இடுகைகள்

என்னை எடுத்து விடு ....!!!

நீ கானல் நீர் .... உன்னை துரத்தும் .... கலை மான் நான் ....!!! என்னை இதயத்தில் வைத்து மூச்சு திணறுகிறாய் .... முடியாவிட்டால் .... என்னை எடுத்து விடு ....!!! கருத்தை பிரித்த ..... எழுத்தைப்போல் .... சடப்பொருளாய் .... நான் வாழ்கிறேன் ....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1060 கவிப்புயல் இனியவன்

கண்ணீர் விட்டு வளர்க்கிறேன் .....!!!

நீ தந்த காதல் மலரை கண்ணீர் விட்டு .... வளர்க்கிறேன் .....!!! நீ என் இதய தேன்.... கூட்டில் ராணி தேனீ .... உனக்கும் சேர்த்து .... தேன் தருகிறேன் .... போதையில் மயங்கி .... என்னை மறந்து விடாதே ....!!! உன்னால் இறந்த ..... காலத்தில் வாழ்கிறேன் ..... நிகழ் கால இன்பத்தை ..... தொலைத்து விட்டேன் ....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1059 கவிப்புயல் இனியவன்

விரைவாக சொல் ....!!!

நீ தீ பந்தமா ....? தீபமா .....? விரைவாக சொல் ....!!! வாடி விழுத்த .... பூவின் காம்பில் .... மீண்டும் பூப்பதில்லை .... காம்புக்கு பூவினால் காதல் தோல்வி .......!!! காதல் பாதையில் ...... நீ குறுக்கு பாதையா ...? நீண்ட பாதையா ....? & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1058 கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதை

வெற்றியின் பாதையை இலகுவாக ..... கடந்துவிடடேன் ......(+) இப்போது தான் .... புரிந்தது பாதையை  .... முதலில் யாரோ .... போட்டு விட்டான் .....(-) கஞ்சி சலவையில் துணியை .... வெண்மை ஆக்கிறது...... ஏழையின் வயிறை ..... நிரப்புகிறது ...............!!! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 

முடிவுரையும் நீ ......!!!

என் கவிதையில் .... முதல் வரியும் நீ முதன்மை வரியும் நீ முடிவுரையும் நீ ......!!! நீ தூக்கி எறிந்தது ..... ரோஜா இல்லை ..... இதயத்தின் மறு..... வடிவத்தை ..............!!! வெறுமையாக ...... பிறந்து சுமையோடு .... சாக வைக்கும் ..... காதல் ..............!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1057 கவிப்புயல் இனியவன்

உன் திருமண மாலையில் ....

உன் திருமண மாலையில் .... நினைவுகளாய் மணக்கும் ... நார் - நான் .......!!! என்னை உன்னிடம் ... இருந்து பிரிக்க முடியாது .... நீ இதயத்தில் அல்லவா ..... இருக்கிறாய் .......!!! உன் முகத்தை மூடி வை .... என் இதயம் வெளியே ..... நடமாடப்போகிறது ......!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1055 கவிப்புயல் இனியவன்

காதல் கஸல் கவிதை 1055

என் தப்பு தான் -என் கவிதைகள் உனக்கு .... புரியும் என்று நான் .... புரிந்தது தவறுதான் .....!!! நீ என்னை பற்றி .... ஏதும் சொல்லு கவலை .... இல்லை கவிதையை ..... காயப்படுத்தாதே .......!!! நான் மின் ஒளி .... நீ எண்ணெய் விளக்கு .... என்றாலும் ...... நீ புனிதமானவள் ........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1055 கவிப்புயல் இனியவன்

காதல் கஸல் கவிதை 1052

சொற்களால் .... கவிமாலை தொகுக்கிறேன் ..... நீ இதழ்களாய் உதிர்கிறாய் ....!!! உன் புன்னகை அவ்வளவு .... கொடுமையா ......? இதயத்தில் ஒளியே .... இல்லாமல் போகிட்டுதே ....!!! நீ என்னை நோக்கி வருகிறாய் ..... என் இதய கதவு தானாக முடுக்கிறது .....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1052 கவிப்புயல் இனியவன்

