையாடலாம் -என்று
உன்னிடம் வந்த என்னை 
ஒழித்துவிட்டாய்....!!!

காதல் வானவில்லை 
இரவில் காட்டு என்று 
அடம் பிடிக்கிறாய் 
இதை விட என்னை 
கை விட்டிருக்கலாம் ....!!!

கஸல் 510


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்