இடுகைகள்

கவிதையும் வினாவும் விடை தாருங்கள்-02

அவர் வரும்போது ..... கையாட்கள் பலர் ..... கைகூப்புவோர் பலர் .... செருக்கோடு சிரித்தும் .... சிரிக்காததுமாய் செல்வார் ....!!! அடுத்த வேளைக்கு.... உணவுக்காய் அங்கலாக்கும் .... இவன் வரும்போது .... போ போ தூரப்போ என்று .... துரத்தும் கைகள் அதிகம் .... வறுமையால் பணிவுடன் ... ஒதுங்குவான் ....!!! இருவரும் ஒருநாள் .... ஒரே இடத்தில் சந்திப்பார் .... கை கூப்பியவரும் துணையில்லை .... கை விரட்டியவனும் துணையில்லை ..... * * * * * * * * * * * * இருவரும் சந்தித்த அந்த இடம் எது ...?

கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்

என்னுயிர் நண்பா ..... உன்னை விட்டு யாரிடம் .... பகிர்வேன் என் உணர்வை ...? மனதிலே துன்பம் வரும்போது ..... என்னோடு இருந்து அழும் ... ஒரே ஜீவன் நீதானே .... இன்பம் வரும்போதும் ... என்னோடு இருந்து .... சிரிக்கும் ஜீவனும் நீதான் ....!!! ஒரே ஒரு கவலை உன்னால் ..... நான் அழும்போது தான் அழுகிறாய் .... நான் சிரிக்கும் போதுதான் சிரிக்கிறாய் .... எப்போது என்னை நீ அழவைப்பாய்....? எப்போது என்னை சிரிக்க வைப்பாய் ...? எப்படி உன்னால் முடிகிறது ...? என் உணர்வுகளை அப்படியே... எனக்கு காட்டுகிறாய் ....? என்மீது கொண்ட கோபத்தால் .... உன்னை அடித்துவிட்டேன் ..... எனது கையில் குருதி .... உனது இதயம் சுக்குநூறாகியது.....!!! * * * * * * * * * * * * * * * * * * * என் அந்த நண்பன் யாராக இருக்கமுடியும் ...?

வலம்புரி நாளிதழில் என் கவிதை

அம்மா கவிதை அம்மா - இறைவனின் உன்னத படைப்பு ....  அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு ....  அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி .....  அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் ....  அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!!  என்று தொடரும் இந்த கவிதை   சென்ற வாரம் 06.09.2015 அன்று யாழ்ப்பாணம் தினசரி பத்திரிகையில் பிரபல பத்திரிக்கை  ஒன்றான வலம்புரி நாளிதழில் " ஈழத்து கவிஞர்கள்   ' பக்கத்தில் பிரசுரித்தார்கள் . மிக்க நன்றி .  இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி  கே இனியவன் 

கொக்குபோல் காத்திருப்பேன் - கஸல்

சாமியை நினைத்ததை .... காட்டிலும் உன்னை .... நினைத்தததே அதிகம் .... வரம் கிடைக்கவில்லை ....!!! காதல் பாவமா ...? புண்ணியமா ...? பிறவி பயனா...? பிறவி துன்பமா ...? எதுவென்று நீ ... சொல்லிவிட்டு போ ....!!! என்றோ ஒருனாள் .... என்னிடம் அகப்படுவாய் ... கொக்குபோல் .... காத்திருப்பேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 850

நீதான் முகவரி மாறிவிடாதே - கஸல்

நான் காதலில் கண்ணாடி நீ கருங்கல் .... அருகில் வர பயமாய் ... இருக்கிறது ....!!! நான் வெறும் கடிதம் நீதான் முகவரி ... மாறிவிடாதே ....!!! கண்ணுக்குள் .... வந்த நீ எதற்கு ...? கண்ணீராய் வடிகிறாய்... அதை பன்னீராய் .... நினைக்கிறேன்....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 849

என்னை வெறுக்கிறேன் - (கஸல்)

உன்னைத்தான் வெறுத்தேன் ஏன்...? என்னை வெறுக்கிறேன் ... காதல் இப்படித்தானோ ..? நீ என் இதயத்தில் .... தூசியாக இருந்துவிடு ... அப்போதும் உன்னை ... துடைத்து எறிய மாட்டேன் ...!!! என் கண்ணீரும் ... கடல் நீரும் ஒன்றுதான் .... அளவற்று இருக்கிறது ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 848

உனக்கும் கண்ணீர்வரும் ....!!!