காதல் கஸல் கவிதை 1054

காதலில் தோற்றவர்கள் ..... காதலை விமர்சிக்க .... கூடாது ....................!!! நீ  மின்னலுக்கு ...... பிறந்தவள் .... இதயத்தை கருக்கி ..... விட்டாய் ...............!!! நீ  நாணத்தால் தலை ..... குனிகிறாய் என்று ..... நினைத்தேன் ........ காதல் நாணயம் ..... இல்லாமல் குனிந்து ... இருக்கிறாய் ........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1054 கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதைகள்

மரமாக இருந்தபோது .... நிம்மதியாக இருந்தேன் ..... பலகை ஆகினேன்..... படாத பாடு படுகிறேன் .....!!! அடை மழைக்கு..... கிழிந்த குடைக்கும்.... மதிப்பிருக்கும்........!!! சேர்ந்த செல்வம் .... கரைகிறது ...... தண்ணீரை ..... வீணாக்கியதால்.......!!! & சமுதாய கஸல் கவிதைகள் கவிப்புயல் இனியவன் 2016 . 11 . 12

கவிப்புயலின் சமுதாய கஸல்

படம்
ஓலை வீடு .... வறியவனுக்கு வசிப்பிடம் .... செல்வந்தனுக்கு வாடி வீடு .....!!! வியர்வை .... உழைப்பாளிக்கு நாற்றம் ..... முதலாளிக்கு துற நாற்றம் .....!!! உழைப்பு முழுதும் .... செலவு  செய்தால் ..... ஊதாரி என்கிறார்கள் .... செலவு செய்தது .... உணவுக்கு மட்டும் .....!!! & சமுதாய கஸல் கவிதைகள் கவிப்புயல் இனியவன் 2016 . 11 . 12

காதல் கஸல் கவிதை 1051

எதிரும் புதிருமாய் ..... காதலில் பேசினாய் .... நீரும் நெருப்புமாய் .... அணைந்துவிட்டோம் ....!!! முள்ளும் மலருமாய் ..... உன் நினைவுகள் ..... இரவும் பகலும் ..... வந்து கொல்கிறது.........!!! வாழ்க்கை மேடு பள்ளம் தான் .... அதற்காக பள்ளத்திலேயே ..... வாழ்வதா ......? &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1051 கவிப்புயல் இனியவன்

சமுதாய முன்னேற்றம்

சமுதாய முன்னேற்றம் ஒரு சாண் ஏறினால் சமூக சீரழிவு முழம் கணக்கில் ஏறுதடா .......!!! ^^^^^ எவனொருவன் வாழும் காலத்தில் அநீதிக்கு துணை போகிறானோ ... இவர்கள் தான் இறக்கும் முன்னே தமக்கு தாமே புதைகுழி தோண்டுபவர்கள் ....!!! ^^^^^ காதலுக்கு .......................இளமை அனுபவத்துக்கு ........... முதுமை பண்பாட்டுக்கு............... பழமை நட்புக்கு............................தோழமை வாழ்க்கை துன்பம்........ வழமை முன்னேற்றதுக்கு.......... திறமை அளவான இன்பம்.......... இனிமை மீறிய இன்பம்..................சிறுமை &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

காதல் கஸல் கவிதை 1050

உன் தலை குனிவின் ..... அர்த்தமென்ன.... வெட்கமா....? வெறுப்பா.....? காதலால்..... கோலம் போடும் .... போதெல்லாம்....... கண்ணீரால்....... அழித்துவிடுகிறாய்......!!! காதலை... மறைத்து மறைத்து.... வைத்தே மறைந்து.... போய்விட்டாய்......!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1050 கவிப்புயல் இனியவன்

துடிக்கவும் வைக்கணும்.....!!!

இதயத்தின் வேலை ..... துடிப்பது மட்டுமல்ல.... துடிக்கவும் வைக்கணும்.....!!! எவ்வளவு தான் .... உன்னை சுற்றி வந்தாலும்.... நிமிட முள் போல்...... நீதான் முந்திக்கொண்டு செல்கிறாய் என்னை ...... கவனிக்காமல்.......!!! இதயத்துக்குள்..... காதல் யாரையும் கேட்டு..... வருவதில்லை...... அப்புறம் எதற்கு...... போகும்போது கவலைப்படுகிறீர்கள் ......!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1049 கவிப்புயல் இனியவன்