கவிப்புயல் இனியவன் கஸல் 280 - 290

இதயத்தில் 
இருக்கவேண்டிய நீ 
குரல் வளையில் 
இருக்கிறாய் ....!!!

காதல் எனக்கு 
உள்ளம் 
உனக்கு 
உடல் ....!!!

நான் தண்ணீர் 
மேல் தாமரை 
நீ தாமரைமேல் 
தண்ணீர் 

கஸல் ;281
---
காதல் 
தேன் கூடு 
குழவிக்கூடு 
உனக்கு எது ....?

பாலும் வெள்ளை 
கள்ளும் வெள்ளை 
உன் காதலைப்போல் ...!!!

வலையை போட்டேன் 
காதல் மீனுக்கு பதில் 
காதல் கல் வருகிறது 

கஸல் 282

----

காதல் கடிதம் 
போட்டேன் 
எனக்கே வந்தது ...!!!

கருங்கல்லில் 
ஆணி அடிப்பது போல் 
நம்காதல் 

காதல் தெய்வத்துக்கு 
புது பூ வைக்கிறேன் 
நீ 
பழைய பூ வைக்கிறாய் ....!!!

கஸல் 283

----

நம் 
காதல் சாண் ஏற 
முழம் சறுக்குகிறது ...!!!

காதல் மலையில் 
ஏறுவது கடினம் 
இறங்குவது சுலபம் 

மெட்டியை 
காலில் போடவேண்டும் 
நீ 
கழுத்தில் போடவேண்டும் 
என்கிறாய் ....!!!

கஸல் ;284

----

நம் காதல் 
கதை 
குறுங்கதையாகி
போனது 

காதல் மரமாக 
தோன்றுவதில்லை 
தளிராகதான் 
தோன்றும் 

நான் 
உன்னோடு சடுகுடு 
விளையாட விரும்புகிறேன் 
நீயோ 
கண்ணை கட்டி 
விளையாடுகிறாய் 

கஸல் 285

----

நினைப்பதற்கும் 
மறப்பதற்கும் 
இதயம் ஒன்றுதான் 
உள்ளது ....!!!

ஒருநொடியில் காதல் 
ஒரு நொடியில் 
தோல்வி ....!!!

பட்டத்தை பறக்க 
விடுகிறேன் -நீ 
நிலத்தில் பறக்கிறாய் ....!!!

கஸல் ;286

-----

ஆகாயமும் 
நிலமும் 
பார்க்கமுடியும் 
எப்படி இணைவது ...?

எலியும் பூனையும் 
போல் -நம்
காதல் இனிமையாக 
இருக்கிறது ...!!!

காதல் கடிதத்தை 
எதிர் பார்த்தேன் 
திருமண அழைப்பிதல்
தருகிறாய் ....!!!

கஸல் ; 287

----

உன் 
முடிவு சிரிப்பா...?
அழுகையா ...?

காத்திருப்பது 
சுகம் - காதலிப்பாய் 
என்றால் ...???

வெந்நீரில் 
தேநீர் ஊற்று 
பன்னீரில் ஊற்றுகிறாய் ...!!!

கஸல் 288

----

நீ 
அழகான பூ 
பறிக்க வருகிறேன் 
அழுகிறாய் .....!!!

நினைப்பதை 
சொல்லமுடியும் 
உண்மைக்காதலில் 
மட்டும் ......!!!

காதல் குறுஞ்செய்தி 
அனுப்பினேன் -நீ 
இறுதி தந்தி அடித்து 
விட்டாய் ....!!!

கஸல் ;289

-----

காதலில் 
நல்ல துடிப்பு 
வேண்டும் -நீ 
நல்லா நடிக்கிறாய் ....!!!

உனக்குமா ..?
காதல் 
எட்டாப்பழம் ...?

நிலாவுடன் 
நான் பேச 
விரும்புகிறேன் 
நீ பூரண இருள் ....!!!

கஸல் ;290

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்