இடுகைகள்

நீ வாடிவிட்டாய் ....

நீ மரத்தின் வேர் .... நான் வெறும் கிளை .... நீ வாடிவிட்டாய் .... நான் பசுமையாய் ... இருக்கிறேன் ....!!! கானல் நீர் ... கேள்விப்பட்டேன்   .. என் காதலில் ... உணர்ந்தேன் ....!!! என் நினைவுகள் ... உனக்கு நீர் குமிழி ... எனக்கு நினைவுகள் .... நீ அருவி ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;833

உன் இதய கதவை ...

என் இதயம் ... காதல் மயானம் .... நீ இதயத்தில் இன்னும் ... மூசு விட்டுக்கொண்டே .... இருகிறாய் ....!!! உன் இதய கதவை ... பலமுறை தட்டினேன் .... என்னை  பூட்டிவிட்டாய் .... திறந்துவிடு கதவை ...!!! உன் மறதிதான் ... எனக்கு இன்பம் ... கவிதையை வடிகிறேனே....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;832

உன்னை தேடுகிறேன் ....!!!

உன்னை நான் மன்னிக்கிறேன் ,,,, எனக்கு வலிகளை... உன்னை அறியாமலே ... தருகிறாய் ....!!! உன் சின்ன குழிவிழும் ... சிரிப்புத்தான் என்னை ... அடையாளம் அற்றவனாக்கியது .... என்னை தொலைத்து உன்னை தேடுகிறேன் ....!!! நீ கண் சிமிட்டும் நேரம் .... ஒவ்வொரு நொடி இறக்கிறேன் நீ கண் மூடினால் ....? + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;831

கண்ணீர் இல்லை ...!!!

காதல் .... தோற்றபின் பூக்கள்  மட்டும் வாடுவதில்லை .... அலைந்த வண்டும் தான் ....!!! மாதுவை இழந்தேன் .... பரவாயில்லை .... மதுவும் உன்னைப்போல் .... சிற்றின்பம் தான் ....!!! என் கண்கள் .... அழ மறுக்கிறது .... வேறொன்றும் இல்லை ... கண்ணீர் இல்லை ...!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;830

வில்லங்கப்படுகிறேன்....!!!

விரும்பாததை .... விரும்பி .... வில்லங்கப்படுகிறேன்....!!! நீ என்னை பிரிந்து .... கை கழுவி விட்டாய் .... கவிதை தேவதை .... கை கொடுக்கிறாள் ....!!! என்  வாழ்க்கைக்கும் ... மரணத்துக்கும் .... காரணம் காதல் .....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;829

இதயம் எங்கே .....?

உன்னில்....  அழகான கண் .... இருக்கிறது ..... இதயம் எங்கே .....? உன்னிடமிருந்து ... என்னை எடுத்துவிடு .... என்னிடமிருந்து .... உன்னை எடுக்கவே .... முடியாது .....!!! காதல் கலகலப்பில் ... தொடங்கி .... சலசலப்பில் ... முடிந்து விட்டது .....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;828

உடலை பிரித்துவிட்டாய் ....!!!

உன் பாசம் ... எனக்கு விஷம் ... உன் காதல் ... எனக்கு பாச கயிறு ......!!! காதல் தோல்வி .... நீ ஏற்படுத்தவில்லை .... நினைவை தந்து விட்டு ... உடலை பிரித்துவிட்டாய் ....!!! பூவுக்கு  இருந்த மேன்மையை ... கேவலபடுதிவிட்டாய் .... காதல் பரிசாய் தந்து ....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;827

காதல் வலியை சுமக்கிறேன் ....!!!

காதலியோடு ..... பூங்காவில் ... இருந்தேன் -இப்போ ... நினைவு மட்டும்  இருக்கிறது ....!!! இரண்டு இதயம் ... ஒரு இதயமாக மாறி .... காதல் வலியை... சுமக்கிறேன் ....!!! உன்னோடு வாழ்வதும் .... விண் வெளியில் வாழ்வதும் ... ஒன்றுதான் காற்றில்லாமல் ... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;826

காதலை எதிர்கிறாய் ......!!!

வாழ்க்கையில் காதல் ... வேண்டும் என்கிறாய் ... காதலை எதிர்கிறாய் ......!!! காதல் ரகசியமாக .... இருக்கும் வரை .... இன்பம் - உறவுகளிடம் ... கூறினாய் துன்பமானது ....!!! காதலால் உயிரை ... துறக்ககூடாது .... உன்னால் உயிரைத்தவிர ... எல்லாம் இழந்துவிட்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;825

மீண்டும் துளிர்க்காது .....!!!

காதலை ... தவறை தவறால் .... மறைக்கமுடியாது .... காதல் புனிதமானது ....!!! பெரிய மரத்தின் கீழ் ... சிறிய செடிபோல் .... ஆகிவிட்டது நம் காதல் ......!!! ஒவ்வொரு காதல் தோல்வியும் இதயத்தில் ... புதைக்கப்படுகிறது .... மீண்டும் துளிர்க்காது .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;824

இதயத்தை தந்துவிடு ....!!!

காதல் இள நீர் போன்றது ... பருக பருக இனிமை ... தூக்கி எறியப்படும் ....!!! என்னை மறந்து ... காற்றாடிபோல் பறக்கிறேன் .... உன்னுடன் நூல் இருப்பதை மறந்துவிட்டேன் ....!!! இறைவா .... மறு ஜென்மத்தில் ... காதல் இல்லாத இதயத்தை .... தந்துவிடு ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;823

நினைவுக்கு வருகிறாய் ....!!!

மனதில் கவலை .... தோன்றும் போதெல்லாம் .... எப்படியோ  நீ நினைவுக்கு வருகிறாய் ....!!! வலையில் அகப்பட்ட பூச்சி ... பிடிக்கவந்தாய் .... வலை அறுந்துவிட்டது ....!!! காதல் அலங்காரப்படுத்தும் ..... அகோரப்படுதும் .... அலையவைக்கும் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;822

உன் காதல் போதும்

ஒன்றில் மறந்துவிடு  மறக்கவைத்து விடு ..... மறந்து போயும் உன்னை ... மறக்க முடியவில்லை ....!!! சூரியன்  தேவையில்லை .... என்னை எரிக்க .... உன் காதல் போதும் ....!!! கல்லறையில் இருந்தும்  கூறுவேன் -காதல் தான்  என்னை உலகிற்கு காட்டியது ....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;821

காதல் வரும்போது சொல்

கண்ணால் விபத்து ..... கவனம் காதல் வரும் .... காதல் வந்தால் கவனம் .... கண்ணீரும் வரும் ....!!! நீ  மூச்சு விடும் இதயத்தோடு .... வாழ்கிறாய் -காதல் இதயம் ... வரும்போது சொல் -நான்  காதலிக்கிறேன் .....!!! நன்றி உயிரே .... எனக்குள்ளும் காதல் ... இருக்கு என்பதை .... புரியவைத்தமைக்கு .... உனக்கு என்ன ஆயிற்று ....? + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;820

கவலை படவில்லை

கவலை படவில்லை  உன்னை இழந்ததால் ...! காதலும் கவிதையும் .... உன்னால் கிடைத்தது ....!!! என்  ஒவ்வொரு மூச்சும்  உனக்கான கவிதை ....!!! என்னை அழவைத்து .... பார்ப்பது உனக்கு பிடிக்கும்  என்று எனக்கு தெரியும் .... இன்னும் தா வலியை....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;819