இடுகைகள்

முள்ளில் மலர்ந்த பூக்கள் 13

என் ...... கவிதைகளை ... வலிமையாக்க -நீ இன்னும் வலிகளை.... தந்துவிடு .....!!! உன்னை காதலிப்பதும் ..... மணல் வீடு கட்டுவதும் ..... ஒன்றுதான் .....!!! யார் சொன்னது ... காதலுக்கு கண் இல்லை ... என்று - அப்போ கண்ணீர் .... எப்படி வருகிறது ....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AC 1013

முள்ளில் மலர்ந்த பூக்கள் 12

அடுத்த .... ஜென்மத்தில் .... காதலிபப்தற்காக .... இந்த ஜென்மத்தில் .... வலிகளை தருகிறாள்....!!! கண்களால் சித்திரம் .... வரைந்தவள் ..... கண்ணீரால் சித்திரம் .... வரைய வைக்கிறாள் ....!!! காதலுக்காக ... நமக்குள் நாமே .... காதல் செய்வோம் .... காதல் என்றாலும் .... இன்புறட்டும் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை  K இ K - A 0AB 1012

முள்ளில் மலர்ந்த பூக்கள் 11

காதலித்தால் .... மனிதனாகலாம் .... அவள் காதலோடு .... இருந்தால் ....!!! நானும் ...... பாவத்தை .... சுமக்கும் சிலுவை .... நாதன் தான் ..... அவள் வலியை .... சுமக்கிறேன் .....!!! அவளிடம் .... காதல் நிறைந்து .... இருக்கிறது ... அவள் வீட்டில் .... காசு நிறைந்திருகிறது ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AA 1011

முள்ளில் மலர்ந்த பூக்கள் 10

உன் சிரிப்பு ... மற்றவர்களுக்கு ... சிதறும் சில்லறை ... எனக்கு நெற்றி பொட்டுக்காசு.....!!! காதல் இழப்பை கொண்டுவரும் .... உன்னையே இழக்கவைக்கும் ... என்று நினைக்கவில்லை ....!!! என்றோ ... ஒருநாள் நீ என்னை .... திரும்பி பார்ப்பாய் .... அப்போது நான் .... மாலையுடன் இருப்பேன் ... உயிரோடு இருக்கமாட்டேன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 0AO 1010

முள்ளில் மலர்ந்த பூக்கள் 09

காதலுக்கு கண் ... இல்லை என்பார்கள் .... உனக்கு இதயமே ... இல்லையே....!!! என்னை விட்டு போ .... கவலையில்லை ... என்னையும் கூட்டி ... செல்வதில் உனக்கென்ன ... கவலை ....? நீ என்னருகில் இல்லாத .... போதெலாம் -நான் ஓடாத மணிக்கூடு ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 I 1009

- முள்ளில் மலர்ந்த பூக்கள் 08

உன் நினைவு வலையால் ... சிக்கி தவிக்கும் நான் ... பூச்சி -நீ சிலந்தி கௌவ்வி எடுத்துவிடு ....!!! கடலோர பாதம் ... கரைந்ததுபோல் ... நம் காதலும் ... கரைந்து விட்டது ...!!! நீ எனக்கு பாசக்கயிறா ....? பாசாங்குவேஷக்கயிறா....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 H 1008

முள்ளில் மலர்ந்த பூக்கள் 07

குங்குமம் போல் .... சிவந்த முகத்துடன் .... சிரித்து பேசியவள் .... குங்கும பொட்டோடு ... குனிந்து நிற்கிறாள் ....!!! கொன்றால் பாவம் .... அப்போ என்னை ... காதலால் கொன்றவள் ... நீயும் பாவி .....!!! உன் .. காதல் தோட்டத்தில் ... என்னை சருகாக .... ஏற்றுக்கொள் .... உரமாக என் காதலை .... வளர்க்கிறேன் ....!!!  

