இடுகைகள்

காதல் சாரதி

உயிரே சற்று தூங்கு .... அப்போதுதான் உன் கண்ணில் ... இருந்து தப்பிக்கமுடியும் ....!!! இன்பமாய் பயணித்த .... காதல் படகில் எதற்கு ... நடுகடலில்  என்னை .... தள்ளிவிட்டாய் ....? நான் வேகமாக ஓடும் .... காதல் சாரதி ..... நீ - சிகப்பு நிற சைகை ... விளக்கு .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;815

இதயமே காதல் தண்டனை ....!!!

வலையில் சிக்கிய மீன் ... தப்புவதற்கு வாய்ப்பு உண்டு ... காதலில் சிக்கிய எவரும் .... தப்பியதே இல்லை .....!!! முகத்தில் என் உருவம் .... இதயத்தில் உன் உருவம் ... தாங்க முடியாமல்.... தவிக்கிறது இதயம் .....!!! நினைவுகளை தரும்போது .... இன்புற என் இதயமே ... துன்பத்தை தரும்போது .... தங்கிகொள் - அது தான்  காதலின் தண்டனை ....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;814

காயம் வந்துவிட்டதே .....!!!

காதல் ... செய்ய முன் இரத்தம் ... உடலில் ஓடியது ....! இப்போ கண்ணீர் ... ஓடுகிறது .....!!! காதல்  தண்ணீரால் .... அபிஷேகம் செய்வாயென ... எதிர்பார்த்தேன் .... வெந்நீரால் அபிஷேகம்.... செய்கிறாய் .....!!! கண்ணால் காதல் ..... வருவதே வழமை .... உன் கண்ணால் .... காயம் வந்துவிட்டதே .....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;813

கவிதையால் அழுகிறேன் ....!!!

கவிதையால் உன்னை .... அழவைக்கவில்லை.... உன்னை காதலித்ததால் ... கவிதையால் அழுகிறேன் ....!!! எம் விடுதலை பேராட்டத்தின் .... வடுபோல் தான் நீயும் ... அழியவே மாட்டாய் ....!!! நீ நெருப்பு -என்னை தீபமாக்கவதும் .... சாம்பலாக்குவது .... உன் கையில் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;812

காதல் தூவானம்

இரவு புல்மேல் பனி .... நான் அழுத்த கண்ணீர் .... துளிகள் ... இரவில் தானே நீ நினைவுகளையும் ... தந்தாய் .....!!! உன்னை வர்ணிக்க ... வார்த்தைகளை தேடினேன் ... கண்ணீராய் வருகிறது ...!!! காதல் தூவானம் அழகு .... எனக்கு காதல் புயல் ... வீசிவிட்டது ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;811

கண் ஓரத்தில் கண்ணீர் ....!!!

என்னை கண்டதும் உன் கண் ஓரத்தில் கண்ணீர் ....!!! தரையில் துடிக்கும் .... மீன் போல் துடிக்கிறேன் ... வத்தல் குழம்பு வைக்க ... நீ துடிக்கிறாய் ....!!! உன் நினைவு வலையால் .... பின்னப்பட்டு -மீன்போல் ... துடிக்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;810

காதல் தொட்டிக்குள் ...!!!

மீனைப்போல் ... நீந்திக்கொண்டே ... இருக்கிறேன் .... காதல் தொட்டிக்குள் ...!!! போ ..போ ... என்னைவிட்டு போ ... எப்படியும் என்னிடம் ... நீ வந்தே ஆவாய் ...! என்னைபோல் ... காதலிக்க உலகில் ... எந்த பைத்தியமும் ... இல்லை .....!!! என் ஒவ்வொரு துடிப்பும் ... நீ வந்து போவதாய் ... உணர்கிறேன் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;809

மூச்சாய் வந்து போகிறாய்

நீ என் கவிதை ...! சோகக்கவிதையாகவும் ... அடிக்கடி வருகிறாய் ...!!! நான் நுரையீரல் .... அதனால் தான் -நீ மூச்சாய் வந்து வந்து ... போகிறாய் ....!!! காதல் முத்தாய் -நீ மூழ்கி எடுத்தேன் .... செத்துபோனேன்....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;808

காதல் தற்செயல் நிகழ்ச்சி ....!!!

இதயம் துடிப்பதுக்கு .... காரணமாய் இருந்த- நீ ... ஏன் துடிக்கிறது ...? என்றாக்கிவிட்டாய் ....!!! ஒவ்வொரு துளி .... கண்ணீருக்கும் - நீ காரணம் - மறுத்தாய் ... கல்லறைக்கு காரணம் ... சொல்வாய் .....!!! காதல் பருவத்தின் ... தற்செயல் மகிழ்ச்சி  ..... எனக்கு காதல் .... தற்செயல் நிகழ்ச்சி ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;807

எனக்கு தலைவிதி....!!!

கற்கண்டாக இருந்த .... இதயத்தை உப்புக்கல்.... ஆக்கிவிட்டாய் .....!!! காதல் ... பொது விதி .... எனக்கு தலைவிதி....!!! ஆசைக்கு.... அளவு வேண்டும் .... நான் உன்னில் பேராசை ... பட்டேன் இப்போ ... படுகிறேன் .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;806

அக்கறையில்லை ....!!!

உனக்கு இரு வழிதான் உண்டு ... என்னை காதலிப்பது ... என்னை கொல்லவைப்பது....!!! உன் புன்னகை ... என் அனைத்து உறவையும் ... எதிரியாக்கி விட்டது ....!!! நான் இக்கரை ... நீ அக்கரை அதுதான் நீ காதலில் .. அக்கறையில்லை ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;805

உன் நினைவுகள் ....!!!

உன்னை காதலித்து ... வெய்யிலில் பூத்த பூ ... ஆகிவிட்டேன் .....!!! உன்னை காதலித்த நாள் .... ஆத்மா என்னை விட்டு .... போய்விட்ட நாள் ....!!! இருண்டிருக்கும் ... இதயத்தின் சிறிய ஒளி .... உன் நினைவுகள் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;804

மதிப்பு பூச்சியம் .....!!!

மது கொடியது .... மாதுவும் கொடியது .... காதல் எல்லாவற்றையும்.... விட கொடியது ....!!! உயிரே ... எண்ணத்தால் கவிதை ... எழுதி - கண்ணீரால் ... அழிக்கிறேன் ....!!! தோல்வி ஒன்று ... இல்லாவிட்டால் .... காதல் என்ற ஒன்றுக்கு .... மதிப்பு பூச்சியம் .....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;803

அனுபவிக்கிறேன் ....!!!

என் காதலுக்கு ... என் கண் தான் கண்டம் .... பார்த்தேன் அனுபவிக்கிறேன் ....!!! நான் உன் மூச்சு .... நீ கடைசி மூச்சு ... விடும் வரை -நான் ... இருப்பேன் .....!!! நீ காதலை விட .. அழகானவள் உன்னிடம் காதல் .... எப்போது வரும் ....? + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;802

நீ வரம் தர மறுக்கிறாய் ....!!!

இதயமும் கருகும் .... இதயத்தில் இருப்பவர் .... வெளியேறினால் ....!!! மூச்சும் தீயாய் சுடும் ... மூச்சாக நினைத்தவர் ... முடிவு கட்டினால் ....!!! நான் கோயில் .... நீ அதில் தெய்வம் ... அருள் தான் இல்லை .... நீ வரம் தர மறுக்கிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;801