காதல் வானவில் வந்தது .... ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் .... வானவில்லை ....!!! தண்ணீர் கேட்டால் தரலாம் .... நீயோ வீம்புக்கு காணல் நீர் .... கேட்கிறாய் -சற்று பொறு .... நம்காதல் காயட்டும் .....!!! நான் அழுகிறேன் .... நீயோ வியர்வை என்கிறாய் .... காதலித்துப்பார் அன்பே .... உனக்கும் கண்ணீர்வரும் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;845

நான் வெறும் கூடு

திருவிழாவில் கைவிட்ட .... குழந்தைபோல் நிற்கிறேன் .... எங்கே என்னை விட்டு .... சென்றுவிட்டாய் .....!!! என் கண்ணில் ஏதோ.... குறைபாடு இருக்கிறது .... பார்ப்பதெல்லாம் -நீயாக தெரிகிறாய் .....!!! நான் வெறும் கூடு .... என் இதயமும் நீ மூச்சும் நீ என்னை உண்மையில் கூடாக்கிவிடாதே....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;844

ஆழம் என்று இறங்கினேன்

உன்னிடமும் காதல் இல்லை... என்னிடமும் காதல் இல்லை ..... நம்  காதல் ஊர் முழுதும் .... வாழ்கிறது .....!!! ஒவ்வொரு இளையோருக்கும் .... இரண்டு காலம் உண்டு .... காதலுக்கு முன் ..... காதலுக்கு பின் .....!!! நீ அத்தியாய காதல் கடல் ..... ஆழம் என்று இறங்கினேன் .... வரண்டுபோய் உள்ளது.... உன் காதல் கடல் .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;843

காதல் முகவரியில் நீ

நம் காதல் கண்னில் .... ஆரம்பித்ததால் ..... கண்பட்டு விட்டது .... காயப்பட்டுவிட்டது ....!!! காதலில் நான் .... தொடக்கப்புள்ளி.... நீ வட்டம் ......!!! உனக்கு போட்ட .... காதல் கடிதம் ... எனக்கே திரும்பி .... வந்துவிட்டது .... காதல் முகவரியில் ... நீ இல்லையாம் .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;842

என் கவிதை வேறு....!!!

பகலில் சந்திரன் ... இரவில் சூரியன் ... நம் காதல் நிலை .... இதுதான் ....!!! என்னிடம் கவிதையும் .... உன்னிடம் காதலும் ... என்னபயன் ...? நம்மிடம் காதல் ... இல்லையே......!!! நீ கனவாய் வந்தால் .... என் கவிதை வேறு.... நினைவாய் வந்தால் ... என் கவிதை வேறு....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;841

எரிகிறது காதல் ....!!!

ஆடு புலி ஆட்டம்போல் .... நம் காதல் -நீ அசைத்தால்   ... வெளியேறிவிடுவேன் ....!!! நம் காதல் இறந்துவிட்டது .... நீ கண்ணீர் அஞ்சலி ... செலுத்துகிறாய் ....!!! சந்திரன் என்று .... சூரியனை .... காதலித்துவிட்டேன்.... எரிகிறது காதல் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;840

வறண்ட நதியில் ...

காதலில் நான் சூரிய உதயம் -நீ அந்திவானம் ....!!! வறண்ட நதியில் ... கப்பல் ஓட அலைகிறாய் ... நான் எப்போது காதல் ... மழை பொழியும் ....? காத்திருக்கிறேன் ....!!! உண்மை காதல் என்ற ஒன்று இருக்கவே ... கூடாது என்று நினைத்து ... விட்டாயோ ....? + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;839

என் இதய நரம்பு ....

என் இதய நரம்பு .... முற்களாய் மாறுகிறது .... நீ பூக்களின் மீது .... தூங்குகிறாய் ....!!! என் கண்ணில் நெய் .... இருப்பதாய் நினைகிறாய் .... இப்படி உருக்குகிறாய் ....!!! காதலின் தோல்விக்கு ... தண்டனை -உன்னை தலைகுனிந்து வாழ ... வைப்பதே .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;838   

காயமடைந்து விட்டேன் ....!!!

பூவுக்குள் இருக்கும்... தேன் போல் நீ .... மறைந்திருகிறாய் .... நான் அலைகிறேன் ....!!! கண்ணாம் பூச்சி ... விளையாட்டை .... காதலிலும்..... விளையாடுகிறாய் ....!!! உன் கண்ணோடு.... என் கண் மோதுபட்டு .... காயமடைந்து விட்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;837