முள்ளில் மலர்ந்த பூக்கள் 06

ஆயிரம் முறை .... திரும்பி பார்த்தவள் ... இப்போ .... குனிந்தபடி செல்கிறாள்....!!! பூவை கொடுத்து ... பூவாக வர்ணித்து .... பூவையை காதலித்தேன் .... உதிர்ந்து கொண்டிருக்கிறாள் ....!!! என் கவிதையை .... எல்லோரும் விரும்பவைத்த .... உன் வலிகளுக்கு நன்றி ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 F

முள்ளில் மலர்ந்த பூக்கள் 05

நீ ரெம்ப அழகு .... காதலையும்  அழகாக .... மாற்றிவிடு ....!!! இறைவன் செய்த .... மகா தவறு .... எனக்கு காதலையும் ... உனக்கு அழகையும் .... கொடுத்தது ....!!! ஆணை தும்பிக்கையால் .... தலையில் மண் .... வாரிப்போட்டதுபோல் ... நான் உன் மேல் வைத்த ... நம்பிக்கையால் காதலித்து ... அவஸ்தை படுகிறேன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 00 E

முள்ளில் மலர்ந்த பூக்கள் 04

என்னவளை ... அழகாக படைத்த .... இறைவன் .... காதல் இல்லாமல் .... படைத்துவிட்டான் ....!!! என் ... கவிதைகள் ... கள்ளியில் உள்ள முற்கள் .... நீ காதலித்தால் ... முற்கள் பூவாகும் ....!!! காதல் இல்லாமல் .... யாரும் இருக்க முடியாது .... பிரம்மனின் படைப்பு ... பிழைக்காக இருக்காது ...!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 00 D

முள்ளில் மலர்ந்த பூக்கள் 03

நீ தோளில் ... சாய்ந்த போது.... இதயம் சுமையை .... இறக்கியது ...!!! ஒற்றை சிறகோடு ... பறக்க சொல்கிறாய் ... உனக்காக அதையும் ... முயற்சிக்கிறேன் .....!!! நம் காதல் .... கண்பட்டுவிட்டது .... சிதறு தேங்காய் போல் ... உடைந்து விட்டது ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 C

முள்ளில் மலர்ந்த பூக்கள் 02

உன் எடையை ... காட்டிலும் என் எடை ... அதிகம் ... உன் வலியையும்.... சுமப்பதால் .....!!! காதல் ... தோல்வியே இல்லை .... நினைவுகளோடு .... வாழ்பவனுக்கு .....!!! நான் கிழிந்த காற்றாடியல்ல ... விழுந்த காற்றாடி ..... உன் மூச்சுக்காற்று .... போதும் நான் பறப்பதற்கு .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 00 B

முள்ளில் மலர்ந்த பூக்கள்

எல்லாமே ... கடந்துபோகும் .... நீ மட்டும் ... விதிவிலக்கா ....? ஆயிரம் காலத்து .... பயிர் -திருமணம் .... காதலின் ஆயிரம் .... நினைவுகளை .... கொன்று நிறைவேறும் ...!!! வாழ்க்கை ஒரு .... நாடக மேடை .... காதலர் .... விட்டில் பூச்சிகள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 00 A 

கே இனியவனின் 1000 வது கஸல்

நீ சொன்ன ஒரு வார்த்தை....  ஆயிரம் கஸல் கவிதையை ... தோற்றிவிட்டது ....!!! சுதந்திர பறவைகளை ... திறந்த சிறைச்சாலைக்குள் .... அடைத்துவிடும் .... காதல் ......!!! இதயங்களை .... இணைக்கும் .... சங்கிலி -காதல் ... துருப்பிடிக்காமல் .... பார்த்துக்கொள் .....!!! முள் மேல் பூ அழகானது ..... என் இதயத்தில் பூத்த .... முள் பூ நீ ................!!!! நீ காதலோடு...... விளையாட வில்லை .... என் மரணத்தோடு ..... விளையாடுகிறாய் ......!!! ^ இது எனது 1000 கஸல் இத்தனை காலமும் ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உளமான நன்றி ^ அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன் ^ " முள்ளில் மலரும் பூக்கள் "         கஸல் கவிதை

கவிப்புயல் இனியவன் கஸல் - 999

மோகத்தால் ... வரும் சோகத்தை .... விட்டில் பூச்சியிடம் ... கற்று கொண்டேன்....!!! என் இதயம் ... எப்போதெல்லாம் .... கலங்குகிறதோ.... அப்போதெலாம் .... கவிதையாய் வருகிறாய் ...!!! என்  ஒவ்வொரு வலியும்.... உனக்கு எழுதும் .... காதல் கவிதை ....!!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 999