கவிதையும் வினாவும் விடை தாருங்கள்-02

அவர் வரும்போது .....
கையாட்கள் பலர் .....
கைகூப்புவோர் பலர் ....
செருக்கோடு சிரித்தும் ....
சிரிக்காததுமாய் செல்வார் ....!!!

அடுத்த வேளைக்கு....
உணவுக்காய் அங்கலாக்கும் ....
இவன் வரும்போது ....
போ போ தூரப்போ என்று ....
துரத்தும் கைகள் அதிகம் ....
வறுமையால் பணிவுடன் ...
ஒதுங்குவான் ....!!!

இருவரும் ஒருநாள் ....
ஒரே இடத்தில் சந்திப்பார் ....
கை கூப்பியவரும் துணையில்லை ....
கை விரட்டியவனும் துணையில்லை .....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

இருவரும் சந்தித்த அந்த இடம் எது ...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்