இடுகைகள்

சமுதாய முன்னேற்றம்

சமுதாய முன்னேற்றம் ஒரு சாண் ஏறினால் சமூக சீரழிவு முழம் கணக்கில் ஏறுதடா .......!!! ^^^^^ எவனொருவன் வாழும் காலத்தில் அநீதிக்கு துணை போகிறானோ ... இவர்கள் தான் இறக்கும் முன்னே தமக்கு தாமே புதைகுழி தோண்டுபவர்கள் ....!!! ^^^^^ காதலுக்கு .......................இளமை அனுபவத்துக்கு ........... முதுமை பண்பாட்டுக்கு............... பழமை நட்புக்கு............................தோழமை வாழ்க்கை துன்பம்........ வழமை முன்னேற்றதுக்கு.......... திறமை அளவான இன்பம்.......... இனிமை மீறிய இன்பம்..................சிறுமை &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

காதல் கஸல் கவிதை 1050

உன் தலை குனிவின் ..... அர்த்தமென்ன.... வெட்கமா....? வெறுப்பா.....? காதலால்..... கோலம் போடும் .... போதெல்லாம்....... கண்ணீரால்....... அழித்துவிடுகிறாய்......!!! காதலை... மறைத்து மறைத்து.... வைத்தே மறைந்து.... போய்விட்டாய்......!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1050 கவிப்புயல் இனியவன்

துடிக்கவும் வைக்கணும்.....!!!

இதயத்தின் வேலை ..... துடிப்பது மட்டுமல்ல.... துடிக்கவும் வைக்கணும்.....!!! எவ்வளவு தான் .... உன்னை சுற்றி வந்தாலும்.... நிமிட முள் போல்...... நீதான் முந்திக்கொண்டு செல்கிறாய் என்னை ...... கவனிக்காமல்.......!!! இதயத்துக்குள்..... காதல் யாரையும் கேட்டு..... வருவதில்லை...... அப்புறம் எதற்கு...... போகும்போது கவலைப்படுகிறீர்கள் ......!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1049 கவிப்புயல் இனியவன்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம் ------------------------------------------------------- பலருக்கு கஸல் கவிதை என்றால் என்ன ...? என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது .அதை புரியாமல் வாசித்தால் இந்த கவிதையில் சுவாரிஸம் இருக்காது . பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் ) இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும் ( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும் மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது . அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-) 3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் .... உதாரணத்துக்கு ஒரு கவிதை ----- வலமிருந்து .... இடமாக காதல் ... தேவதையை சுற்றி .... வரவேண்டும் .....(+) நம் காதல் தோஷம் .... இடமிருந்து வலமாக .... சுற்றுகிறேன் .......!!!(-) -----  01 வாடி விழும் பூவின் .... நெத்து மரமாகி .... மீண்டும் பூக்கும் ...(+) நீ  வாடித்தான் .... விழுந்தாய் ...... பூவின் மென்மை கூட ..... உன்னில் இல்லை ....!!!(-...

முள்ளில் மலரும் பூக்கள் 1048

நீயும் காதல்...... சிறகு கொண்ட பறவை..... பருந்தல்ல...... என்னோடு பறந்து வர..... தயங்குகிறாய்.....!!! காதலில் அதிகமாக எரியாதே.... சாம்பலாகி விடுவாய் உலகம் ஊதியே மறைத்து.... விடும்............!!! காதலை .... உண் - உன் காதல்..... நம் காதல் ஆகிவிடும்....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1048 கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலரும் பூக்கள் 1047

காதலில் நான் ...... மூலவேர் - நீயோ..... இலை ஒரு நாள்..... உதிர்ந்து விழுவாய்........!!! நீ பனிக்கட்டியில் உருவாகிய..... கப்பல் தெரியாமல் உன்னில்...... பயணம் செய்துவிட்டேன்.......!!! என் காதல் தீபமே........ உன்னை அணைத்தேன்........ அணைந்தே விட்டாயே......!!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலர்ந்த பூக்கள் 1046

இதயத்தை சிதைப்பது ..... எப்படியென்பதை ..... உன்னிடம் .... கற்று கொள்ளப்போகிறேன் ......!!! காதலர் தினத்தை ..... கொண்டாடும் காதலர்களே ...... காதல் தோல்விக்கு ..... எப்போது நாள் .....? உன்னிடம் காதலை ..... சொல்லாமல் விட்டிருந்தால்..... சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை - 1046 ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர் காதல் கவி நேசன் இனியவன்

