இடுகைகள்

முடிவுரையும் நீ ......!!!

என் கவிதையில் .... முதல் வரியும் நீ முதன்மை வரியும் நீ முடிவுரையும் நீ ......!!! நீ தூக்கி எறிந்தது ..... ரோஜா இல்லை ..... இதயத்தின் மறு..... வடிவத்தை ..............!!! வெறுமையாக ...... பிறந்து சுமையோடு .... சாக வைக்கும் ..... காதல் ..............!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1057 கவிப்புயல் இனியவன்

உன் திருமண மாலையில் ....

உன் திருமண மாலையில் .... நினைவுகளாய் மணக்கும் ... நார் - நான் .......!!! என்னை உன்னிடம் ... இருந்து பிரிக்க முடியாது .... நீ இதயத்தில் அல்லவா ..... இருக்கிறாய் .......!!! உன் முகத்தை மூடி வை .... என் இதயம் வெளியே ..... நடமாடப்போகிறது ......!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1055 கவிப்புயல் இனியவன்

காதல் கஸல் கவிதை 1055

என் தப்பு தான் -என் கவிதைகள் உனக்கு .... புரியும் என்று நான் .... புரிந்தது தவறுதான் .....!!! நீ என்னை பற்றி .... ஏதும் சொல்லு கவலை .... இல்லை கவிதையை ..... காயப்படுத்தாதே .......!!! நான் மின் ஒளி .... நீ எண்ணெய் விளக்கு .... என்றாலும் ...... நீ புனிதமானவள் ........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1055 கவிப்புயல் இனியவன்

காதல் கஸல் கவிதை 1052

சொற்களால் .... கவிமாலை தொகுக்கிறேன் ..... நீ இதழ்களாய் உதிர்கிறாய் ....!!! உன் புன்னகை அவ்வளவு .... கொடுமையா ......? இதயத்தில் ஒளியே .... இல்லாமல் போகிட்டுதே ....!!! நீ என்னை நோக்கி வருகிறாய் ..... என் இதய கதவு தானாக முடுக்கிறது .....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1052 கவிப்புயல் இனியவன்

காதல் கஸல் கவிதை 1054

காதலில் தோற்றவர்கள் ..... காதலை விமர்சிக்க .... கூடாது ....................!!! நீ  மின்னலுக்கு ...... பிறந்தவள் .... இதயத்தை கருக்கி ..... விட்டாய் ...............!!! நீ  நாணத்தால் தலை ..... குனிகிறாய் என்று ..... நினைத்தேன் ........ காதல் நாணயம் ..... இல்லாமல் குனிந்து ... இருக்கிறாய் ........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1054 கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதைகள்

மரமாக இருந்தபோது .... நிம்மதியாக இருந்தேன் ..... பலகை ஆகினேன்..... படாத பாடு படுகிறேன் .....!!! அடை மழைக்கு..... கிழிந்த குடைக்கும்.... மதிப்பிருக்கும்........!!! சேர்ந்த செல்வம் .... கரைகிறது ...... தண்ணீரை ..... வீணாக்கியதால்.......!!! & சமுதாய கஸல் கவிதைகள் கவிப்புயல் இனியவன் 2016 . 11 . 12

கவிப்புயலின் சமுதாய கஸல்

படம்
ஓலை வீடு .... வறியவனுக்கு வசிப்பிடம் .... செல்வந்தனுக்கு வாடி வீடு .....!!! வியர்வை .... உழைப்பாளிக்கு நாற்றம் ..... முதலாளிக்கு துற நாற்றம் .....!!! உழைப்பு முழுதும் .... செலவு  செய்தால் ..... ஊதாரி என்கிறார்கள் .... செலவு செய்தது .... உணவுக்கு மட்டும் .....!!! & சமுதாய கஸல் கவிதைகள் கவிப்புயல் இனியவன் 2016 . 11 . 12

காதல் கஸல் கவிதை 1051

எதிரும் புதிருமாய் ..... காதலில் பேசினாய் .... நீரும் நெருப்புமாய் .... அணைந்துவிட்டோம் ....!!! முள்ளும் மலருமாய் ..... உன் நினைவுகள் ..... இரவும் பகலும் ..... வந்து கொல்கிறது.........!!! வாழ்க்கை மேடு பள்ளம் தான் .... அதற்காக பள்ளத்திலேயே ..... வாழ்வதா ......? &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1051 கவிப்புயல் இனியவன்

