இடுகைகள்

கே இனியவன் - கஸல் 104

உன் கண்ணால் காதல் கோலம் போடுகிறாய் -நான் அதற்கு வர்ணம் திட்டுகிறேன் காதலில் பூக்கள் சிரித்ததை விட வாடியதுதான் அதிகம் உனக்கு நான் காதலன் உறவு நீ எனக்கு என்ன உறவு ....? + கே இனியவன் - கஸல் 104

கே இனியவன் - கஸல் 101

நீ வைரக்கல் மின்னுவதில் அழகாய்  கொல்லுவதில்.... விஷமாய் இருகிறாய் ...!!! உன்னை சந்தித்தது சூரிய உதயம் ... உன்னை பிரிந்தது .... சூரிய அஸ்தமனம் ....!!! நீ என்னை விட்டு விலகமுன் உன் எண்ணங்களை ... என்னிலிருந்து விலக்கிவிட்டு ... செல் உயிரே ....!!! + கே இனியவன் - கஸல் 101

கே இனியவன் - கஸல் 102

நீ வானவில்  நான் இரவு  எப்படி உன்னை  நான் பார்ப்பது ...? கவிதை எழுதும் போது  கற்பனை வரவில்லை  என்றால் -உன்னை  நினைப்பேன்  நான் இறக்கவே  மாட்டேன்  என் இதயம் -உன்  இதயத்துக்குள்  மறைத்து வைத்திருக்கிறேன்  + கே இனியவன் - கஸல் 102

கே இனியவன் - கஸல் 103

நீ சிந்திவிடாத கண்ணீரை உனக்கும் சேர்த்து நானே சிந்துகிறேன் ....!!! என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் தெருவிபத்து உன்னை நான் தெருவில் பார்த்தது என் தூக்கத்தை.... கனவு கலைக்கிறது... என் வாழ்கையை ... நீ கலைக்கிறாய் ....!!! + கே இனியவன் - கஸல் 103

கே இனியவன் - கஸல் 100

நீ வெயிலா மழையா சொல்லிவிட்டு போ...? நான் சிலந்திபோல் உன் நினைவுகளால் வலைபின்னுகிறேன் நீயோ - சிலந்தியாய்  என்னை விழுங்குகிறாய் நான்  மரணத்திலிருந்து தப்பிவிட்டேன் ... உன் வலியில் இருந்து தப்ப முடியவில்லை ....!!! + கே இனியவன் - கஸல் 100

கே இனியவன் - கஸல் 99

இப்போது நான் கல்லூரிக்கு போவதில்லை -நீ கல்லறைக்கு எப்படி ..? போவது என்று .... பயிற்சி எடுக்கிறேன் ....!!! என் கையெழுத்தில் முதல் எழுத்தே -உன் எழுத்தாக மாறிவிட்டது....!!! என் கவிதையை .... இரக்கம் இல்லாமல் ... எரித்து விட்டாய் .... எறிந்த சாம்பல் கூட என்மீதிவிழுந்து -உன் நாமத்தையே உச்சரிக்கிறது ....!!! + கே இனியவன் - கஸல் 99

கே இனியவன் - கஸல் 98

நீ யாழ் வாசித்திருந்தால் என் ஊரின் பெயரில் உன்னை அழைத்திருப்பேன்... நீயோ காளியாய் இருகிறாய் ....!!! இசையில் அருமையான இனிமைகள் இருக்க -என்னை சோககீதம் பாட சொல்லுகிறாய்.... சோகம்தான் உனக்கு சொத்தோ ...? காதல் இசையை போன்றது தன்னை மறந்து சிரிக்கவும் செய்யும் -அழவும் செய்யும்....!!! + கே இனியவன் - கஸல் 98

கே இனியவன் - கஸல் 97

குற்றுயிரும் ... குறை உயிருமாய் .... வைத்திய சாலையில்.... இருக்கிறேன் -உன் கண்பட்டதால் ...!!! நான் காதலில் கர்ணனாக இருக்கிறேன் -நீ கண்ணனாக வந்து காதலை தானம் கேட்கிறாய்....!!! காதலுக்கு இன்பமாக கட்டிய காவியக்கட்டிடம் எங்கே உள்ளது ...???  + கே இனியவன் - கஸல் 97