முள்ளில் மலர்ந்த பூக்கள் 1045

நீ  யாருக்காகவோ .... பிறந்தவள் என்றாலும் ..... நான் .... உனக்காக பிறந்தவள் ....!!! காதல் தோல்வி .... கண்டவர்களின் ..... பட்டியலில் என் ... பெயர்தான் முதல் ..... நீயும் தப்பமுடியாது .....!!! காதலுக்கு .... அழகழகான முகமூடி .... விற்பவள் - நீ ........!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை  ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர்  காதல் கவி நேசன்  இனியவன்

முள்ளில் மலரும் பூக்கள் 1044

நான்.... காற்றில் ஆடும் பட்டம்..... உன் கையில் நூல்.... என்ன வேண்டும் என்றாலும்..... நீ தான் முடிவெடு.......!!! காட்டுக்குள்.... தனியாக கண்ணை கட்டி .... விட்டவனைபோல்.... உன்னை பிரிந்த பின் ..... நிற்கிறேன்...... நீ தான் காப்பாற்ற வேண்டும்.....!!! உன்னோடு அலைந்த நாட்கள்.... மண்ணோடு மறையும் வரை.... தந்தவள் நீ.............!!! முள்ளில் மலரும் பூக்கள் கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 1044

முள்ளில் மலரும் பூக்கள் 1043

நீ.... பூப்போல் ..... பேசிய வார்த்தைகள்.... இப்போ புண்ணாய்..... மாறுகிறது.......!!! காதலால் காலனை...... சந்தித்தவன் நான்...... வீசு பாசக்கயிறை...... மார்கண்டேயன் நான்.....!!! காதல் கண்ணீரில்...... நீச்சல் அடிக்க வைச்சவள்..... அப்போதும் உன் காதல்..... கரை தெரியவில்லை.......!!! & முள்ளில் மலரும் பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1043

முள்ளில் மலர்ந்த பூக்கள் 42

மின்னலை பார்த்தால் ..... கண் கெட்டுவிடும் .... என்  கண்ணில் நீ .... பட்டாய்     நான் ....... பட்டுவிட்டேன் ....!!! மதுவை விட போதை நீ ..... மது உயிரை குடிக்கும் .... நீயோ............ உயிரை வதைக்கிறாய் .....!!! காதலை ..... ஆரம்பித்ததும் நீ .... முடித்ததும் நீ ...... நான் என்ன பாவம் .... செய்தேன் ......? & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1042

முள்ளில் மலர்ந்த பூக்கள் 41

காதல் ஒரு .... மந்திர உலகம் ..... சிரிப்பில் தோன்றி .... கண்ணீரில் முடியும் ....!!! பேசாமல் இருந்தபோது .... காதல் இனித்தது .... பேசினாய் - காதல் ..... வெறுத்து விட்டது ......!!! உன்னை கண்ணில் ..... தேடுகிறேன் .... நீ கண்ணீரில் வந்து ..... போகிறாய் ......!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1041

முள்ளில் மலர்ந்த பூக்கள் 1040

கடல் ...... கரையில் இருந்து .... அக்கரையை பார்க்கும் .... போது நிலமும் வானமும் .... முத்தமிடும் ..... நம் காதலை போலவே ..... எல்லாம் மாயை ......!!! பூவில் ..... இருக்கும் தேனும் ..... பூவின் கீழ் இருக்கும் .... முள்ளும் நீதான் ..... எப்படி போடுகிறாய் .... வேஷம் ......? கடல் கரையில் .... தோன்றிய நம் காதல் .... அலைபோல் வந்து வந்து .... போகிறது .......!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1040

முள்ளில் மலர்ந்த பூக்கள் 39

சிரிப்பதற்கும் .... அழுவதற்கும் ... சிறந்த பயிற்சி .... காதல் ................!!! துணிந்து .... செல் வெற்றி .... என்கிறது உலகம் .... காதலை தூக்கி .... எறிகிறது...........!!! நான் ... முறிந்து விழுந்த மரத்தில் ... ஈரம் உள்ளவரை ..... துளிர் விடுவேன் .....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1039

இனியவன் கஸல் கவிதை 142

கப்பல் கனமாக .... இருந்தாலும் ..... தண்ணீரில் .... தள்ளாடும் ..... காதல் கனமாக .... இருந்தாலும் .... கண்ணீரில் .... தள்ளாடும் .....!!! நம் காதலுக்கு .. கண் தான் விதை .. கண்ணீர் தான் ... பாசனம் .....!!! பூவின் மீது .... வண்டுக்கு மோகம் .... பூவுக்கும் இருந்தால் .... இன்பம் .... வாடிய பூவில் ..... என்னபயன் .....? & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 142