சமுதாய முன்னேற்றம்

சமுதாய முன்னேற்றம் ஒரு சாண் ஏறினால் சமூக சீரழிவு முழம் கணக்கில் ஏறுதடா .......!!! ^^^^^ எவனொருவன் வாழும் காலத்தில் அநீதிக்கு துணை போகிறானோ ... இவர்கள் தான் இறக்கும் முன்னே தமக்கு தாமே புதைகுழி தோண்டுபவர்கள் ....!!! ^^^^^ காதலுக்கு .......................இளமை அனுபவத்துக்கு ........... முதுமை பண்பாட்டுக்கு............... பழமை நட்புக்கு............................தோழமை வாழ்க்கை துன்பம்........ வழமை முன்னேற்றதுக்கு.......... திறமை அளவான இன்பம்.......... இனிமை மீறிய இன்பம்..................சிறுமை &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

காதல் கஸல் கவிதை 1050

உன் தலை குனிவின் ..... அர்த்தமென்ன.... வெட்கமா....? வெறுப்பா.....? காதலால்..... கோலம் போடும் .... போதெல்லாம்....... கண்ணீரால்....... அழித்துவிடுகிறாய்......!!! காதலை... மறைத்து மறைத்து.... வைத்தே மறைந்து.... போய்விட்டாய்......!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1050 கவிப்புயல் இனியவன்

துடிக்கவும் வைக்கணும்.....!!!

இதயத்தின் வேலை ..... துடிப்பது மட்டுமல்ல.... துடிக்கவும் வைக்கணும்.....!!! எவ்வளவு தான் .... உன்னை சுற்றி வந்தாலும்.... நிமிட முள் போல்...... நீதான் முந்திக்கொண்டு செல்கிறாய் என்னை ...... கவனிக்காமல்.......!!! இதயத்துக்குள்..... காதல் யாரையும் கேட்டு..... வருவதில்லை...... அப்புறம் எதற்கு...... போகும்போது கவலைப்படுகிறீர்கள் ......!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1049 கவிப்புயல் இனியவன்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம் ------------------------------------------------------- பலருக்கு கஸல் கவிதை என்றால் என்ன ...? என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது .அதை புரியாமல் வாசித்தால் இந்த கவிதையில் சுவாரிஸம் இருக்காது . பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் ) இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும் ( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும் மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது . அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-) 3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் .... உதாரணத்துக்கு ஒரு கவிதை ----- வலமிருந்து .... இடமாக காதல் ... தேவதையை சுற்றி .... வரவேண்டும் .....(+) நம் காதல் தோஷம் .... இடமிருந்து வலமாக .... சுற்றுகிறேன் .......!!!(-) -----  01 வாடி விழும் பூவின் .... நெத்து மரமாகி .... மீண்டும் பூக்கும் ...(+) நீ  வாடித்தான் .... விழுந்தாய் ...... பூவின் மென்மை கூட ..... உன்னில் இல்லை ....!!!(-...

முள்ளில் மலரும் பூக்கள் 1048

நீயும் காதல்...... சிறகு கொண்ட பறவை..... பருந்தல்ல...... என்னோடு பறந்து வர..... தயங்குகிறாய்.....!!! காதலில் அதிகமாக எரியாதே.... சாம்பலாகி விடுவாய் உலகம் ஊதியே மறைத்து.... விடும்............!!! காதலை .... உண் - உன் காதல்..... நம் காதல் ஆகிவிடும்....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1048 கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலரும் பூக்கள் 1047

காதலில் நான் ...... மூலவேர் - நீயோ..... இலை ஒரு நாள்..... உதிர்ந்து விழுவாய்........!!! நீ பனிக்கட்டியில் உருவாகிய..... கப்பல் தெரியாமல் உன்னில்...... பயணம் செய்துவிட்டேன்.......!!! என் காதல் தீபமே........ உன்னை அணைத்தேன்........ அணைந்தே விட்டாயே......!!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலர்ந்த பூக்கள் 1046

இதயத்தை சிதைப்பது ..... எப்படியென்பதை ..... உன்னிடம் .... கற்று கொள்ளப்போகிறேன் ......!!! காதலர் தினத்தை ..... கொண்டாடும் காதலர்களே ...... காதல் தோல்விக்கு ..... எப்போது நாள் .....? உன்னிடம் காதலை ..... சொல்லாமல் விட்டிருந்தால்..... சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை - 1046 ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர் காதல் கவி நேசன் இனியவன்