கே இனியவன் - கஸல் 96

என்  மனம் உன் பார்வையால்.... உடைந்து சுக்குநூறாகி விட்டது .... கவலைப்படவில்லை...... உடைத்தது நீ.....!!! என்  காதலில் மின் சுழற்சியில் வருவதுபோல் வருகிறாய் எப்போது நிரந்தரமாக‌ வரப்போகிறாய் ...? உன்  அன்பு உன்னையும் கடந்து என்மீது பட்டதால்தான் இந்தவலி....!!! + கே இனியவன் - கஸல் 96

கே இனியவன் - கஸல் 95

காதல்  புற்கலாக‌... வளர்கின்றேன் ... பசுவாக‌ நின்று.... மேய்கிறாய்.....!!! கண்சிமிட்டும் நேரம் பார்த்துவந்தாய் புகைப்படமாக‌ உன்னை வைத்திருக்கிறேன் இதயத்தில் கண்ணில்....!!! உன்னை இனிபார்க்க‌ துடிக்க‌ மாட்டேன் இதயத்தில் இருகிறாய் .... வெளியேறும் வரை .... நீயே என்னை பார் ....!!! + கே இனியவன் - கஸல் 95

கே இனியவன் - கஸல் 94

நான் காதலின் பிறப்பிடம் .... நீயோ மறைவிடம் ...!!! நீ வராவிட்டால் எனக்கென்ன -உன் நினைவோடு போவேன் வாழுவேன் காதலின் உச்சத்தை அடைவேன் ...!!! காதலால் அறிஞனாகியவனும் ... அசிங்கபட்டவனும் ... இருக்கிறார்கள் ....!!! + கே இனியவன் - கஸல் 94

கே இனியவன் - கஸல் 93

என்  இதயத்தில் - உன்  எண்ணங்களால்.. கூடு காட்டுகிறேன் ...!!! நீ என் இதயத்தில் .. வந்து போவதுதான் .. என் உயிர் மூச்சு ... அதுதான் வந்து வந்து ... போகிறாயோ ...? நான்  பொறுப்பில்லாதவன் ... பொறுமையில்லாதவன் ... உன்னை கண்டபின் ... மற்றவர்களுக்கு .... வழிகாட்டியாக இருக்கிறேன் ...!!! + கே இனியவன் - கஸல் 93

கே இனியவன் - கஸல் 92

உடலாக இருந்தேன்  உன் நினைவுகளால்  எழும்பாகி விட்டேன் ....!!! உன்  வாழ்க்கைக்காக...  என் வாழ்க்கையை ... தானமாக தருகிறேன் ... பிழைத்து கொள் ...!!! காதலுக்கு காதலி  தேவையில்லை  நினைவுகள் போதும்  என்கிறாய் -நான்  என்ன செய்ய ....??? + கே இனியவன் - கஸல் 92

கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 871

உன்னை  நினைக்கும்போது ..... கண்ணீராய் வந்தாலும்  ஏற்றுகொள்வேன்..... அப்படியென்றாலும் ... என்னோடு வருகிறாய் ....!!! என் கண்ணீர் இருக்கும் .... உன்னை பற்றிய கவிதை .... எழுதிக்கொண்டே இருப்பேன் ...!!! நீ  ரொம்ப புத்திசாலி ... இதய கதவை பூட்டி .... சாவியையும் வைத்திருகிறாய் ... யாரும் நுழைய கூடாது .... என்பதற்காக ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 871

கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 866

காதல் மழையில் ... நனைய வந்தேன் -நீயோ ... காதல் நெருப்பாய் ... இருகிறாயே ....!!! என்னை நீ வேண்டுமென்றே .... காயப்படுத்துகிறாயா ...? காயப்படுதுவத்தில் .... இன்பம் காணுகிறாயா ...? தயவு செய்து என் முகவரியை கொடு .... நானும் வாழ ஆசைப்படுகிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 866