இடுகைகள்

காதல் முகவரியில் நீ

நம் காதல் கண்னில் .... ஆரம்பித்ததால் ..... கண்பட்டு விட்டது .... காயப்பட்டுவிட்டது ....!!! காதலில் நான் .... தொடக்கப்புள்ளி.... நீ வட்டம் ......!!! உனக்கு போட்ட .... காதல் கடிதம் ... எனக்கே திரும்பி .... வந்துவிட்டது .... காதல் முகவரியில் ... நீ இல்லையாம் .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;842

என் கவிதை வேறு....!!!

பகலில் சந்திரன் ... இரவில் சூரியன் ... நம் காதல் நிலை .... இதுதான் ....!!! என்னிடம் கவிதையும் .... உன்னிடம் காதலும் ... என்னபயன் ...? நம்மிடம் காதல் ... இல்லையே......!!! நீ கனவாய் வந்தால் .... என் கவிதை வேறு.... நினைவாய் வந்தால் ... என் கவிதை வேறு....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;841

எரிகிறது காதல் ....!!!

ஆடு புலி ஆட்டம்போல் .... நம் காதல் -நீ அசைத்தால்   ... வெளியேறிவிடுவேன் ....!!! நம் காதல் இறந்துவிட்டது .... நீ கண்ணீர் அஞ்சலி ... செலுத்துகிறாய் ....!!! சந்திரன் என்று .... சூரியனை .... காதலித்துவிட்டேன்.... எரிகிறது காதல் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;840

வறண்ட நதியில் ...

காதலில் நான் சூரிய உதயம் -நீ அந்திவானம் ....!!! வறண்ட நதியில் ... கப்பல் ஓட அலைகிறாய் ... நான் எப்போது காதல் ... மழை பொழியும் ....? காத்திருக்கிறேன் ....!!! உண்மை காதல் என்ற ஒன்று இருக்கவே ... கூடாது என்று நினைத்து ... விட்டாயோ ....? + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;839

என் இதய நரம்பு ....

என் இதய நரம்பு .... முற்களாய் மாறுகிறது .... நீ பூக்களின் மீது .... தூங்குகிறாய் ....!!! என் கண்ணில் நெய் .... இருப்பதாய் நினைகிறாய் .... இப்படி உருக்குகிறாய் ....!!! காதலின் தோல்விக்கு ... தண்டனை -உன்னை தலைகுனிந்து வாழ ... வைப்பதே .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;838   

காயமடைந்து விட்டேன் ....!!!

பூவுக்குள் இருக்கும்... தேன் போல் நீ .... மறைந்திருகிறாய் .... நான் அலைகிறேன் ....!!! கண்ணாம் பூச்சி ... விளையாட்டை .... காதலிலும்..... விளையாடுகிறாய் ....!!! உன் கண்ணோடு.... என் கண் மோதுபட்டு .... காயமடைந்து விட்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;837

காதலும் விழுந்தது ....!!!

வெண் முகிலின் நிலாவே .... உன்னை அண்ணாந்து .... பார்ப்பதுபோல் தான் ... என் காதலும் .....!!! காற்றில்லா பட்டம் .... தள்ளாடி தள்ளாடி ... விழுவதுபோல் என் ... காதலும் விழுந்தது ....!!! உனக்கு என்னில் .... அக்கறையில்லை ... அதுதான் நீ காதலில் ... அக்கரையில் நிற்கிறாய் ....!!!   + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;836

நீ புதிய மலர் தேடுகிறாய்....!!!

என்றும்  அம்மா தெய்வம்  இன்று நீயும் தெய்வம் .... காட்சி தா ....!!! நீ   மீனாக  இருந்துவிடு ... நான் தூண்டில் புழுவாக ... இருக்கிறேன் .... அப்போதென்றாலும்..... என்னை தொடு....!!! நான்  வாடிவிழும் மலர் .... நீ  புதிய மலர் தேடுகிறாய்....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;835

நாம் அழியவே முடியாது ....!!!

நீ  ஐந்து முக தீபம் .... அழகாக இருகிறாய் ... அணைத்தால் சுடுகிறாய் .....!!! என்  காதலில் இலை.... உதிர்காலம் - நீ மூச்சு விடுகிறாய் -நான்  உதிர்கிறேன் ....!!! காதல் தலைஎழுத்து .... நமக்கு கல் எழுத்து .... நாம் அழியவே முடியாது ....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;834

நீ வாடிவிட்டாய் ....

நீ மரத்தின் வேர் .... நான் வெறும் கிளை .... நீ வாடிவிட்டாய் .... நான் பசுமையாய் ... இருக்கிறேன் ....!!! கானல் நீர் ... கேள்விப்பட்டேன்   .. என் காதலில் ... உணர்ந்தேன் ....!!! என் நினைவுகள் ... உனக்கு நீர் குமிழி ... எனக்கு நினைவுகள் .... நீ அருவி ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;833

உன் இதய கதவை ...

என் இதயம் ... காதல் மயானம் .... நீ இதயத்தில் இன்னும் ... மூசு விட்டுக்கொண்டே .... இருகிறாய் ....!!! உன் இதய கதவை ... பலமுறை தட்டினேன் .... என்னை  பூட்டிவிட்டாய் .... திறந்துவிடு கதவை ...!!! உன் மறதிதான் ... எனக்கு இன்பம் ... கவிதையை வடிகிறேனே....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;832

உன்னை தேடுகிறேன் ....!!!

உன்னை நான் மன்னிக்கிறேன் ,,,, எனக்கு வலிகளை... உன்னை அறியாமலே ... தருகிறாய் ....!!! உன் சின்ன குழிவிழும் ... சிரிப்புத்தான் என்னை ... அடையாளம் அற்றவனாக்கியது .... என்னை தொலைத்து உன்னை தேடுகிறேன் ....!!! நீ கண் சிமிட்டும் நேரம் .... ஒவ்வொரு நொடி இறக்கிறேன் நீ கண் மூடினால் ....? + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;831

கண்ணீர் இல்லை ...!!!

காதல் .... தோற்றபின் பூக்கள்  மட்டும் வாடுவதில்லை .... அலைந்த வண்டும் தான் ....!!! மாதுவை இழந்தேன் .... பரவாயில்லை .... மதுவும் உன்னைப்போல் .... சிற்றின்பம் தான் ....!!! என் கண்கள் .... அழ மறுக்கிறது .... வேறொன்றும் இல்லை ... கண்ணீர் இல்லை ...!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;830

வில்லங்கப்படுகிறேன்....!!!

விரும்பாததை .... விரும்பி .... வில்லங்கப்படுகிறேன்....!!! நீ என்னை பிரிந்து .... கை கழுவி விட்டாய் .... கவிதை தேவதை .... கை கொடுக்கிறாள் ....!!! என்  வாழ்க்கைக்கும் ... மரணத்துக்கும் .... காரணம் காதல் .....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;829

இதயம் எங்கே .....?

உன்னில்....  அழகான கண் .... இருக்கிறது ..... இதயம் எங்கே .....? உன்னிடமிருந்து ... என்னை எடுத்துவிடு .... என்னிடமிருந்து .... உன்னை எடுக்கவே .... முடியாது .....!!! காதல் கலகலப்பில் ... தொடங்கி .... சலசலப்பில் ... முடிந்து விட்டது .....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;828